செய்யும் முன் ரெடியாக வைத்துக்கொள்ள வேண்டியவை. (*ஒரு ஏக்கருக்கு அளவு*)
(செய்முறையும், தெளிப்புக்கு அளவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
1. ஒரே நாளில் மாடு போட்ட சாணம் (basically fresh சாணம்) - 40 கிலோ
2. மாட்டு மூத்திரம் - 20 லிட்டர்
3. தயிர் - 1 லிட்டர்
4. கடலைப்புண்ணாக்கு - 2 கிலோ
5. வெல்லம் - 2 கிலோ
6. கனிந்த பப்பாளி - 2 எண்ணிக்கை
7. கனிந்த வாழைப்பழம் - 10 எண்ணிக்கை
8. பரங்கிப்பழம் - 1 எண்ணிக்கை
9. முருங்கை இலை - 1 கிலோ அளவில்
10. பேரீச்சம்பழம் - 100 கிராம் (இது முடிந்தால் போடலாம்)
11. திரவ உயிர் உரங்கள் (இருந்தால் கலந்துவிடவும் நல்ல பலன் இருக்கும்) - 100 மில்லி
12. மீன் அமிலம் (இருந்தால் கலந்துவிடவும் நல்ல பலன் இருக்கும்) - 1 1/2 (ஒன்றரை) லிட்டர்
*செய்முறை*
நிழலில் வைத்து தயார் செய்ய வேண்டும்
ஒரு பெரிய பிளாஸ்டிக் டிரம்மில், அனைத்தையும் கலந்து, கூழ் பதத்திலேயே வைத்திருக்கவும்.
(நிலத்தில் விடும் போதோ அல்லது தெளிப்பானில் (sprayer) இடும்போது மட்டும் தண்ணீர் கலந்து கொண்டால் போதும்.. கூழ் பதத்தில் தான் நுண்ணுயிரிகள் நன்கு பெருகும்)
# கூழ் பதத்தில் உள்ள கரைசலை ஒரு நாள் விட்டு ஒரு நாள் கலக்கிவிடவும்.
# ஆறாவது நாள் மேம்படுத்தப்பட்ட அமுதக்கரைசல் ரெடி!!
*அளவு*
மடையில் கலந்து விடுவதற்கு மேற்கூறிய படி செய்து ஒரு ஏக்கருக்கு விட்டு விட வேண்டும்.
தெளிப்புக்கு,
ஒரு பத்து லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் கலந்து வடிகட்டி தெளிப்பானில் விட்டு பண்ணவும்.
Comments
Post a Comment
Smart vivasayi