Natural composting method - Grape composting method
ஒரு சுத்தமான மூடியுள்ள பாத்திரத்தில் தோல் நீக்கப்பட்ட கருப்பு திராட்சை உடன் சம அளவு அல்லது 40 சதவீத அளவுள்ள நாட்டு வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டியை தூளாக்கி, இரண்டையும் முறையாக பிணைந்து அல்லது கலக்கி மூடியிட்டு வைக்கவும். பின்பு அந்தப் பாத்திரத்தை பூமிக்குள் தேவையான குழிதோண்டி உள்ளே வைத்து மண் போட்டு மூடி குறைந்தபட்சம் 18 நாட்கள் இருக்குமாறு வைக்கலாம்.
பூமிக்குள் வைக்க வழி இல்லை என்றால் நிழலான இடத்தில், வெப்பம் தாக்காத வகையில் வைக்கலாம். இடையில் திறக்க வேண்டாம்.
18 நாட்கள் ஆன பின்பு மூடியை திறந்து அதிலுள்ள ரசத்தை கொட்டைகள் நீங்குமாறு வடித்து வைத்துக் கொள்ளலாம். இத் திராட்சைப்பழ கரைசல் ஒரு வருடம் வரை கெடாமல் இருக்கும்.
*பயன்படுத்தும் முறை*
வாழை, கொய்யா, பப்பாளி போன்ற பெருக்க வேண்டிய அனைத்து வகை தோட்டக்கலை பழங்களுக்கு,
பழங்கள் பறிக்கும் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு முன்பு இந்த கலவையினை 10 லிட்டருக்கு 100 மில்லி என கலந்து தெளிக்கலாம். பழங்களின் மேல் நன்கு நனையுமாறு தெளிப்பதால் இக் கலவையில் உள்ள பொட்டாசியம் சத்து பழங்களில் நல்ல நிறத்தையும், பளபளப்பான வெளித்தோற்றத்தை கொடுக்கவும் பயன்படும்.
0 Comments
Smart vivasayi