*முட்டைப் பருவம்* முட்டையிலிருந்து வெளி வர 3 முதல் 5 நாட்கள் ஆகும்
புழு பருவம் 10 முதல் 14 நாட்கள் வரை இருக்கும் புழு பருவம் தான் அதிகம் பயிரை சேதப்படுத்தும்.
*கூட்டுப்புழு பருவம்* 7-9 நாட்கள்
*முதிர்ந்த பருவம்* 5-7 நாள்
மொத்தம் 20 முதல் 25 நாட்கள் இருக்கும்
எந்த ஒரு புழுவிற்கும் 4 பருவம் இருக்கும்
4 பருவத்திற்கும் எதிர்ப் பூச்சிகள் உண்டு
முட்டை பருவம்
புழுவின் முட்டை பருவத்தை கட்டுப்படுத்த எதிர்பூச்சியான டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி உள்ளது
இவை ஒரு அந்துபூச்சி இது பச்சை புழு எங்கு முட்டை இட்டுள்ளதோ அதில் தன்னுடைய முட்டைகளை இட்டு அழிக்கக் கூடியது ஒரு குண்டு ஊசியில் 10 குளவி உட்காரும் அளவுக்கு இருக்கும் ஒரு ஏக்கருக்கு 5 சிசி அட்டை கட்டலாம்
ஒரு சிசி அட்டையில் சுமார் 10 ஆயிரம் குளவி இருக்கும்
70 சதம் முதல் 80 சதம் பெண் குளவி; இருக்கும்
ஒரு பெண் குளவி 4 முட்டைகள் இடும் 6 மாத பயிருக்கு 4 முறை கட்டலாம் பூ பூக்கும் பருவத்திலிருந்து கட்டலாம்
டிரைக்கோகிரம்மாவிற்கு உணவாக தேனை - பஞ்சில் நனைத்து ஒரு பாலித்தீன் கவரில் வைத்து (அந்த பாலித்தீன் கவரில் சிறு சிறு ஓட்டைகள் போடவேண்டும்) 5 மீட்டருக்கு ஒன்று என்ற இடைவெளியில் இலையின் அடியில் கட்டி விட வேண்டும் இவ்வாறு கூட்டு புழுவின் முட்டைப்பருவத்தை கட்டுப்படுத்தலாம் இதேபோல கரும்பு பயிரில் இடைக்கணு புழுவிற்கும் கட்டலாம். இவற்றை மழை வெயிலிருந்து பாதுகாக்க ஊடுபயிர் நெருக்கமாக தட்டைப்பயிர், உளுந்து போடலாம் காற்று அடிக்கும் திசையில் வைக்க வேண்டும்.
*புழு பருவம்*
புழு பருவம் இலை, நுனியில் முட்டையிடும். தண்டுக்குள் போகும் வரை வெளிப்பகுதியில் தான் இருக்கும். பயிரை எந்த அளவில் அதிகமாக சேதப்படுத்தி இருக்கின்றதோ, அந்த அளவிற்கு புழு நன்கு முதிர்ந்த பருவம் கொண்டதாக இருக்கும். இவற்றை கட்டுப்படுத்த புழு எவற்றை விரும்பி சாப்பிடும் என்று கண்டுபிடித்து அதனுடைய நுகர்வு வாசனைக்கு (வாடை) தகுந்தார்போல மலர்களின் வாசனை உடைய ஊடு பயிர் சாகுபடி செய்தால் இந்த புழுவை கட்டுப்படுத்தலாம்.
எதிர் பூச்சிகள்:
பொறி வண்டு, கிரைசோபா, புழு ஒட்டுண்ணி, குளவி வகைகள்
குளவி புழுவை கொட்டியவுடன் புழு மயக்க நிலையில் இருக்கும் அவற்றை தன் கூட்டிற்கு எடுத்துச் செல்லும் அந்த புழுவிற்குள் தன் முட்டையை இடும். அவை கொஞ்சம் கொஞ்சமாக புழுவை சாப்பிடும் இவ்வாறு சாப்பிட்ட உடன் குளவி இனம் கூட்டுபுழுவாக மாறி விடும். (ஒவ்வொரு புழுவிற்கும் 4 பருவம் உண்டு) அதேபோல குளவியின் கூட்டு புழு பருவம் இது. இந்த கூட்டுப்புழு பருவம்தான் நம் பயிரை சேதப்படுத்தும் குளவி புழுவை அழித்து விடும்.
இவை நம் வயலில் தங்கி இருப்பதற்கு உணவு தேவைப்படும் அவை தேனும் மகரந்தமும் இருக்கும் பயிரை சாகுபடி செய்ய வேண்டும். அவை சூரியகாந்தி, மக்காச்சோளம், ஆமணக்கு, சிறிய பூவாக இருக்கனும் வெள்ளை, மஞ்சள் கலராகவும் இருக்கனும் அவை சோம்பு, கடுகு கொத்தமல்லி போன்றவற்றை ஊடுபயிராக வளர்க்கவேணடும். பெரிய பூவாக இருக்கும் (அகலமான பூ) பயிரை நடவுசெய்யக் கூடாது. பருத்திக்கு பச்சைப்புழு அதிகமாக வரும். சூரியகாந்தியில் புழு கவரும் தன்மை இருப்பதால் பருத்திக்கு ஊடுபயிராக சாகுபடி செய்யலாம்.
கூட்டுப்புழு புருவம்.
கூட்டுப் புழுவை கட்டுப்படுத்த ஒட்டுண்ணிகள், கூட்டுப்புழு உண்ணிகளை பயன்படுத்தலாம். அவற்றிற்கு உணவும், இருப்பிடமும் தேவை.
சாறுஉறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகளை பற்றி விளக்கப்பட்டது.
விவசாயி தன்னுடைய வயலை பார்வையிட்டார் பார்வை இட்ட போது வயலில் பூச்சிகள் இருந்தன அவற்றை கட்டுப்படுத்த மருந்து அடித்தார். திரும்பவும் வயலை பார்வையிட்டபோது பூச்சிகள் சாகாமல் அவை உயிரோடு இருப்பதை கண்டார். மறுபடியும் மருந்து அடித்தார்; திரும்பவும் பூச்சிகள் அதிகமாக இருப்பதையும் பூச்சிகள் மருந்து அடித்தாலும் அவற்றை விட வீரிய மிக்கதாக இருந்தது அவற்றை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்று யோசனை செய்தார் மருந்துக்கு எதிர்ப்பு சக்தி கொண்ட பூச்சிகளை அழிக்க நாம் அவற்றிற்கு எதிர் பூச்சிகளை வயலில் விடவேண்டும் என்று முடிவு செய்தார். புழுவின் முட்டைகளை கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணியை பயன்படுத்தலாம்.
ஊடுபயிர் மூலம் பூச்சிகளின் தாக்குதலை தெரிந்து கொண்டு அதற்குரிய மாற்று பூச்சிகளை வயலில் விடலாம்.
பறவைகளின் இருக்கைகள் வயலில் ஆங்காங்கே நட்டு வைத்தால் அதில் அமரும் பறவைகள் பூச்சிகளை உணவாக சாப்பிட்டு விடும்.
வளர்ச்சி ஊக்கியான பஞ்சகவ்யம் தெளித்து பயிர் ஆரோக்கியமாக வளரும் பொழுது பூச்;சிகள் தாக்குதல் குறைவாக இருக்கும்.
இயற்கை பூச்சி விரட்டிகளை பயன்படுத்தி பூச்சிகளை அழிக்கலாம்.
ஆமணக்கு சாகுபடி செய்தால் புரோட்டினியா புழு அதிகம் தாக்கும் அவை இலை விளிம்பு பகுதியையும் நடுநரம்பு பகுதியையும் திங்காது நடுப்பகுதியை திங்கும். இலையை சல்லடைபோல் ஆக்கும் முட்டை குவியலாக இடும். இவற்றை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைத்து அதில் பெண் பூச்சியின் வாடை இருப்பதைபோல மாத்திரையை வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். ஒரு ஏக்கருக்கு 4 முதல் 10 இனகவர்ச்சி பொறி வைக்கலாம். மாத்திரையை மாற்றலாம் டெல்டா டிராப் என்பது முக்கோண வடிவ அட்டை (இனக்கவர்ச்சி பொறி) இவை முதிர்ந்த அந்துப்பூச்சி போன்ற எல்லாவகை பூச்சிகளையும் கவர்ந்து இழுத்து உள்ளே வைத்துக் கொள்ளும்.
கத்தரியில் கொண்டைப்புழுவை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி வைக்கலாம். ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக அந்துப்பூச்சியின் வாடை இருக்கும். நிறைய ஊடுபயிர் சாகுபடி செய்து பயிரி;ன் வாடையை மாற்றினால் பூச்சி நமக்கு தேவையான பயிர்; எது என்று கண்டுபிடிக்க முடியாமல் குழப்பம் அடைந்து வெளியேறி விடும்.
கடித்துண்ணும் பூச்சி, சாறு உறிஞ்சும் பூச்சி என பூச்சி இரண்டு வகைப்படும்.
பயிரில் சாற்றை உறிஞ்சும் பூச்சிகள்
அஸ்விணி
இலைப்பேன்
வெள்ளை ஈ
தத்துப்பூச்சி
மாவுப்பூச்சி
இலையை சுரண்டி இலையில் வடியும் சாறை உறிஞ்சும் பூச்சிகள் இவை எல்லாம் தனித்தனி வகைகளாக இருக்கும்.
*அஸ்வினி தாக்குதலின் அறிகுறி*
இலை பிசுபிசுப்பாக இருக்கும்
எறும்பு ஊறும்
இலையில் அடிப்பகுதி கருப்பாக இருக்கும்
அஸ்விணி அதிகம் பயிரை சாப்பிடுவதால் அதன் உடலிலிருந்து ஒரு வித திரவம் வெளிவரும் அது இனிப்பாக இருக்கும் அவற்றை சாப்பிட எறும்பு வரும்; அசுவினியில் வடியும் திரவம் எறும்புக்கு பிடித்தமான உணவாகவும், பூஞ்சாணம் நிறைந்ததாகவும் இருக்கும்.
*அஸ்வினியை கட்டுப்படுத்தும் முறை:*
ஊடுபயிராக தட்டைபயிர் வேகமாக வளரும். வி.ஆர்.ஐ, குத்துதட்டபயறு சாகுபடி செய்து கட்டுப்படுத்தலாம்.
அஸ்விணியை சாப்பிடும் பொறி வண்டு வயலில் விட்டால் 6 முதல் 10 முட்டை இடும். இவை அஸ்விணியை சாப்பிடும்.
பச்சை கண்ணாடி இறகு பூச்சி, ஒட்டுண்ணி, சிர்பிட் ஈ, இவை அஸ்விணியை ஒரு குத்து குத்தி சாப்பிடும் ஓரே சமயத்தில் ஒரு வண்டு 50 முதல் 60 அஸ்விணியை சாப்பிடும். இவற்றிற்கு ஊடுபயிர் மகரந்தம் இருக்கக் கூடிய பயிர் சாகுபடி செய்யலாம்.
*இலைப்பேன்* அறிகுறி
இலையின் அடியில் மினுமினுப்பாக இருக்கும் முழுவதுமாக இலை விரியாது இவை வறட்சி அதிகமாக இருந்தாலும், வெயில் அதிகமாக இருந்தாலும், தழைச்சத்து அதிகமாக இருந்தாலும் இலைப்பேன், சாறு உறிஞ்சும் பூச்சிகள் அதிகம் வரும். இவற்றை கட்டுப்படுத்த மஞ்சள், ஊதா வண்ண ஒட்டுண்ணி அட்டையை கட்டலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi