பந்தல் காய்கறிகள் அல்லது தரையில் வளரும் எந்த வகையான காய்கறிகளும் அதிகம் லாபம் தொடர்ந்து பெற செய்ய வேண்டியவை
1. பூக்க வேண்டிய நாளிலிருந்து குறைந்தபட்சம் வாரம் ஒரு முறை என முதல் மூன்று வாரங்களுக்கு தேமோர் கரைசல் 10 லிட்டர் தண்ணீருடன் குறைந்தபட்சம் அரை லிட்டர் அதிகபட்சம் ஒரு லிட்டர் என கலந்து கொடுக்க வேண்டும் .
தேங்காய்ப் பால் மோர் கரைசல் எனப்படும் இக்கரைசல் பூக்களை அதிகமாக உருவாக்குவதுடன் அந்தப் பூக்கள் நிலையாக இருந்து காய்களாக மாற பெரிய வாய்ப்பாக இரண்டாவது முறை தெளிப்பது அமையும்.
மூன்றாவது முறை தெளிப்பது தேனீக்கள் போன்ற மகரந்த சேர்க்கையை அதிகப்படுத்தும் நன்மை தரும் பூச்சிகள் நம் நிலத்தில் அதிகம் வர பெரிய வாய்ப்பாக இருக்கும்.
2. பூக்கள் அதிகமாக வந்தபின்பு தரைவழி ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் கரைசல் இருக்கு கரைசல் தரைவழி தரலாம். பத்து லிட்டர் டேங்குக்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம்.
3. பயிர் பாதுகாப்பிற்காக சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி, ஏக்கருக்கு இரண்டு எண்கள் என்ற அளவில் வைக்க வேண்டும். மஞ்சள் நிற பாலிதீன் படுதா விரிப்பை கிரீஸ் அல்லது விளக்கெண்ணெய் தடவி 3 அடி நீளம் 2 அடி உயரம் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு 8 முதல் 10 இடங்களில் பயிரின் தலை இருக்கும் உயரத்தில் வைப்பது நல்ல பலனைத் தரும்.
Comments
Post a Comment
Smart vivasayi