நெற்பயிரை அதிகம் தாக்கும் யானை கொம்பன் என்ற பாதிப்பு சிவப்பும் மஞ்சளும் கலந்த ஒல்லியான கால்களை உடைய பூச்சியின் மூலம் உருவாகும் இளம் மஞ்சள் நிற புழுக்களால் ஏற்படும் பாதிப்பாகும்.யானைக் கொம்பன் பாதிப்பை பரப்பும் பூச்சிகளை தவிர்க்க கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம்
1)சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் இரண்டு எண்ணிக்கையில் வைப்பது நல்லது, அதனையும் தினசரி இடம் மாற்றி வைப்பது நல்லது மாலை ஆறரை மணி முதல் 10 மணி வரை எரியுமாறு செய்யலாம்.
2) ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 கிலோ வேப்பம் கொட்டை தூளை தூவலாம். பத்து லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி வேப்பெண்ணெய் கலந்து காதி சோப்பு மாலை வேளையில் 8 நாளுக்கு ஒரு முறை தெளிக்கலாம்.
3)அக்டோபர் மாதத்தில் மழையில்லாத வறண்ட காலத்தில் இந்த பூச்சியின் தாக்கம் அதிகம் இருக்கும். எனவே போதுமான அளவு ஈரப்பதம் வைத்திருப்பது நல்லது. அதே நேரத்தில் தாக்கம் அதிகமானால் தண்ணீரை முழுவதும் வடித்து விட்டு தரைவழி எந்த இடுபொருள் கொடுப்பதையும் நிறுத்த வேண்டும்.
4)இந்தப் பூச்சிகள் வராமல் இருப்பதை தவிர தடுக்கும் வகையில் எட்டு நாட்களுக்கு ஒரு முறை இயற்கை பூச்சி விரட்டிகள் ஆன வேப்பங்கொட்டை கரைசல் ஐந்திலைக் கசாயம் பத்து இலை கசாயம் அக்னி அஸ்திரம் கற்பூரகரைசல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை எட்டு நாட்களுக்கு ஒரு முறை மாலை வேளையில் சரியான அளவில் தெளிக்கலாம்.
6)பவேரியா பேசியானா அல்லது பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் என்ற திரவத்தை 10 லிட்டருக்கு 50 மில்லி என கலந்து மாலை வேளையில் செடி நன்கு நனையுமாறு முக்கியமாக அடித்தண்டு நனையுமாறு தெளிப்பது நல்லது.
7. நெல்மணிகள் உருவாகும் காலத்திற்கு 15 நாட்களுக்கு முன்பும், கதிர்கள் உருவாக்கி 15 நாட்களுக்குப் பின்பும் இதன் தாக்கம் மற்றும் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.
பொதுவாக நடவு நட்டதிலிருந்து நாற்பதாவது நாள் மற்றும் 75 நாட்களை சுற்றியுள்ள நாட்களில் தண்டுதுளைப்பான் போல் இருந்து பயிரைப் பாதிப்பதால் கொம்பு போன்ற தாள்கள் உருவாவதால் கவனம் கொள்வது நல்லது.
0 Comments
Smart vivasayi