ஊட்டமேற்றிய ஆட்டுஎரு அல்லது மட்கியதொழுஉரத்தில் சேர்க்கப்படும் இடுபொருட்களின் விவரம்.
பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி அல்லது இஎம், வெல்லம், சாணிப்பால், கோமியம், பயறுமாவு, அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ், கடலைபுண்ணாக்கு, எள்ளுபுண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு, வேப்பம்புண்ணாக்கு, புங்கன்புண்ணாக்கு.
பயிர்களில் நோய்எதிர்ப்பு திறன் மற்றும் வளர்ச்சியை துரிதப்படுத்துகிறது.
*மீன்அமிலம்.*
இலைகளில் செழுமையான பச்சயத்தை நிலைநிறுத்துவதினால், ஒளிச்சேர்க்கை மேம்பட்டு, வளர்ச்சி துரிதமாய் இருக்கும்.
*இஎம் அல்லது பழக்காடி*
இதில் உள்ள வளர்ச்சி ஊக்கிகளினால், பயிரின் வேர்வளர்ச்சி விரைவாக தூண்டப்படும்.
*சாணிப்பால்*
நுண்ணுயிரிகள் சிறப்பாய் வளர்ந்திட இடைநிலை காரணியாய் செயல்படுகிறது.
*கோமியம்*
பூஞ்ஞாண தொற்றுக்களை தவிர்க்கும்.
*அசோஸ்பைரில்லம்*
தழைச்சத்தினை இயற்கையான முறையில், பயிர்கள் எளிதில் எடுத்து கொள்ள கூடிய வகையில் வளிமண்டலத்திலிருந்து உறிஞ்சி, பயிரின் வேர்கண்டத்தில் நிலைநிறுத்துகிறது.
இதனால் பயிரின் விளைதிறன் அதிகரிக்கும்.
*பாஸ்போபாக்டீரியா*
பயிருக்கு எட்டாத நிலையில் இருக்கும் மணிச்சத்தினை கரைத்து, பயிரின் வேர்கள் எளிதில் மணிச்சத்தை உறிஞ்சி கொள்ளும் வகையில் வேர்களில் வாழ்ந்து கொண்டு, மணிச்சத்தை கிடைக்க செய்கிறது.
*சூடோமோனஸ்*
வாடல் நோய், வேரழுகல், குருத்தழுகல், சாம்பல்நோய் மற்றும் பயிர்வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன்கள் மற்றும் பிற வளர்ச்சி ஊக்கிகளை சுரப்பதினால் பயிரின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிலைநிறுத்தப்படுகின்றது.
*கடலைபுண்ணாக்கு,பயறுமாவு.*
நுண்ணுயிரிகள் பல்கி பெருக, அவைகளுக்கு உணவாக அமைந்துள்ளது.
*எள்ளு புண்ணாக்கு*
நுண்ணுயிரிகளின் வளர்ச்சிக்கும், மண்ணில் இரும்புசத்தை கூட்டுகிறது.
இதனால் விளைச்சல் அதிகரிக்கும்.
*வேப்பம்புண்ணாக்கு,* *புங்கன்புண்ணாக்கு,* *ஆமணக்கு புண்ணாக்கு*
பூஞ்ஞானம், பாக்டீரியா தொற்றுகளால் வேர்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்துகிறது.
பயிரின் நடவின், பத்தாவது நாளில் தூளாக்கப்ட்ட ஆட்டுஎரு அல்லது தொழுஉரத்துடன் இப்புண்ணாக்குகளை கலந்து மண்ணில் பரவலாக தெளித்து விடும்போது,வேர்சம்பந்தமான நோய்கள் கட்டுபடும்.
இது போன்று, ஒரு பயிருக்கு தேவைப்படும் ஊட்டங்களையும், நோய்களுக்கு எதிரான எதிர்ப்புதிறனையும் சரிவிகிதத்தில் கலந்த சிறப்பான கலவையே ஊட்டமேற்றிய எரு ஆகும்.
இவ்வாறாக எருவில் இடுபொருட்களை கலந்து, ஏழு நாட்களில் அந்நுண்ணுயிரிகள் பல்கி பெருக எரு ஊடகமாக செயல்படுகிறது.
ஊட்டமேற்றிய எரு,பயிர்வளர்ச்சிக்கான பஞ்சகவியம், மீன்அமிலம் போன்ற இடுபொருள்களின் அதிகபடியான பயன்பாட்டை குறைத்து, நம் செலவையும் கட்டுப்படுத்தும்.
*ஊட்டமேற்றிய உர* *பயன்பாடு,* *செலவீனங்களை* *குறைக்கும்.*
*இயற்கை வழி* *பண்ணைகளில்* தற்சார்பை மேம்படுத்தும்* .
*ஊட்டமேற்றிய ஆட்டு எரு தயாரிக்கும் முறை*
நன்கு தூளாக்கப்பட்ட ஆட்டுஎரு - 100 கிலோ.
பஞ்சகவியம் - 1லிட்டர்
மீன்அமிலம்- 1லிட்டர்
பழக்காடி - 1லிட்டர்
வெல்லம் - 2 கிலோ.
பயறுமாவு - 5 கிலோ
சாணிப்பால் - 10 லிட்டர்
கோமியம் -.10 லிட்டர்.
அசோஸ்பைரில்லம் - 1 கிலோ.
பாஸ்போபாக்டீரியா - 1கிலோ.
சூடோமோனஸ் - 1கிலோ
கடலைபுண்ணாக்கு -.10 கிலோ
எள்ளுபுண்ணாக்கு - 10 கி
ஆமணக்கு புண்ணாக்கு - 10 கி.
#ஆட்டு எருவை, டிராக்டர் விட்டு மிதித்து, நன்கு தூளாக்கி கொள்ளவும்.
# தூளாக்கப்ட்ட எருவை பரப்பி அதன் மேல் பஞ்சகவியம், மீன்அமிலம், பழக்காடி ஆகியவற்றுடன் சமபங்கு தண்ணீர் கலந்து எரு மேல் தெளிக்கவும். #கடலைபுண்ணாக்கை இரண்டு நாட்களுக்கு முன்னரே தண்ணீரில் ஊறவிட்டு, புளிக்க விடவும்.
# எள்ளு, ஆமணக்கு புண்ணாக்கு, ஆகியவற்றை எரு மேல் பரவலாக தூவவும்.
# வெல்லத்தை தண்ணீர் விட்டு கரைத்து கரைசலாக்கிய பின்னர், எருவின் மேல் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, சூடோமோனஸ் போன்ற உயிர் உரங்களை தூவி, நுண்ணுயிரிகள் பல்கி பெருக பயறுமாவையும் தூவவும்.
# இடுபொருட்கள் தூவப்பட்ட எருவின் மேல் கடலைபுண்ணாக்கு, வெல்லம், கோமியம், சாணிப்பால் கலந்த கரைசலை எரு முழுவதும், நன்கு நனையும்படி தெளித்து, எருவை நன்கு கலந்து குலியலாக சேர்த்து மரநிழலில் தென்னஓலை போட்டு மூடி 7 நாட்கள் வைக்கவும்.
தினமும் எருவின் மேல் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து எரு மேல் தெளித்து வரவும்.
# 7 நாட்களுக்கு, பிறகு ஆட்டு எரு, இயற்கை இடுபொருள்களில் உள்ள நுண்ணுயிரிகள் பல்கி பெருகி, ஊட்டமேறிய உரமாக தயாராகி இருக்கும்.
இந்த ஊட்டமேற்றிய ஆட்டுஎருவை, பயிரின் வளர்பருவம், பூக்கும்பருவம், காய்க்கும் பருவம் என அனைத்து நிலைகளிலும் தரலாம்.
ஊட்டமேற்றிய ஆட்டு எரு போட்டவுடன் பயிரில் உடனடி மாற்றத்தை காணலாம
Comments
Post a Comment
Smart vivasayi