அக்னி அஸ்திரம்
*தேவையான பொருட்கள் :*
வேப்பிலைக் -- 5 கிலோ
புகையிலை -- அரைகிலோ
பச்சை மிளகாய் -- அரைகிலோ
பூண்டு -- அரைகிலோ.
கோமியம் -- 10 லிட்டர்
செய்முறை
பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைத்து கொள்ளவும்.
புகையிலையை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி, வேப்பிலையுடன் சேர்த்து அரைக்கவும்.
அரைத்த விழுதுகளை, கோமியத்தில் இட்டு கரைத்து, விறகடுப்பில் ஏற்றி கொதிக்க விடவும்.
இவை நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் 10 நிமிடங்கள் அதே கொதிநிலையில் வைத்து, பின் அடுப்பின் தணலை முழுவதுமாக குறைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து, மீண்டும் தணலை கூட்டி கொதிக்கவிடவும்.
இந்த செயல்முறையை தொடர்ந்து 4 முறை செய்யவும்.
4 தடவை கொதித்த பின்னர், அடுப்பிலிருந்து இறக்கி, பாத்திரத்தின் வாயை பருத்தி துணியால் கட்டி, நிழலில் 48 மணிநேரம் வைக்கவும்.
இரண்டு நாட்கள் கழித்து, மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி பயன்படுத்தவும்.
கைதொடாமல் , ஒரு கண்ணாடி குடுவையில் சேமிக்கும்போது, மூன்று மாதங்கள் வரை இருப்பு வைத்து பயன்படுத்தலாம்.
*பயன்கள்*
இவை தண்டுத்துளைப்பான்கள் மாற்று காய்புழுக்களைஆகியவற்றை அழிப்பதோடு மட்டுமல்லாது, தண்டுபகுதியின் உட்புறத்திலுள்ள புழுக்களின் முட்டையையும் கருக செய்கின்றது.
*பயன்படுத்தும் அளவு*
பத்து லிட்டர் தண்ணீருக்கு -- 300 மில்லியிலிருந்து 500 மில்லி வரை.
பயிர்களுக்கு பூச்சி நோய் வந்த பின்பு , தெளிப்பதை காட்டிலும், பூக்கள் வரும் தருணத்தில் தேமோர் கரைசல் அல்லது அரப்புமோர் கரைசல் தெளித்த ஒரு வாரம் கழித்து முன்னெச்சரிக்கையாக அக்னி அஸ்திரம் தெளிக்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi