என்னுடைய நிலத்தில் சமீபத்தில் 500 நெல்லி கன்று வைத்தேன். ஒரு மாதம் ஆகிறது. அதன் வட்டபாத்தியில் பூசணி சுரக்காய் போன்ற கொடி வகை காய்கறி வளர்க்கலாம்? இதனால் நெல்லிக்கு ஏதேனும் பாதிப்பு வருமா?
தாராளமாக வளர்க்கலாம் பயிர்கள் நன்றாக கைவிரித்து வளர்ந்து நிழல் கட்டி , நிழலால் பயிர்கள் வளராது என்ற சூழ்நிலை வரும்போது மட்டும் நீங்கள் ஊடுபயிரை நிறுத்தினால் போதும் . மற்றபடி எல்ல கலகட்டத்திலயும் ஊடுபயிர் போடுவது நல்லது . நெல்லியை பொறுத்தவரை இடைவெளி அதிகமாக இருக்கும் இந்தமாதிரி ஊடுபயிர் போடும்பொழுது அது கலைகளை தடுப்பதுடன் ஒரு உயிர் மூடாக்காக செயல்படும் . இரண்டாவதாக ஒரு உபரி வருமானம் கிடைக்கும் , தண்ணீரையும் வீணாக்காமல் பயன்படுத்தலாம். மனவளமும் பெருகும்
0 Comments
Smart vivasayi