*பதில்: கண்டிப்பாக வராது.*
குடிக்கும் தண்ணீரில் தினமும் காலையில் சிறிது இ.எம். கரைசல் (10 மிலி அளவில், 1 லி தண்ணீருக்கு) கலந்து, 5-6 துளசி இலைகளை கசக்கிப் போட்டு....
வாரம் இருமுறை இதனுடன் ஒரு கிள்ளல் அரைத்த மஞ்சள் கலந்து வைக்கிறோம். மீதமுள்ள தண்ணீரைக் கொட்டி விட்டு, தினமும் காலையில் தண்ணீரை மாற்றி விடுவோம்.
*காலையில்*, கோழிகள் வயிறு நிரம்ப சாப்பிடும் அளவிற்கு அசோலா மட்டும்தான் வைக்கிறோம்.
*மதிய வேளையில்*, வடித்த சாத்த்துடன் ஒவ்வொரு நாளும் - அரைத்த கறிவேப்பிலை, முருங்கை இலை, பப்பாளிப்பழம் - இவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து கொடுப்போம்.
மாலை வேளைகளில், நம் *இயற்கை வழியில் நாட்டுக்கோழி வளர்ப்பு* புத்தகத்தின் பரிந்துரைப்படி அரைத்த தீவனத்தை, மிகக்குறைந்த அளவில் வைப்போம். இது தீவன செலவை பெருமளவில் குறைப்பதோடு, கோழிகளுக்கு எந்த சத்துப் பற்றாக்குறையும் வராதபடி உறுதிப்படுத்துகிறது. (முட்டையிடும் கோழிகளுக்கு கிளிஞ்சல்களும் தீவனத்தில் சேர்த்துக்கொள்ளப் படுகிறது)
எங்கள் பண்ணை சற்று குளிரான சூழலில் அமைந்திருந்துமே. கடந்த ஒன்றரை வருடங்களில் சளித் தொல்லை மட்டுமல்ல, எந்த பிரச்சனையும் இல்லை.
*சளி*
வரமால் இருக்க
1. குளிர்சியான நீர் கொடுக்க கூடாது
2. குளிர்ச்சியான உணவுகள் கொடுப்பதை தவிர்கவேண்டும்
3. பனி ஈரம் காய்வதற்கு முன் கோழிகளை வெளி மேச்சளுக்கு விடாமல் தவிர்கலாம்
4. ஆழ் கூலம் ஈரம் ஆகாமல் இருக்க வேண்டும்
5. எஞ்சங்கள் நீண்ட நாள் சுத்தம் செய்யாமல் இருக்க கூடாது
6. சாரல் காற்று அதிகம் படாத படி கொட்டகை இருக்கவேண்டும்
7. தண்ணீர் சுடவைத்து ஆரவைத்து கொடுக்கவும்
8. நிறுவன தீவனம் பயண்படுத்த கூடிய நண்பர்கள் ஈரம் படாத இடத்தில் வைக்கவும்
9. தீவனம் கொடுக்கும் முன் பூஞ்சானம் போன்றவை உள்ளனவா என்பதனை உறுதி செய்து கொடுக்கவும்
10. தண்ணீர் அடிக்கடி மாற்றவும் ....
மனிதனாக இருந்தாலும் சரி, கோழியாக இருந்தாலும் சரி
*சளி* என்பது நோய் அல்ல அது ஓரு எச்சரிக்கை என்பதே! உண்மை என்பது என் புரிதல் ...
பல நோய்கள் வருவதற்கு முன் உடலில் சளி வருகிறது. அதனை சரிசெய்து விட்டால் மற்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் அதே போன்று சளியும் நம்மை எச்சரிக்கை செய்கிறது வேறு நோய்கள் வர இருக்கிறது என்று .....
இயற்கை வழி
1. குப்பைமேனி தழை தீவனத்தில் ( சாதம் கூட இருக்கலாம் ) கலந்து கொடுக்கலாம்
2. குப்பைமேனி + குப்பைமேனி அளவில் 10ல் ஓருபங்கு வேம்பு தழை சேர்த்து உணவில் கலந்து கொடுக்கலாம்...
3. பூசணி காய் பச்சையாக கொடுக்கலாம்
4. குப்பைமேனி + குப்பைமேனி அளவில் 10ல் ஓருபங்கு வேம்பு தழை + அம்மன் பச்சை அரிசி தழை சேர்த்து உணவில் கலந்து கொடுக்கலாம்...
