தேவையான பொருட்கள் :
சின்ன வெங்காயம் - 1கிலோ.
முட்டை - 10
(1 ஏக்கருக்கான அளவு)
செய்முறை :
சின்னவெங்காயத்தை ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊற வைக்கவும்.
மறுநாள் வெங்காயத்திலிருக்கும் தண்ணீரை வடித்துவிட்டு, நன்கு அரைத்து கொள்ளவும்.
அரைத்த வெங்காயத்தை மெல்லிய பருத்தி துணியில் வடிகட்டி சாறு எடுத்து கொள்ளவும்.
வெங்காய சாற்றுடன், முட்டையின் வெள்ளை கருவை மட்டும் சேர்க்கவும்.
இக்கலவையுடன் சூடோமோனஸ், வசம்புபொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்த பின்னர் தெளிப்புக்கு பயன்படுத்தவும்.
பயன்படுத்தும் அளவு :
#10 லிட்டர் தண்ணீர் : 50 மில்லி கரைசல்.
#சூடோமோனஸ் - 50 கிராம்
#வசம்பு பொடி - 50 கிராம்.
இவை இரண்டும் 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட தெளிப்பான்களின் அளவு.
இக்கரைசலை ஒரு வார இடைவெளியில் இரண்டு முறை பயிரில் தெளிக்கும்போது, மழையில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு, மீண்டும் சத்துக்களை கொடுத்து மீட்டெடுக்கும் இக்கரைசல்.
இக்கரைசலில் சேர்க்ப்படும் பொருட்களின் பயன்கள்.
*# முட்டையின்* *வெள்ளைகரு -* தழைசத்தை நிலைநிறுத்துகிறது.
*#வெங்காயம் -* கந்தகசத்தை அளிக்கிறது.
*#சூடோமோனஸ்* - இலைநுனிகருகல் மற்றும் வேரழுகல் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
*#வசம்பு -* பூச்சிகளை கட்டுப்படுத்துகிறது.
Comments
Post a Comment
Smart vivasayi