Lemongrass Cultivation Method - To get more profit from lemon trees
வட்டபாத்தியா தெளிவா எடுத்து வெச்சுக்கணும் அடுத்து களைகள் இல்லாம பார்த்துக்கொள்ளவேண்டும் மற்ற இடங்கள்ல இருந்தாலும் பரவாயில்ல மரம் இருக்கிற 6 அடி விட்டதில்லை விட்டத்தில களை இல்லாமல் பார்த்துக்குங்க
மரத்திலிருந்து பாதிக்கப்பட்ட இலைகள் அல்லது காய்கள் அதாவது கருப்புக்காய் , பாதிக்கப்பட்ட பழுப்பு நிறம் ஏறிய காய்கள் , உடைந்தது அது மாதிரியான காய்கள் விழுந்திருந்தாலோ . மாவுப்பூச்சி அல்லது வெள்ளை தாக்கப்பட்ட இலைகள் தண்ணி இருக்ககூடிய இடத்தில விழுந்திருந்தாலோ , அதையெல்லாம் அப்புற படுத்துவது நல்லது
ஒவ்வொரு மாதமும் ஒருதடவையாவது 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனாஸ் அல்லது ட்ரகோடெர்மா விரிடி அல்லது பேசில்லஸ் சாப்ஸ்டில்ஸ் இழையோட முன்னும் பின்னும் முடிந்தளவு செடியோட தண்டு கிளைகள் படுற மாதிரி நல்ல நனச்சுவிட்டு தெளிக்கணும் இதுவே பவுடராக கொடுத்தால் 100 கிரமாக பயன்படுத்தலாம் . இத மாதம் ஒரு முறை செய்யலாம் முடுஞ்சா பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை செய்யலாம்
ஒவ்வொரு மரத்துக்கும் பத்து நாளைக்கு ஒரு முறை அல்லது 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் தந்தால் ஒவ்வொரு தன்னீர்ரோடையும் தரைவழி குறைந்தபாசம் ஜீவாமிர்தமாக இருந்தால் இரண்டு லிட்டர். மீன் அமிலம், இ எம் கரைசல் , பஞ்சகாவியவாக இருந்ததுன்னா குறைந்தபாசம் 20 மில்லி அதிகமாக 50 மில்லி நீரில் கலந்து எலுமிச்சையோட வேர்பகுதியில அதுக்கு கிடைக்கற மாதிரி சுத்தீயிலும் ஊத்தீ விட்டுறனும்
உயிர் உரங்கள் போடுவதாக இருந்தால் அசோஸ் பைரில்லும் 100 கிராம் பாஸ்போ பாக்ட்ரியா 50 கிராம் ஏதாவது பாசனத்துக்கு ஊட கொடுக்கலாம் ஊட்டம் ஏற்றிய தொழு உரம் குறைந்தபச்சம் 2 கிலோ போடுறது நல்லது இத மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதத்துக்கு ஒரு முறை கொடுப்பது நல்லது
ஐந்திலை கஷாயம், பத்துதிலை கஷாயம் , அக்னிஅஸ்திரம் இதுமாதிரியான இயற்கை வழி தெளிப்புகள் இருந்தால் 8 நாட்களுக்கு ஒருமுறை 3 தடவை தெளிக்கலாம் இதனால் சாறுஉறுஞ்சும் பூச்சிகளால் இலை மடங்குவது நின்று தெளிவான இலைகள் கிடைக்கும் இது முக்கியமா தென்மேற்கு பருவமழை முடிந்த மூன்று மாதங்களிலும் ஆகஸ்ட் ,செப்டெம்பர் , அக்டோபர் வடகிழக்கு பருவமழை முடுஞ்ச ஜனவரி, பிப்ரவரி , மார்ச் தெளிக்கிறது நல்லது
மாவு பூச்சி தாக்காமல் இருக்க இந்த மாதிரியான தெளிப்புகளை தொடர்ச்சியாக தெளிக்க வேண்டும் அல்லது உயிர் வழி தெளிப்பா 10 லிட்டருக்கு 50 மில்லி பேவெறிய பேசியான புழுக்களை கட்டுப்படுத்தவும் வெர்டிசீலியும் லக்கானி சாறு உறிஞ்சும் பூச்சிகளுக்காகவும் (மாவு பூச்சி ,அஸ்வினி பூச்சி ) தெளிக்கலாம்
இதை அனைத்தையும் ஓவ்வொரு மாதமும் இந்த முறையை கடைபிடித்தாலே எலுமிச்சைல நாம தோல்வி அடைய மாட்டோம்
இறுதியாக 200 லிட்டர் ட்ரும்ல 10 கிலோ அளவுள்ள எருக்கு இலையை (இலை ,தண்டு ,பூ ) போட்டு தண்ணீரை ஊற்றி 5 நாட்கள் கழித்து ஓவ்வொரு மரத்துக்கும் குறைந்தபாசம் 2 லிட்டர் தரைவழி ஊற்றி விடவேண்டும் 8 லிட்டர் தண்ணீரோட 2 லிட்டர் எருக்கு கரைசலை ஊற்றி செடிகள் மேலே தெளிக்கறப்போ காய்கள் உதிர்வது நிக்கும் 8 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்
நல்ல தகவல்
ReplyDelete