மழை காலம் மற்றும் வெயில் காலங்களிலும் கோழிகளுக்கு ஏற்படும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஒரே நாட்டு மருந்து.
நாட்டு மருந்து தயாரிக்க தேவையான 7 பொருட்கள்
1 துளசி இலை
2 தூது வலை இலை
3 கற்பூரவள்ளி இலை
4 முல் முருங்கை இலை
5 பப்பாளி இலை
6 கொய்யா இலை
7 வேப்ப இலை
செய்முறை;
இவை அனைத்தும் ஒரே அளவாக எடுத்துக்கொண்டு அதனை மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளுங்கள் பின்பு இந்த நாட்டு மருந்தை 4 மாத கோழிகளுக்கு ஒரு உருண்டை (0.75 g) அளவு கொடுக்க வேண்டும்.
இந்த பதிவை கோழி வளர்க்கும் எல்லா நண்பர்களுக்கும் தவறாமல் பகிருங்கள்
எல்லோரும் பயன் பெறட்டும்.
உங்களுக்கு உதவா விடினும்
உங்கள் உறவுகளுக்கு உதவும்...
*தண்ணீர்*
1. முடிந்தவரை தண்ணீர் சுடவைத்து ஆரவைத்து கொடுங்கள்
( இந்த பர்வ நிலையும் அப்படி )
2. தினம் ஏதேனும் ஓரு நோய் எதிர்பு தரக்கூடிய ஒன்றை தண்ணீரில் கலந்து கொடுங்கள்
*மஞ்சள், துளசி, புதினா , இஞ்சி*
( குளிர்ச்சி தரக்கூடியவை வேண்டாம் )
3. தண்ணீர் ஓரு நாளைக்கு மூன்று முறை மாற்றவேண்டும்.
4. கருப்பெட்டி தண்ணீர் கொடுங்கள்
5. குளுக்கோஸ் கலந்த தண்ணீர் கொடுங்கள் ...
*கவனிக்கவேண்டியவை*
1. இளம் குஞ்சி கோழிக்கு ஏற்ற சரியான எண்ணிக்கையில் இருப்பதால் தனியாக வெப்பம் தர கூடாது.
2. வெளி மேச்சளுக்கு பனி ஈரம் இருக்கும் வரை விட கூடாது.
3. மிகவும் வழு வழுப்பான இடத்தில் குஞ்சகளை வைக்க கூடாது
( ஓட முற்படும் ஆர்வத்தில், இளம் கன்று அல்லவா ) கால் பாதிப்புக்கு உள்ளாகும்.
4. குளிர்ச்சியான உணவு தரக்கூடாது.
5. சின்ன வெங்காயத்தின் காய்ந்த தோல்களை அருகில் போடுங்கள் அதனை ஓன்றோடு ஓன்று போட்டி போட்டு எடுக்க முயற்ச்சி செய்யும் ( பயிர்ச்சி கொடுத்த மாதிரியும் இருக்கும் )
6. சிமெண்ட் , உரம் சாக்குகள் அருகில் இருக்க கூடாது.அதன் நரம்பை உண்ண முற்படும்.( உங்கள் பண்ணையல் உர சாக்கு இருக்க வாய்ப்பு இல்லை என்பதை அறிவேன்
7. தர்மாகூலர் அட்டைகள் இருக்க கூடாது.
8. தண்ணீர் , உணவு இரண்டும் இளம் குஞ்சிகளின் / கோழிகளின் எச்சம் விழாத அமைப்பில் உள்ளதை பயண்படுத்த வேண்டும்
9. வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் எந்த இளம் குஞ்சாவது சோர்வாக இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்
10. இரவு அடைத்து வைக்கும் போது காற்றோட்டம் உள்ள கூடை அமைப்பு இருத்தல் வேண்டும் ..
*உணவு*
1. கரையான் ( வாய்ப்பு கிடைத்தால் மிகவும் நல்லது )
2.கேழ்வரகு & கம்பு
3.நெல்லோடு சேர்த்து அரைத்த நொய் அரிசி.
4. நன்கு அரைத்த நிலையில் இருக்க கூடிய கோதுமை
5. ரவா
6. சிறு தானிய பயிர்கள் நன்கு அரைத்த நிலையில் இருக்கவேண்டும்
7. சில கீரை வகைகள் கட்டி விடலாம் ஆனால், பணி ஈரம் இல்லாமல் இருக்கவேண்டியது அவசியம்
Comments
Post a Comment
Smart vivasayi