1) பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகள் நடவு செய்து அது வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தை பொருத்தவரையில் வரண்ட வானிலையும் மழைப்பொழிவு இல்லாத நிலையும் இருக்கும் நிலையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது. எதிர்வரும் மழைக்காலத்தை அடிப்படையாக வைத்து ஒரு ஏக்கருக்கு வாரம் ஒரு முறை தண்ணீர் தருவதாக இருந்தால் ஒரு வாரம் 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம்.
2) 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை இடுபொருட்களை இலைகளின் மேல் தெளிப்பது நல்ல பலன் தரும். 10 லிட்டருக்கு 200-300 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது. மீன் அமிலம் 75 மில்லி கலந்து கொடுப்பது நல்லது.
3) எருக்கு கரைசல் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தருவது நல்லது. அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டராக பிரித்து கொடுக்கலாம். தெறி பிற்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம்.
4)ஒரு ஏக்கர் வயலில் குறைந்தபட்சம் இரண்டு எண்கள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணிவரை இயக்குவது நல்லது.
5) பழ ஈகளுக்கான பொறிகளை ஏக்கருக்கு 7 எண்ணிக்கையில் கட்டி செடிகளின் உயரத்தில் அல்லது பந்தலின் கீழ் பகுதியில் கட்டி தொங்க விடுவது நல்லது
6)குறைந்த அளவு தண்ணீரை சமமான இடைவெளியில் கொடுப்பது நல்லது.இந்த மாதத்தில் மழை குறைந்து அதிக வெயில் இருக்கும் என்பதால் சிறிய பயிர்களுக்கு கவனமாக தொடர்ந்து தண்ணீர் தருவது நல்லது களிமண் நிலங்களில் சீரான இடைவெளியில் போதுமான தண்ணீர் தருவது நல்லது.
7) செடிகளில் நோய்வாய்ப்பட்ட தன்மை தென்பட்டால் அல்லது பூச்சித் தாக்கம் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.
மாதம் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் அல்லது பேசில்லஸ் சப்டிலிஸ் பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளிப்பது நல்லது. சின்ன வெங்காயம் வைத்திருப்போர் அவசியம் மாதம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை கொடுப்பது நல்லது
புழு தாக்கம் தென்பட்டால் 10 லிட்டருக்கு 50 மில்லி பேசிலஸ் துரிஞ்சி என்சிஸ் அல்லதுபவேரியா பேசியானா கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பது நல்லது.
மிளகாய் செடி, வெங்காயம் வைத்திருப்போர் இலை கசங்கும் வகையில் தெரியும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் தாக்குதல் தென்பட்டால் 10 லிட்டருக்கு 50 மில்லி வெ ர்ட்டி சீலியம் லக்கானி என்ற திரவத்தை கலந்து வாரம் ஒரு முறை என இரண்டு தடவை தரலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi