1) பெரும்பாலான பகுதிகளில் நெற்பயிர் விதைத்து வளர்ந்து கொண்டிருக்கும் நிலையில் அக்டோபர் மாதத்தை பொருத்தவரையில் தரைவழி அதிக ஊட்டச்சத்துக்கள் கொடுப்பது மிகவும் சிறந்தது.
ஒரு ஏக்கருக்கு வாரம் ஒரு முறை
அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை ஒரு வாரம் 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது அரை லிட்டர் மீன் அமிலம் அல்லது இஎம் கரைசல் அல்லது ஒரு லிட்டர் பஞ்சகாவியா தரைவழி ஒவ்வொரு பாசனத்துடனும் தரலாம்.
2) 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை இயற்கை இடுபொருட்களை இலைகளின் மேல் தெளிப்பது நல்ல பலன் தரும். 10 லிட்டருக்கு 200-300 மில்லி என்ற அளவில் பஞ்சகவியா அல்லது ஈயம் கரைசலை தெளிப்பது நல்லது. மீன் அமிலம் 75 மில்லி கலந்து கொடுப்பது நல்லது.
3) எருக்கு கரைசல் ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தருவது நல்லது. அதனை 15 நாட்களுக்கு ஒரு முறை 100 லிட்டராக பிரித்து கொடுக்கலாம். தெளிப்புக்கு 8 லிட்டர் தண்ணீருடன் 2 லிட்டர் கரைசலை கலந்து தெளிக்கலாம்.
4)ஒரு ஏக்கர் வயலில் குறைந்தபட்சம் இரண்டு எண்கள் சூரிய ஒளியில் இயங்கும் விளக்குப்பொறி மாலை 6 மணி முதல் ஒன்பதரை மணிவரை இயக்குவது நல்லது. அல்லது மஞ்சள் நிற ஒட்டும் அட்டை ஒரு ஏக்கருக்கு ஆறு எண்ணிக்கையில் வைப்பது நல்லது.
5) கடைமடை பகுதிகளில் அல்லது மேட்டு நிலங்களில் நெல் பயிர் சாகுபடி செய்து இருப்பவர்கள் பூக்கும் தருணத்தில் போதுமான நிலத்தடி ஈரம் இருப்பதை, தண்ணீர் தருவதை உறுதிப்படுத்த வேண்டும்
6)நோய்வாய்ப்பட்ட தன்மை தென்பட்டால் அல்லது பூச்சித் தாக்கம் தென்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுப்பது நல்லது.
மாதம் ஒருமுறை ஒரு ஏக்கருக்கு சூடோமோனாஸ் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தரையில் படுமாறு தெளிக்க வேண்டும். பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து பயிர் மேல் படுமாறு தெளிப்பது நல்லது.
புழு தாக்கம் தென்பட்டால் 10 லிட்டருக்கு 50 மில்லி பேசில்லஸ் துரிஞ்சி என்சிஸ் அல்லது பவேரியா பேசியானா கலந்து வாரம் ஒரு முறை தெளிப்பது நல்லது.
தண்டு துளைப்பான் மற்றும் புகையான் தாக்குகிறது என்பதை தினசரி ஆய்வு செய்வது நல்லது.
Comments
Post a Comment
Smart vivasayi