கிணறுகளில் மழைநீரை சேகரிக்கும் முறை
தமிழகத்தில் பெய்யும் மிகக் குறைவான மழை நீரை கிணறுகளில் சேமிக்கலாம். அவ்வாறு மழைநீரை கிணறுகளில் வடிகட்டி சேமிப்பதால் மேற்பகுதிகளில் உள்ள ஊற்றுக்களில் நீர் நிறைந்து நிலத்தடியில் நிரந்தரமாக நிறைய நீர் கிடைப்பதுடன் நம் கிணறுகளை சுற்றியுள்ள மேற்பகுதியில் உள்ள ஊற்றுகளில் அதிகளவு நீரை சேர்த்து வைத்துக் கொள்ள வழிவகை ஏற்படும். இதனால் வறட்சிக் காலத்திலும் தேவைப்படும் குறைந்தபட்ச நீரைப் பெற வழிவகை ஏற்படும்.
*சேகரிக்கும் முறை*
*முறையாக கற்சுவர் கொண்டு* அமைக்கப்பட்ட கிணறுகளிலிருந்து மூன்று அல்லது நான்கு அடி தள்ளி 6 அடி நீளம் 6 அடி அகலம் 6 அடி முதல் 10 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் பத்தடி வரையிலான குழியை எடுக்கலாம் .
பொதுவாக இந்த குறி கிணற்றின் மேட்டுப் பகுதியில் அமையலாம். மேலும் ஆற்றின் மேட்டு பகுதியில் உள்ள நீர் முழுவதும் வடிந்து குழிக்குள் வருமாறு அமைத்துக்கொள்வது நல்லது. மேட்டுப் பகுதியில் உள்ள நிலம் நிலத்தின் அளவைப் பொறுத்து குழியின் அளவு மாறுபடும். பெரிய அல்லது இரண்டு ஏக்கருக்கு மேல் உள்ள நீர்ப்பிடிப்பு பகுதியாக இருந்தால் 10 அடி நீளம் 10 அடி அகலம் ஆழம் 6tn அமைத்துக்கொள்வது நல்லது தரையில் இருந்து அரையடி உயரத்தில் குழிக்குள் இருந்து கிணற்றுக்குள் நுழையும் 6 ஒரு துளையிட்டு கொள்ளலாம் 3 அல்லது 4 இன்ச் குழாயை சொருகி பைப்பை சுற்றி இரண்டடிக்கு இரண்டடி அளவுள்ள பகுதிகளில் செங்கல் வைத்து கூட கட்டிவிடலாம்.
நீட்டிக்கொண்டிருக்கும் சுமார் 6 அடி நீளமுள்ள பிவிசி பைப்பில் அதன் முனையில் மூடி போட்டு மூடி விடவும் .
மேலும் பைபிள் 10 மில்லிமீட்டர் அல்லது 12 மில்லி மீட்டர் விட்டமுள்ள குழிகளை கோட்டைகளை இருபது முப்பது எண்ணிக்கையில் அமைக்கலாம். நைலான் கொசுவலை இரண்டடி அகலமுள்ள அல்லது ஒரு அடி அகலமுள்ள நீள துண்டுகளாக வெட்டி பைப்பின் மேல் சுற்றி விட்டு கட்டுக் கம்பி வைத்து அதன் ஆரம்பம் மற்றும் முடிவு போன்ற மூன்று இடங்களில் கட்டிவிடலாம். பின்பு குழாயின் கீழ் பெரிய கற்களை வைத்து அடக்கிவிடலாம். உதாரணமாக அறிகுறி என்றால் 5 அடி கிணற்றில் கொட்டி மூடி விடலாம். மீதமுள்ள அரை அடிக்கு முக்கால் ஜல்லி அல்லது ஒன்றரை இன்ச் மில்லிமீட்டர் கொட்டி பரப்பி விடலாம். மீதமுள்ள அரை அடியை ஹாலோ பிளாக் அல்லது செங்கல் அல்லது கருங்கல் சுவர் கொண்டு கட்டி முறைப்படுத்தல் ஆற்றில் தண்ணீர் உள்ளே நுழைய *ப* வடிவில் அமைக்கலாம். இதனால் ஓடி வரும் மழைநீர் மேலே உள்ள சிறுசிறு ஜல்லிகள் வழியே நுழைந்து நைலான் வலைகள் நுழைந்து பிவிசி பைப்பில் நுழைந்து கிணற்றுக்குள் கொட்டும்.
கிணற்றுக்குள் நீட்டிக்கொண்டிருக்கும் பிவிசி பைப்பில் வளைந்த பெண்டை சொருகி வைப்பதால் பறவைகள் கூடு கட்டுவதை தவிர்த்து விடலாம். கிணற்றுக்குள் பகுதியிலும் பைப்பை சுற்றியுள்ள இடங்களில் சிமெண்ட் வைத்து விடலாம்.
ஆற்று நீரை கிணற்றுக்குள் சேமிக்க அல்லது அளவுக்கு அதிகமாக தண்ணீர் உருண்டோடி வரும் இடங்களில் தண்ணீர் சேர்க்க ஒரு நான்கு இன்ச் பைப் புக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று நான்கு இன்ச் பைப்புகளை அல்லது மூன்று இன்ச் பைப்புகளை பக்கவாட்டில் அடுக்கி இதே முறையில் பயன்படுத்தலாம்.
கற்களை குழிக்குள் நினைக்கும் போது பெரிய கற்களை சுவற்றின் பக்கவாட்டு பகுதிகளில் முறையாக அடிக்கி, உள் பகுதியில் சிறு சிறு கற்களைப் நிறைத்து அமைக்கலாம் .
களிமண் பகுதிகளில் இவ்வாறான வடிகட்டி அமைக்கும்போது தண்ணீர் உள்ளே நுழையும் *ப* வடிவிலான மேற்புற சுற்று சுவரின் அளவினை தரையிலிருந்து அரை அரை அடி உயரம் வரை உயர்த்தி அமைக்கலாம். இதனால் ஓடிவரும் களிமண் குழிக்குள் விழுவதை தடுக்க முடியும். மேலும் சரிவின் தன்மைக்கு ஏற்ப இரண்டு அல்லது மூன்று பக்கங்களிலும் கூட வாய் பகுதியாக *ப* வடிவிலான ஓட்டைகள் விடலாம்.
*கிணற்றில் சுற்று சுவர் இல்லாமல் இருந்தால்* கிணற்றில் இருந்து சுமார் 5 முதல் 6 அடி தள்ளி இவ்வாறான குறிகள் அமைப்பது நல்லது.
Comments
Post a Comment
Smart vivasayi