Skip to main content

இயற்கை வழி நெல் சாகுபடி செய்வது எப்படி









பயிர்களை பற்றிய கண்ணோட்டம் 

1. குறுகிய கால ரகங்கள் 

வயது : 80 நாட்கள் முதல் 110 நாட்கள் வரை 


2. மத்திய  கால ரகங்கள் 

வயது : 120 நாட்கள் முதல் 135 நாட்கள் வரை 


3. நீண்டகால  கால ரகங்கள் 

வயது : 140 நாட்களுக்கு மேல்  

இது நம்முடைய நடைமுறையில் உள்ள நெல் ராகங்களில் உள்ள வயதுக்கு ஏற்ற பகுப்பு..  ஒரு சில ரகங்கள் சற்று மாறுபடலாம்... 

&& அனைத்து பயிர்களுக்கும் நிலம் தயாரிப்பு முறை,  நாற்றங்கால் தயாரிப்பு முறை ஒன்றுதான்.. அதில் எந்த வேறுபாடும் இல்லை 

&& அனைத்து பயிர்களையும் 10ம் நாள் தொடங்கி 15ம் நாளுக்குள் நட்டால் தூர்கள் நன்றாக பிடிக்கும்...  அதிலும் வித்யாசம் இல்லை 

பின்பு மாறுபாடுகள் எங்கே வருகிறது என்று யோசிக்க வேண்டும்... 

1. பயிர்களின் வளர்ச்சி பருவம்...  கதிர் வருவதற்கு முன் உள்ள பருவம்.. 

2. கதிர் வந்ததிலிருந்து அறுவடை வரை உள்ள பருவம்... 

மேல் சொன்ன 2 பருவங்களும் பயிருக்கு பயிர் மாறுபடும்.. 

மண்ணின் வளத்தை பொறுத்து பயிரின் வயது கூட குறைய செய்கிறது..  

+ or  - 5 days. 

நெல் விவசாயத்தில் நல்ல மகசூல் பெற கடை பிடிக்க பட வேண்டிய விஷயங்கள் 

1. மண் வளம் பராமரிப்பு 

2. விதை தேர்வு 

3. களை கட்டுப்பாடு 

4. பூச்சி / நோய் மேலாண்மை 

5. இடுபொருட்கள் நிர்வாகம்.


1. மண் வளம் பராமரிப்பு 

பல தானிய விதைப்பு 

பசுந்தாள் பயிர் செய்தல் 

ஊட்டமேற்றிய தொழு உரம் 

மண் வளத்தை கூட்டும் ஊக்கிகளை உபயோகித்தல் 


2. விதை தேர்வு & நாற்றங்கால் 

கலப்படம் இல்லாத விதைகள் 

உப்பு நீர் கரைசலில் முளைப்பு திறன் குறைந்த நெல்லை நீக்குதல் 

உயிர் உரங்கள் கொண்டு விதை நேர்த்தி 

விதைகள் ஒன்றோடு ஒன்று கலக்காமல் இடைவெளி கொடுத்து நாற்று விடுதல் 

5ம் நாள் பஞ்சகாவிய தெளிப்பு 

7ம் நாள் கற்பூர கரைசல் தெளிப்பு 

10ம் நாள் பஞ்சகாவிய தெளிப்பு


3. களை கட்டுப்பாடு

குறுகிய கால ரகங்களுக்கு 4 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில். 

மத்திய  கால ரகங்களுக்கு 6 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்

நீண்ட  கால ரகங்களுக்கு 8 முறை ( எதிர் எதிர் திசை ) கோனோவீடர் ஓட்ட வேண்டும். 3 நாட்கள் இடைவெளியில்

ஒரு முறை கை களை எடுக்க வேண்டும் 


4. பூச்சி / நோய் மேலாண்மை

நடவு செய்த 20ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 35ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 50ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 70ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 90ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 110ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 130ம் நாள் கற்பூர கரைசல் spray 

நடவு செய்த 150ம் நாள் கற்பூர கரைசல் spray 

பயிர்களின் வயதை பொறுத்து மேலே உள்ள தெளிப்புகளின் எண்ணிக்கையை கூட / குறைத்து கொள்ளவேண்டும். 

தேவைக்கு ஏற்றார் போல உயிர் உர பூச்சி / பூஞ்சாண கொல்லிகளை பயன் படுத்தி கொள்ளுங்கள் 

5. இடுபொருட்கள் நிர்வாகம்.


மண் வளத்தை கூட்டினால் தான் மகசூலில் நிறைவு கிடைக்கும் 

கடைசி உழவுக்கு முன் 500 to 600 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 50 kg கரித்தூள் கலந்து இடவும் 

ஒவ்வொரு முறை கோனோவீடர் ஓட்டுவதற்கு முன் நாள் ஏக்கருக்கு 100 to 150 kg ஊட்டமேற்றிய தொழு உரம் + 10 kg கரித்தூள் கலந்து இடவேண்டும் 

பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 200 liter ஜீவாமிர்தம் / அமிர்த கரைசல் விடவேண்டும் 

பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும் 

பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter EM கரைசல் விடவேண்டும்

பாசன நீர் வழியாக 20 நாட்களுக்கு ஒரு முறை 3 liter மீன் அமிலம் கரைசல் விடவேண்டும்

பாசன நீர் வழியாக 30 நாட்களுக்கு ஒரு முறை 3 liter  Humic acid கரைசல் விடவேண்டும். 

குறுகிய கால பயிர்களுக்கு 2 முறை 

மத்திய கால பயிர்களுக்கு 3 முறை 

நீண்ட  கால பயிர்களுக்கு 4 முறை 

பஞ்சகாவியா 3 liter + தேவையான அளவு ஓடை மண்ணில் கலந்து வயலில்  30 நாட்களுக்கு ஒரு முறை உரம் இடுவது போல இடவேண்டும் 

குறுகிய கால பயிர்களுக்கு 2 முறை 

மத்திய கால பயிர்களுக்கு 3 முறை 

நீண்ட  கால பயிர்களுக்கு 4 முறை 

தெளிப்பு வளர்ச்சி ஊக்கிகள் 


ஒவ்வொரு வளர்ச்சி ஊகிக்கும் இடைவெளி  7 நாட்கள் என கருத்தில் கொண்டு தெளிக்க வேண்டும் 

1st EM கரைசல் 150 ml / tank

2nd மீன் அமிலம் 50 ml / tank

3rd EM கரைசல் 150 ml / tank

4th பஞ்சகாவியா 150 ml / tank

6th 15 நாட்கள் புளித்த தயிர் 500ml/ tank

7th EM கரைசல் 150 ml / tank

8th  மீன் அமிலம் 50 ml / tank

9th EM கரைசல் 150 ml / tank

10th பஞ்சகாவியா 150 ml / tank

11th 15 நாட்கள் புளித்த தயிர் 500ml/ tank

மேலே உள்ள கரைசல்களை பயிரின் வயதுக்கு ஏற்ப குறைத்து கொள்ளலாம் 

இந்த தெளிப்பு முறையை வயலில் ஒன்று இரண்டு கதிர்கள் வரும் வரை தெளிக்க வேண்டும் 

ஒரு சில கதிர்கள் வெளி வந்தவுடன் தேமோர் கரைசல் 500 ml / tank.  

3 நாள் இடைவெளியில் 3 முறை spray செய்யவும் 

பூக்கள் polination முடிந்து பால் பிடிக்கும் வரை பூச்சி விரட்டி தவிர்த்து எதையும் தெளிக்க கூடாது.. 

பூ இருக்கும் காலங்களில் sprayer நேரடியாக பயிரின் மீது படுமாறு தெளிப்பதை தவிர்க்க வேண்டும்.. 

பால் பிடிக்கும் தருணத்தில் தேங்காய் பால் + மீன் அமிலம் 1:1 அளவில் கலந்து 4 நாட்களுக்கு ஒரு முறை என 3 தெளிப்பு.. 

அதை தொடர்ந்து 7 to 10 days once  மீன் அமிலம் 70ml/tank spray செய்யவும்.. 

வளமான மகசூல் பெற மண்ணின் வளத்தை கூடுவது..  மண்ணுக்கு சத்தை வழங்குவது மிகவும் முக்கியம்.. 

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...