நல்ல விளைச்சல் தரும் நிலமாக இருந்தால்
1) 1 வது வாரம்
மீன் அமிலம் ஒரு மரத்திற்கு
10 - 15 மில்லி
2 வது வாரம்
ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு
4 லிட்டர்
3 வது வாரம்
மீன் அமிலம் ஒரு மரத்திற்கு
10 - 15 மில்லி
4 வது வாரம்
இ. எம் கரைசல் ஒரு மரத்திற்கு
10 - 15 மில்லி கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தரைவழி தரவும்.
ஒவ்வொரு மாதமும் 10 வது மற்றும் 25 வது நாள் 10 லிட்டருக்கு 200 மில்லி பஞ்சகாவியம் கரைசலை செடிகள் மேல் தெளிக்கலாம்.
2) குறைந்த விளைச்சல் தரும் நிலமாக இருந்தால் அல்லது அமில கார நிலை 8 க்கு மேல் இருந்தால்
1 வது வாரம்
மீன் அமிலம் ஒரு மரத்திற்கு
15 - 20 மில்லி
2 வது வாரம்
ஜீவாமிர்தம் ஒரு மரத்திற்கு
5 லிட்டர்
3 வது வாரம்
மீன் அமிலம் ஒரு மரத்திற்கு
15 - 20 மில்லி
4 வது வாரம்
இ. எம் கரைசல் ஒரு மரத்திற்கு
20 - 25 மில்லி கரைசலை 20 லிட்டர் தண்ணீருடன் கலந்து தரைவழி தரவும்.
ஒவ்வொரு மாதமும் 10 வது மற்றும் 25 வது நாள் 10 லிட்டருக்கு 300 மில்லி பஞ்சகாவியம் கரைசலை செடிகள் மேல் தெளிக்கலாம்.
மாதம் ஒருமுறை ஒரு மரத்திற்கு 200 கிராம் நேரடி சாம்பல் அல்லது 10 மில்லி பொட்டாஷ் பாக்டீரியா தரைவழி தரவும்.
மாதம் ஒருமுறை 180 லிட்டர் தண்ணீருடன் 20 கிலோ கடலைப் புண்ணாக்கு கலந்து கரைத்து மூன்று நாள் ஊறவிட்டு பின்பு தலைக்கு ஒரு மரத்துக்கு ஒரு லிட்டர் என தரைவழி தரலாம்.
நான்கு மாதத்திற்கு ஒரு முறை எலும்பு உரம் ஒரு மரத்திற்கு அரைக்கிலோ தரலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi