What to do for mango trees in October?
1)மா மரத்தில் பூ பூக்க இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் அக்டோபர் மாதத்தை
பொருத்தவரையில் வறண்ட வானிலையும் அதிக வெப்பமும் இருக்கும் என்பதால் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு மரத்திற்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 3 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 25 மில்லி மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம்.
2) முடிந்தவரை தெளிப்பு குறைத்துக்கொள்வது நல்லது. இடையில் மழைப்பொழிவு இருந்தால் அந்த நேரத்தில் நிலத்தின் வீரத்தை பயன்படுத்திக்கொண்டு மானாவாரி மா சாகுபடியில் மரங்களை சுற்றி ஒரு மரத்திற்கு 30 மில்லி என்ற அளவில் பஞ்சகாவியா மீன் அமிலம் இஎம் கரைசல் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை போதுமான அளவு தண்ணீரில் கலந்து வைத்துக்கொண்டு ஊற்றி விடுவது நல்லது
3) எருக்கு கரைசல் ஒரு மரத்திற்கு 5 லிட்டர் தருவது நல்லது அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை தரலாம்.
4)ஒரு ஏக்கர் வயலில் குறைந்தபட்சம் இரண்டு எண்கள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணிவரை இயக்குவது நல்லது.
5) பழ ஈகளுக்கான பொறிகளை ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் கட்டி பாதி மரத்தில் கட்டி தொங்க விடுவது நல்லது
6)குறைந்த அளவு தண்ணீரை சமமான இடைவெளியில் கொடுப்பது நல்லது.
7)மரத்தில் நோய்வாய்ப்பட்ட தன்மை தென்பட்டால் அல்லது பூச்சித் தாக்கம் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.
Comments
Post a Comment
Smart vivasayi