தக்காளி வளர்ப்பில் காய் புழு மற்றும் தண்டு புழுக்களை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட வகைகளை கடைபிடிக்கலாம்
1.இந்த வகையான காய்ப்புழு வருவது வரும் சாத்தியக்கூறுகள் இல்லாத அல்லது குறைவாக உள்ள ரகங்களை பயிரிடலாம்.
2.சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு இரண்டு எண்ணிக்கையில் மாலை ஆறு முப்பது முதல் 10 மணி வரை பயன்படூதலாம்.
3.பூச்சி பிடிக்கும் பொறிகளை பயன்படுத்தலாம்.
4.டிரைக்கோகிரம்மா அட்டைகளை கட்டிவிடலாம்
5.பவேரியா பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற உயிரியல் திரவங்களை பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம்.
6.வேப்ப எண்ணெய் 10 லிட்டருக்கு 30 மில்லி கலந்து சீயக்காய் அல்லது சோப்பு கரைசலில் கரைத்து தெளிக்கலாம்
7.மூலிகை பூச்சி விரட்டி எட்டு நாட்களுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
8. இந்தப் புழுக்களை உருவாக்கும் பூச்சி இனங்களை தடுக்கும் வகையிலான பொறி பயிர்களாக கொள்ளு சாமந்தி மக்காச் சோளம் ஆமணக்கு சூரியகாந்தி வெள்ளைச் சோளம் போன்ற பயிர்களை வரப்புகளில் நட்டு வைக்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi