மண்புழு உரம் பயிருக்கு நல்ல ஊட்டச்சத்துக்களும், வளர்ச்சி ஊக்கிகளும் அளிக்கிறது. பழங்கள், மலர்கள் மற்றும் காய்கறிகளில் மண்புழு உரம் உபயோகத்தால் அதன் வைப்புத் திறன் அதிகரித்து காணப்படுகிறது. மண்புழுத் தயாரத்தலில், அநேக தனிநபர் மற்றும் நிறுவனங்களும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் அதிக அளவில் வர்த்தக ரீதியாக உற்பத்தி செய்யவும் ஆரம்பித்துள்ளனர். ஒரு கிலோ மண்புழு உரம் தயாரிக்கும் செலவு ரூ. 1.50 ஆகும், ஆனால் இதனை ரூ. 2.50க்கு விற்கலாம். மற்ற அங்ககப் பொருட்களான வேப்பம் புண்ணாக்கு, மணிலா புண்ணாக்கு, ஆகியவையும் இதே விலையில் விற்கப்படுகின்றன.
மண்புழு தயாரிக்க, வேளாண் கழிவுகள் மற்றும் மாட்டுச் சாணம் ஆகியவற்றை 1.5 மீட்டர் அகலமும் 0.9 மீட்டர் உயரப் படுக்கையாகவும், தேவையான நீளம் பரப்பி மட்கச் செய்யலாம். 300 மண் புழுக்கள் ஒரு மீட்டர் 3 கொள்ளளவுக்கு இரண்டு அடுக்குகளுக்கு இடையே விடலாம். படுக்கைகள், 40-50 சதவிகிதம் ஈரப்பதத்தில் அதன் வெப்பம் 20-30 டிகிரி செ மேல் அதிகரிக்காமல், தண்ணீர் தெளித்து பராமரிக்கவேண்டும். மண்புழுக்கள் தீவிரத் தீவனம் உட்கொள்ளும் ஆற்றல் மிக்கதால், அவை எளிதில் கிரகித்து மண்புழு உரமாக மாற்றிவிடும். மண்புழு கழிவில் பயிருக்குத் தேவையான அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
வர்த்தக ரீதியாக உற்பத்திச் செய்யும் போது முதலீடு செய்தல் சற்று அதிகமாக இருக்கும். முதலீடு செலவு ஒரு டன் தயாரிக்க ரூ. 1500 முதல் 2500 வரை தேவைப்படும். வர்த்தக ரீதியாக பெரிய அளவில் தயாரிக்க, இயந்திரங்களும், போக்குவரத்திற்கு வாகனங்களும் தேவையானதால், முதலீடு பணம் செலவு சற்று அதிகமாகும். பெரும்பாலும், இது இலாபகரமாகவே அமைகிறது. மண்புழு உரம் தயாரிக்க கீழ்க்காணும் அம்சங்களை கருத்தில் கொள்ளவேண்டும்.
மண்புழுவைப் பற்றி
இந்தியாவில் உள்ள 350 இன மண்புழுக்களில் ஈசீனியா ஃபிட்டிடா, யுர்டிலஸ் யுஜினியே, பைரினாக்ஸ் எக்ஸ்கவேட்டியல் ஆகியவை அங்ககப் பொருட்களை உரமாக மாற்ற உபயோகப்படுத்தப்படுகின்றன.
இப்புழுக்கள், தென்னை நார்க் கழிவு முதல் சமையலறை கழிவுகள் வரை அனைத்து வகையானப் பொருட்களையும், மண்புழு உரமாக மாற்றவல்லது. மண்புழு உரம் தயாரிக்கும் நிலையம், தேவையான அங்ககப் பொருட்கள் கிடைக்குமிடமாக இருத்தல் மிகவும் அவசியம். இனவிருத்தி செய்யத் தயார் நிலையிலுள்ள புழுக்கள், ஆறு வாரத்தில் 7-10 நாட்களுக்கு ஒரு முறை முட்டையிடும் தன்மையுடையது.
ஒவ்வொரு முட்டையிலிருந்து 7-10 புழுக்கள் வெளிவரும். எனவே சாதாரண தட்பவெப்பச் சூழ்நிலையில் இதன் இனவிருத்தி தன்மை மிகவும் அதிகம். முதிர்ச்சி அடைந்த மண் புழுக்களை பிரித்தெடுத்து, வெப்பக் காற்று அடுப்பில் ஊறவைத்து அதை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். ஏனெனில் அதில் 70 சதவிகிதம் புரதம் உள்ளது.நிலம் / இருப்பிடம்
மூலப்பொருள் கிடைப்பதற்கும் மண்புழு உரம் விற்பனை செய்வதற்கும் உகந்தது. நகரத்தின் சுற்று வட்டாரங்களிலும், கிராமப்புறங்களிலும் மண்புழு உரம் தயாரிக்க உகந்த இடமாகும். மண்புழு உரம், பழம், காய்கறி மற்றும் மலர்களின் தன்மையில் மாற்றம் கொண்டு வரவல்லதால், மண்புழு உரம் தயாரிக்குமிடம், அமை விளைவிக்கப்படும் இடங்களுக்கு அருகாமையிலேயே அமைக்கலாம்.
உபயோகம்
மண்புழு உரம், அங்கக கழிவுகளை மண்புழு உண்டு உரமாக வெளியேற்றுவதால், அதன் மேற்பரப்பு அதிகரித்து அதிகமாக சத்துப் பொருட்கள் கிடைக்கின்றன. மண்புழு உரம் தாது சத்துக்கள் அளிப்பதோடு மண்ணின் தன்மையும், நீர்ப்பிடிப்பு மற்றும் தாது சத்துக்களின் தன்மையையும் அதிகரிக்கின்றது. சிறிதளவு இராசயன உரங்களும் மண்புழுவுடன் சேர்ந்து அளிக்கலாம்.
மண்புழு உரம் தயாரிப்பு நிலைய அங்கங்கள்
கொட்டில் / குடிசை
மண்புழு தயாரிக்க, சிறு தொழில் மூலமாகவோ பெருமளவில் தயாரிக்கவோ, சிறந்த கொட்டில் தேவை. கொட்டிலின் கூரை சாதாரண மூங்கில் சட்டங்கள் அல்லது மரச்சட்டங்கள் வைத்து, கல் தூண்களோடு அமைக்கலாம். கொட்டிலின் அளவு சூறாவளி காற்றின் போது மழை நீர் புகாத வண்ணம் அமைக்கவேண்டும். கொட்டகை அமைக்கும் போது, வேலையாட்கள் சுலபமாக வேலை செய்யும் வகையில், படுக்கைகளை சுற்றி இடம் விட்டு அமைக்கலாம்.
மண்புழு படுக்கை
பொதுவாக, மண்புழு படுக்கைகள், 75 செ.மீ முதல் 90 செ.மீ தடிமனாக இருந்தால், வடிகால் வசதிக்கும் ஏதுவாகும். மண்புழு படுக்கைகள், நிலத்தின் மேற்பரப்பில் இருக்குமாறு அமைக்கவேண்டும். எல்லாப் படுக்கைகளும் ஒரே சீராக, ஒரே அடர்த்தியுள்ளவாறு அமைத்தல், மண்புழு உர உற்பத்தி குறைவதைத் தவிர்க்கலாம். படுக்கையின் அகலம், 1.5 மீக்கு குறைவாக அமைத்தல் பராமரிப்பது சுலபம்.
மண்புழு உற்பத்தி மற்றும் விரிவாக்க மையம் அமைக்க சுமார் 0.5-1 ஏக்கர் நிலம் தேவைப்படும். இம்மையத்தில் குறைந்தபட்சம் 180-200 சதுர அடிக்கொண்ட 8-10 குடிசைகள் போடவேண்டும். இதில் நீர் இறைக்க குழாய்க்கிணறு பாய்ச்சும் கருவிகளும் அடங்கும். நிலங்களை 10-15 ஆண்டு குத்தகையிலும் வாங்கலாம். இறுதிநிலை வளம கொண்ட நிலமும் உபயோகிக்கலாம்.
கட்டிடங்கள்
வர்த்தக ரீதியாக பெரு அளவில் தயாரிப்பு நிலையம் ஏற்படுத்தும் போது, (கணிசமான அளவு) கட்டிடங்கள் கட்டப் பணம் செலவிடப்படவேண்டும். கட்டிடத்தின் மின்சார இணைப்புகள் மற்றும் மண்புழு படுக்கைகள் / குடிசை அமைப்புகளும் இதில் அடங்கும்.
விதைக் கையிருப்பு
விதைக் கையிருப்பு என்பது ஓர் முக்கியமான மூலதனமாகும்.
மண்புழுக்கள் அதிவேகத்தில் இனவிருத்தி செய்து ஆறுமாத இடைவெளியிலேயே தேவையான அளவு மண்புழு தயாரிக்க இயலும், இருந்த போதிலும் (நீண்ட காலம்) அதிக முதலீடு செய்தபின், பொறுத்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனவே, ஒரு மீ 3க்கு 350 புழுக்கள் வீதமே தேவையான புழுக்கள் எண்ணிக்கையைக் கொண்டு 2/3 சுழற்சியில் உற்பத்தியை பாதிக்காத வண்ணம் வளர்க்கலாம்.
வேலி மற்றும் சாலை / வழி
மண்புழுக் குழியிலிருந்து மூலப்பொருட்களும், மண்புழு உரம் போன்றவைக் கையால், இழுக்கப்படும் தள்ளுவண்டியில் எடுத்துச் செல்ல சாலை / வழிகள் அமைக்கவேண்டும்.
விலங்குகள் நடமாட்டத்தைத் தடுக்க முழுப்பகுதியும் வேலி அமைக்கவேண்டும். வேலி மற்றும் சாலைகள் அமைக்க அதிகப் பணம் செலவிடக்கூடாது ஏனெனில் இது உற்பத்திச் செலவில் நேரடி தொடர்புடையதானது மட்டுமல்லாது உற்பத்தியை அதிகரிக்க எந்த வகையிலும் உதவாது.
தண்ணீர் அமைப்பு
மண்புழுப் படுக்கைகள் எப்பொழுதும் 50 சதவிகிதம் ஈரப்பதம் காக்க வேண்டியிருப்பதால் நீர்த்திட்டம், நீர் ஆதாரம், இறைப்பு சாதனம் மற்றும் நீர் கொண்டுச் செல்லும் சாதனம் மிகவும் அவசியமாகும். இவ்வகை அமைப்பை ஏற்படுத்த கணிசமான முதலீடுத் தேவையாயிருந்தாலும் வேலையாட்கள் கையால் கொண்டு நீர்த் தெளிப்பதை விடக் குறைந்த இயக்கச் செலவேயாகும். மண்புழுத் தயாரிப்பு நிலையத்தில் திறனையும், நீர் அமைப்பின் அளவைப் பொருத்து விலை மாறுபடும்.
இயந்திரங்கள்
பண்ணை இயந்திரம் மற்றும் கருவிகள், மூலப்பொருட்களை வெட்டவும், அவற்றை படுக்கைகளில் பரப்பி வைக்கவும்.
சரக்கு ஏற்ற, இறக்க மண்புழு உரம் சேகரிக்க, படுக்கைகளுக்கு காற்றோட்டம் தர, உரம் மூட்டைக்கட்டி எடுத்துச் செல்ல, கம்போஸ்ட்டை உலரவைத்து தானியங்கி மூலம் கட்டி பேக் செய்யத் தேவை. கருவிகள் மற்றும் இயந்திரச் செலவுகளும், திட்டச் செலவுகளில் சேர்த்துக் கணக்கிடவேண்டும்.
போக்குவரத்து
மண்புழு உரம் தயாரிக்கும் நிலையத்திற்கு போக்குவரத்து மிகவும் இன்றியமையாதது. மண்புழு உரம் தயாரிப்பு மூலப்பொருள், நிலையத்திலிருந்து தூரத்திலிருந்தால், அவற்றைக் கிடங்கிற்கு கொண்டு வர போக்குவரத்து மிகவும் அவசியம். ஆண்டிற்கு 1000 டன் உற்பத்திச் செய்யக்கூடிய நிறுவனத்திற்கு 3 டன் திறன் கொண்ட சிறு டிராக்டர் தேவை. சிறு தொழில் மூலம் உற்பத்திச் செய்யப்படும் நிலையங்களில் மனிதனால் இயக்கக்கூடிய கைவண்டியே போதுமானது.
நாற்காலி, மேஜை போன்ற சாதனங்கள் அலுவலகம் மற்றும் சேமிப்புக் கிடங்குகளில் வைக்கக்கூடிய அடுக்கு அலமாரி போன்ற பிற சாதனங்களும் வாங்கி உபயோகித்தால், வேலைப் பலுவைக் குறைத்து சுலபமாக செய்ய உதவும்.
செயல் விலை
நிறுவன நிர்வாகத்தில் சிலவற்றை தேய்மான விலையின் கீழ் செலவுகளை செய்யவேண்டும். அலுவலர்களின் சம்பளம், கூலியாட்களின் சம்பளம், மூலப்பொருட்களின் விலை, போக்குவரத்து சாதனத்தின் எரிபொருள் விலை, உற்பத்திச் செய்யப்பட்ட பொருள், சிப்பமிடும் செலவு, பழுது பார்த்து பராமரிக்கும் செலவு, மின்சாரம், காப்பீடு போன்ற அம்சங்களும் இதில் அடங்கும்.
ஒவ்வொரு நாளும் ஆட்களின் வேலைகளை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்தளித்து நாளின் இறுதியில் அதைச் செவ்வனே முடிக்க அறிவுறுத்தலாம். தேவையான வேலையாட்களை தெரிவு செய்து, நாள் முழுவதும் வேலை செய்யத்தக்கதாக அவர்களுக்குத் தேவையான கருவிகள் மற்றும் இயந்திரங்களை அளித்து காலத் தாமதமில்லாமல் செய்ய வசதி வாய்ப்புகள் ஏற்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment
Smart vivasayi