Ad Code

நெல் நிறைய ஆரம்பகால பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்






தமிழகத்தின் பல பகுதிகளிலும் விதை நெல்லை விதைநேர்த்தி பண்ணாலும் சரியாக ஆய்வு செய்யாமலும் வாங்கி உடனடியாக நட்டு, நிறைய ஆரம்பகால பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள்.

இதனை சரிசெய்ய விதைகள் பழுதாக இருந்தாலும், தரமற்ற இருந்தாலும், நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருந்தாலும், மண்ணின் வளம் குறைவாக இருந்தாலும், தண்ணீரின் தூய்மை பாதிக்கப்பட்டிருந்தாலும், அதனை சரிசெய்யும் வகையில் நாற்றங்கால் முதல் பூ எடுக்கும் காலம் வரையிலான நேரங்களில் ஐந்து முதல் 7  நாட்களுக்கு ஒரு முறை இயற்கை இடுபொருட்களை தரைவழி தருவது நல்லது.

முடிந்தவரை மாதமொருமுறை தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து தரைவழி தரவேண்டும் 100 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கலந்து அதனை 4 திசைகளிலும் பிரித்து ஒரு வயலுக்கு வாசல் தெளித்தது போல தெளித்து விட வேண்டும் மேலும் 10 லிட்டர் தண்ணீருடன் 50 மில்லி கலந்து இவ்விரண்டு பொருள்களில் ஏதாவது ஒன்றை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளிப்பது நல்ல பலன் தரும்.

ஒரு ஏக்கருக்கு அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை மீன் அமிலத்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒரு வயலில் ஒரு திசைக்கு 25 லிட்டர் என நான்கு திசைகளிலும் வழியில் எடுத்துச்சென்று தெளித்து விடலாம்.

 உத்தேசமாக ஒரு ஏக்கர் வயலை நான்காக பிரித்து இருந்தால் 200 லிட்டர் தண்ணீரில் மீன் அமிலத்தை கலந்து ஒரு வயலுக்கு 50 லிட்டர் என வரப்பில் நடந்து நான்கு திசைகளிலும் பிரித்து ஊற்றி விடலாம் இதேபோல் ஜீவாமிர்தம் இஎம் கரைசல் அமுதக்கரைசல் வேஸ்ட் டீகம்போஸர் கொடுப்பது நல்லது.

 ஆரம்பகால வளர்ச்சி என்பது மிகவும் முக்கியமானது முதல் இரண்டு மாதங்கள் நெல்லின் லாபத்தை முடிவு செய்யக் கூடியவை எனவே அக்காலங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.
தேவையான இடுபொருட்களை உடனடியாக நிறைய தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.

Post a Comment

0 Comments