Care Schedule of Cumin Samba Paddy Crop
வயது : 130 லிருந்து 135 நாள் வரை*.
நாற்றுக்களை குறைந்த நாள் வயதில்(16 லிருந்து 24 நாள்) நடவு செய்வதால் பக்க கிளைப்புகள் மிக அதிகமான எண்ணிக்கையில் உருவாகும்.
ஒருங்கிணைந்த உரம், களை, தெளிப்பு, பாசன நிர்வாக முறைகளை திறம்பட கையாளுவதன் மூலம் நெல்லின் வளர்இளம் பருவத்தில் ஒத்த வயதுடைய பக்க கிளைப்புகள் உருவாகுவதற்கு ஏதுவாகும். இதன் மூலம் தாமதமாக, பின்வரும் கிளைப்புகளில் நெற்கதிர்கள் இல்லாமல் போவதை தடுக்கலாம் .
ஒருங்கிணைந்த பயிர் வளர்ச்சி முறையால் தோன்றும் பக்ககிளைப்புகள் அனைத்திலும் நெற்கதிர்கள் உருவாகி நிறைந்த மகசூலை அடையலாம்.
ஓருங்கிணைந்த, பயிர்பாதுகாப்பு மற்றும் பயிர்வளர்ச்சி அட்டவணையை செயல்படுத்துவதால், பயிரின் வளர்ச்சியை சிறப்பாக முறைபடுத்தலாம்.
நடவு நிலத்தில் அடியுரமாக ஏக்கருக்கு 200 கிலோ ஊட்டமேற்றிய தொழு உரம், 200 லிட்டர் ஜீவாமிர்தம், 2 கிலோ சூடோமோனாஸ் பாசனநீரில் கலந்து விட்டு பறம்பு ஓட்டி நிலத்தை சமன்படுத்த வேண்டும்.
நாற்றுக்களை நடவு போட்ட பின்னர், நிலத்தில் லேசான இறுக்கம் வந்த பின்னர் தண்ணீர் பாய்ச்சுவதால், நாற்றின் வேர்பிடிப்புதிறன் சிறப்பாக இருக்கும்.
நடவிலிருந்து 3 ம் நாள் உயிர்தண்ணீர் விட வேண்டும், பாசன நீரில் ஜீவாமிர்தம் 200 லிட் கொடுக்கலாம்.
10 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
18வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 m
20 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா பத்து லிட்டருக்கு 200 மில்லி கலந்து தெளிக்கலாம் மாலையில் இஎம் கரைசல் தரைவழி ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
25 வது நாள் --மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
30 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
32 வது நாள் -- கோனோவீடர்(கோனோவீடர் போடும்போது பயிர்களின் இடைவெளியில் உள்ள களைகளை ஆட்களை வைத்து கைகளை எடுக்க வேண்டும்
35 வது நாள் காலையில் ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் சூடோமோனஸ் தரைவழி தரலாம். மாலையில் பொன்னீம் கரைசல் தெளிக்கலாம்.
37 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 200 மில்லி கலந்து கொடுக்கலாம்.
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
43 வது நாள் -- ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
48வது நாள் -- இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
55 வது நாள் பொன்னீம் ஸ்பிரே
60 வது நாள் -- காலையில் பஞ்சகாவியா 10 லிட்டருக்கு 100 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
70 வது நாள்-- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml
75 வது நாள் -- அக்னிஅஸ்திரம் ஸ்பிரே.
80 வது நாள் -- காலை 10 லிட்டருக்கு 50 மில்லி சூடோமோனஸ் தெளிப்பாக தரலாம். மாலையில் இ.எம் கரைசல் தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் கொடுக்கலாம்.
85வது நாள் -- 10 லிட்டருக்கு 500 மில்லி என கலந்து தேமோர் கரைசல் அல்லது 300 மில்லி பஞ்சகவியா அல்லது இஎம் கரைசல் தெளிக்கலாம்
90 வது நாள் --ஜீவாமிர்தம் ஏக்கருக்கு 200 லிட்டர் கலந்து தரைவழி கொடுக்கலாம்.
95 வது நாள் -- காலையில் வசம்பு கரைசல் பத்து லிட்டருக்கு ஒரு லிட்டர் கலந்து தெளிக்கலாம்
மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
102 வது நாள் -- மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
106வது நாள் -- கற்பூர கரைசல் அல்லது பவேரியா பேஸியாநா (10 லிட்டருக்கு 50 மில்லி) கலந்து தெளிக்கலாம்.
110 வது நாள் -- பாஸ்போ பாக்டீரியா ஒரு ஏக்கருக்கு 2 கிலோ தரைவழி தண்ணீருடன் கலந்து தரவும்.
115 வது நாள் -- இஎம் கரைசல் தரைவழி ஏக்கருக்கு இரண்டு லிட்டர் கலந்து கொடுக்கலாம்.
120 வது நாள் -- காலை சூடோமோனஸ் ஐ பத்து லிட்டருக்கு 50 மில்லி கலந்து தெளிக்கலாம். மாலையில் மீன்அமிலம் தரைவழி ஏக்கருக்கு 750 ml.
இது போன்ற திட்டமிட்ட பயிர் வளர்ப்பு நமக்கு இரசாயன விவசாயத்தின் விளைச்சலை காட்டிலும் இன் இருமடங்கு இலாபத்தையும், விளைச்சலையும் அள்ளி தரும்.
Comments
Post a Comment
Smart vivasayi