Ad Code

புடலைச் சாகுபடி






புடலையில் பல நாட்டு ரகங்கள் உண்டு. இதில் குட்டை, வரி, நீளப் புடலைதான் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பாம்பு புடலை என்று சொல்லப்படும், நீளப்புடலைதான் இதில் சுவை நிறைந்தது. ஆனால், விளைச்சல் குறைவாக இருக்கும். மற்றபடி சாகுபடி முறை, அனைத்து ரகங்களுக்கும் ஒன்றுதான்.

 நன்றாக உழவு செய்த நிலத்தில், கல்தூண்களை ஊன்றிக் கம்பிகளைக் கட்டி, பந்தல் அமைக்க வேண்டும். ஒருமுறை கல்பந்தல் அமைத்துவிட்டால்... கம்பிகள் 50 வருடம் வரையிலும், தூண்கள் 100 வருடங்களுக்கு மேலும் பயன்தரும். 

புடலை 200 நாள் பயிர். தரமான நாட்டு விதைகளை (ஏக்கருக்கு 400 கிராம் தேவைப்படும்) அரைலிட்டர் பஞ்சகவ்யாவில் இட்டு, 12 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழல் தரையில் பரப்பி, உலர வைக்க வேண்டும். இப்படி விதைநேர்த்தி செய்யும்போது முளைப்புத்திறன் அதிகரிக்கும். 

ஒரு குழிக்கு மூன்று விதைகள் என்ற கணக்கில் படுக்கை வசமாக நடவு செய்து... ஒருநாள் விட்டு ஒருநாள் என்ற கணக்கில் பாசனம் செய்யவேண்டும்.
 நடவு செய்த 16-ம் நாளில் களை எடுக்க வேண்டும். தொடர்ந்து மூன்று மாதங்கள் வரை, 15 நாள்களுக்கு ஒருமுறை களை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு முறை களை எடுக்கும்போதும், செடியின் தூர்களில் அரை லிட்டர் கடலைப் பிண்ணாக்குக் கரைசலை ஊற்ற வேண்டும். 
நடவு செய்த 18-ம் நாளில் 10 லிட்டர் தண்ணீருக்கு, 250 மில்லி அரப்புமோர் கரைசல் என்ற விகிதத்தில் கலந்து, அனைத்துச் செடிகள்மீதும் படும்படி விசைத்தெளிப்பான் மூலம் புகைபோல் தெளிக்க வேண்டும். 23-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு, 300 மில்லி பஞ்சகவ்யா என்ற கணக்கில் கலந்து செடிகள் மேல் நன்றாகத் தெளிக்க வேண்டும். 

நடவிலிருந்து 20 நாள்களுக்கு ஒருமுறை, 100 மில்லி புளித்த மோர், 50 கிராம் சூடோமோனஸ் ஆகிய இரண்டையும் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தேவைப்படும் அளவுக்குத் தெளிக்க வேண்டும். இது இலைப்பேன் மற்றும் அசுவினி உள்ளிட்ட பூச்சிகளைக் கட்டுப்படுத்தி, செடிகள் ஒரே சீராக வளர உதவி செய்கிறது. 
நடவு செய்த 60-ம் நாளுக்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீருக்கு, 200 மில்லி புளித்த மோர், 100 கிராம் சூடோமோனஸ் என அளவைக் கூட்டிக்கொள்ள வேண்டும். இதைத் தெளித்துவந்தால், சாம்பல் நோய் மற்றும் வைரஸ் தொற்றுகள் இருக்காது. 
26, 27-ம் நாள்களில் ஏக்கருக்கு 200 லிட்டர் ஜீவாமிர்தம், ஆறு லிட்டர் மீன் அமிலம், 70 லிட்டர் தண்ணீர் ஆகியவற்றைக் கலந்து ஒவ்வொரு செடிக்கும் அரைலிட்டர் அளவுக்கு நேரடியாக ஊற்ற வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படும்.
 30-ம் நாளுக்குள் கொடிகளைக் கொம்பில் படர விட வேண்டும். கொம்புக்குப் பதிலாகக் கெட்டியான காடா நூலைக் கம்பியில் இழுத்துக்கட்டியும் படரவிடலாம். 
திசைமாறிப்போகும் கூடுதல் பக்கக் கிளைகளைக் கவாத்து செய்ய வேண்டும்.
 60-ம் நாளில் 100 மில்லி அரப்புமோர் கரைசல், 100 மில்லி தேங்காய்ப்பால், 100 மில்லி இளநீர், இவற்றுடன் 50 கிராம் நாட்டுச் சர்க்கரை நடவு செய்த 

65-ம் நாளிலிருந்து காய்களைப் பறிக்கத் தொடங்கலாம். தொடர்ந்து, 140 நாள்கள் வரை காய்ப்பு இருக்கும். சராசரியாக ஏக்கருக்கு 40 டன் அளவுக்கு விளைச்சல் இருக்கும்.

 நாட்டுப்புடலை என்பதால், அடுத்த போகத்துக்கு உரிய விதைகளை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு கிலோ புடலை ரூ.30 முதல் 15 வரை சூழ்நிலைக்குத் தக்கபடி விற்பனையாகிறது. ஒரு ஏக்கருக்குக் குறைந்தபட்சம் 40 டன் என்றாலும், ரூ.6 லட்சம் வருமானம் கிடைத்துவிடும்.

Post a Comment

0 Comments