தமிழகத்தில் பெரும்பாலான மேட்டுப்பகுதி நிலங்கள் செம்மண் மற்றும் செம்மண் சரளை நிலங்களாகவும், மிகவும் கடினத்தன்மை வாய்ந்த நிலமாகவும் உள்ளது. பயிர்களின் வேர்கள் எளிதில் இறங்காத அளவில் பொதுபொதுப்பு தன்மை இல்லாமலும், இறுக்கத் தன்மை அதிகமுள்ள நிலங்களாகவும் உள்ளது. மேலும் கரிசல் மற்றும் களிமண் நிலங்களிலும் பெரும்பாலான பகுதிகள், அதிகமான இறுக்கத் தன்மையுடன் இருப்பதால் பயிர் விளைச்சல் மிகவும் குறைந்து காணப்படுகிறது.
மேலும் நிறைய நிலங்கள் பயன் படுத்தப்படாமல் இருக்கின்றன.
இந்த சூழ்நிலையில் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இறகு விசிறி கலப்பை(Mould board plough) நல்ல தீர்வைத் தருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 340 வாடகையாக, அருகில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களில் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
ஒரு ஏக்கர் நிலத்தை உழுவதற்கு குறைந்தபட்சம் 2 மணி நேரம் தேவைப்படும். இந்த இறகு விசிறி கலப்பையை பயன்படுத்தும்போது குறைந்தபட்சம் 25 முதல் 35 அங்குலம் அகலமும் 10 முதல் 16 அங்குலம் ஆழமும் உள்ள நிலத்தின் இறுகிய மண் உடைக்கப்பட்டு புரட்டப் பட்டு புதிய நிலம் கிடைக்க வாய்ப்பு ஏற்படுகிறது. மீண்டும் ஒருமுறை இதே முறையில் எதிர்ப்புறமாக எதிர் திசையில் உழும் போது கூடுதலான ஆழம் கிடைக்க வாய்ப்பு உண்டு.
இக்கருவியை பயன்படுத்தி கடினமான நிலத்தை கட்டிகளாக உடைத்த பின்பு, இத்துறையில் உள்ள ஒன்பது கொழு அல்லது ஏழு கொழு கலப்பை கொண்டு உழும்போது ஒரு நல்ல நிலம் கிடைக்க பெரிய வாய்ப்பாக உள்ளது.
இவ்வகைக் கலப்பைகளை வாடகைக்கு எடுத்து பணிபுரிய ஒரு மணி நேரத்திற்கு வாடகை ரூபாய் 340 மட்டுமே.
நிலத்தை ஆழமாக உழுது பின்பு அகலமாக உழுது முறைப்படுத்துவதால் எளிமையான விவசாயம் செய்ய தகுந்த ஒரு நல்ல நிலம் கிடைக்கும்.
0 Comments
Smart vivasayi