Coconut Planting Method - How many coconut seedlings can be planted in an acre of land?
ஒரு ஏக்கர் நிலத்தை எத்தனை தென்னை கன்று நடலாம்.எவ்வளவு இடைவெளியில் நட வேண்டும். என்ன ரகம் நட்டால் சீக்கிரம் பலன் தரும் மற்றும் நீர் மேலாண்மை எப்படி இருக்க வேண்டும்?
ஒரு ஏக்கர்ல 30 அடிக்கு 30 அடி இடைவெளில 48 தென்னைமரங்கள் வைப்பது சிறப்பு . இத விட கம்மியா 25க்கு 25 இடைவெளில 70 மரங்கள் கம்மியா வைக்கலாம் அல்லது 28க்கு 28 அடி வைக்கலாம். வாய்ப்பு இருந்தா 30க்கும் மேல 32க்கு 32 , 35க்கு 35 வைக்கலாம் . இந்த 30 அடிக்கு மேல இடைவெளி உள்ள நிலத்தோட முகியத்துவம் என்னனா , நமக்கு ஊடுபயிர் விவசாயம் தேவை நம்ம நிலத்திலிருந்து லாபங்கள் எடுக்கணும் சொன்ன 30க்கு 30 ஆதி இருப்பது சிறப்பு 25 அடிக்கு கீழ நூறுசதவீதம் வைக்க கூடாது
நீர் மேலாண்மை மண்ணை பொறுத்த விஷயம் எந்தவகை மண்ணாக இருந்தாலும் 80 லிட்டர் நீருக்கு மேல் கொடுக்க கூடாது அந்த தண்ணீரை காலையில 40 சாயந்தரம் 40 பிரிச்சு கொடுக்கலாம் இது 5 வருடத்திற்கு மேல் உள்ள பெரிய கன்றுகளுக்கு மட்டும்
மூன்று வருட கன்றுகளுக்கு காலையில 25 மாலையில் 25 லிட்டர் தண்ணீர் கொடுக்கலாம் இரண்டு வருட கன்றுக்கு காலையில 15 மாலையில் 15 லிட்டர் தண்ணீர் கொடுக்கலாம் ஒரு வருட கன்றுக்கு காலையில 7 மாலையில் 7 லிட்டர் தண்ணீர் கொடுக்கலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi