மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் பெற செய்ய வேண்டிய மூன்று படிகள்
1. நான்கு நாள் நன்கு புளிக்க வைத்த 5 லிட் மோருடன் அரைக்கிலோ அரப்பு தூளை நன்கு கலந்து மீண்டும் இரண்டு நாள் நன்கு மூடியிட்டு புளிக்க வைக்கவும் அவ்வாறு புளித்த திரவத்தை ஏழாவது நாள் வடிகட்டி 10 லிட்டர் தண்ணீருக்கு அரை லிட்டர் கலந்து மாலை வேளையில் செடி முழுவதும் நனையுமாறு நன்கு நனைத்து தெளிக்கவும் இத்தனை தேவையான போதெல்லாம் கொடுக்கலாம்.
2.அரப்பு மோர் கரைசல் கொடுத்த பின்பு அதிக அளவு அரும்புகள் அல்லது பூக்கள் பூக்கும். அவ்வாறு பூத்த பூக்கள் பெரிதாகவும் எடை கூடுதலாக இருக்கவும் ,தரைவழி யாக வாரம் ஒரு முறை அல்லது 5 நாட்களுக்கு ஒருமுறை மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் அல்லது இஎம் கரைசல் தரைவழி தரலாம்.
3. 200 லிட்டர் தண்ணீருக்கு 10 கிலோ அளவுக்கு ஒடித்தால் பால் வரக்கூடிய இளம் வெள்ளை அல்லது சிவப்பு எருக்கு செடியின் இலை பூ தண்டு காய் என அனைத்து பகுதிகளையும் சிறு சிறு துண்டுகளாக வெட்டி அக் கரைசலில் விட்டு ஐந்து நாள் ஊற வைக்கலாம். பின்பு கரைசலில் மேலே மிதக்கும் அழுகிய இலைகளை வடிகட்டிவிட்டு மீதமுள்ள எருக்கு கரைசலை பயன்படுத்தலாம். இக் கரைசலை 8 லிட்டர் தண்ணீருக்கு இரண்டு லிட்டர் கலந்து செடிகள் மேல் தெளிக்கலாம் . ஒரு செடிக்கு ஒரு லிட்டர் என்ற வீதத்தில் அல்லது அரை லிட்டர் என்ற வீதத்தில் தரைவழி கொடுக்கலாம். இவ்வாறு செய்வதால் விவசாயத்தில் அதிக அளவு மகசூல் பெறலாம்.
அர்ப்பணம் சீயக்காயும் ஒன்றா? வெவ்வேறான?
ReplyDelete