விவசாயிகள் என்னதான் வயலில் கடுமையாக உழைத்தாலும் புயல் , வறட்சி அதையும் தாண்டி பூச்சி நோய் தாக்குதல், இதையெல்லாம் மீறி விற்பனைக்கு வந்தாலும் சரியான விலை நிர்ணயம் கிடைப்பதில்லை . இது போன்ற சமயங்களில் உறுதுணையாக நிற்பது கால்நடைகளே . ஆனால் அந்த கால்நடைகளுக்கும் பிரச்சனை வந்தால் என்ன செய்வது . கட்டாயமாக பொருளாதார ரீதியாக விவசாயி பாதிப்படைவது நிச்சியம் , அதே சமயம் கால்நடைகளை இன்சூரன்ஸ் செய்வதால் ஏற்பட்ட இழப்புகளை ஓரளவு சரிசெய்ய முடியும்.
முதலில் எந்த வகையான கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்யலாம் என்று பார்ப்போம்
கோழி பசு, எருமை, பொலி காளை, காளை மாடு, வெள்ளாடு, செம்மறி, மற்றும் பன்றி போன்ற கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் செய்து கொள்ளலாம்
காப்பீட்டை பொறுத்தவரை கால்நடைகளுக்கு மூன்று விதமான காப்பீடுகள் உள்ளன
இழப்புக் காப்பீடு
எதிர்பாராத விதமாக கால்நடைகள் இறக்க நேரிட்டால் தருவது இழப்புக்காப்பீடு ஆகும் உதாரணமாக விபத்தில் இறந்தாலோ அல்லது நோய் தாக்கி இறந்திருந்தாலோ காப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களினாலோ அல்லது கலவரங்களினாலோ , விஷக்கடியால் கால்நடைகள் இறந்து போனால் நீங்கள் இழப்பு காப்பீடு கோரலாம்
ஊனக் காப்பீடு
இந்தவகை காப்பீடு நிரந்தர ஊனமடைந்த கால்நடைகளுக்காக வழங்கப்படுகிறது . அதாவது வேலைக்காக பயன்படுத்தப்படும் கால்நடைகள் ஊனமடையும்போது கோரலாம் , பொலிகாளைகளை இனவிருத்திக்காக பயன்படுத்த முடியாமல் போகும்போது , பசுக்களில் மலட்டுத்தன்மையோ அல்லது பால் உற்பத்தி பாதிக்கப்பட்டாலோ இந்தவகை காப்பீட்டை கோரலாம் . காப்பீட்டை கூறும்பொழுது சிகிச்சை செய்த ஆவணங்களை வைக்க வேண்டும்
இடமாற்றக் காப்பீடு
கால்நடைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றும்போது ஏற்படும் இழப்பிற்கு கோருவதாகும். இந்த திட்டத்தின் கீழ் பயன் பெற பயண தூரம் குறைந்த பச்சம் 80 கிலோமீட்டர் தூரம் இருக்க வேண்டும் .
கவனிக்க வேண்டியவை
மேற்கண்ட காப்பீடுகள் செய்வதற்கு முன்போ அல்லது காப்பெடு செய்து 15 நாட்கள் உள்ளோ விபத்தோ அல்லது நோய் வாய்ப்பட்டு இறந்தாலோ இழப்பீடு கூறமுடியாது வெக்கை நோய், அடைப்பான் தொற்று நோய், கோமாரி போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இறந்து போனாலோ காப்பீடு கிடைக்காது.
கருணைக்கொலை செய்யப்பட்ட கால்நடைகள் பாலிசியில் கூறப்பட்டுள்ள பயன்பாட்டைத்தவிர வேறு வேலைகளுக்கு பாலிசி நிறுவனத்தின் ஓப்புதல் இன்றி பயன்படுதியிருந்தால் கோரமுடியாது மேலும் திருடப்பட்டு இருந்தாலோ அல்லது காதுவில்லை இல்லையெனில் காப்பீடு கிடைப்பதில்லை கறவை மாடுகள் இருந்தால் 2 முதல் 10 வயதுக்கு லேயும் எருமை மாடுகளாக இருந்தால் 3 முதல் 12 வயதிற்குள் இருக்கவேண்டும். பொலிகாளைகளாக இருந்தால் 8 வயது வரையிலும் , விரை நீங்கியவையாக இருந்தால் 12 வயது வரை காப்பீடு செய்துகொள்ளலாம் .
காப்பீடு நடைமுறை
முதலில் தகுதி பெற்ற ஒரு கால்நடை மருத்துவரை அணுகி நீங்கள் வாங்க போகும் கால்நடையின் சந்தை மதிப்பை நிர்ணயித்து சான்றிதழ் வாங்க வேண்டும். கால்நடையின் இனம், வயது, பாலினம், இடம் போன்றவற்றோடு கால்நடை அடையாள எண்ணும் இந்த சான்றிதழில் இடம் பெற வேண்டும். கால்நடை அடையாள எண் பொறிக்கப்பட்ட வில்லையை கால்நடையின் காதில் பொருத்தி வில்லை, உரிமையாளர், கால்நடை மூன்றும் தெரியுமாறு புகைப்படம் எடுக்க வேண்டும். காப்பீட்டு முகவர், கால்நடை முகவர் மற்றும் முகவர் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கால்நடையின் சந்தை மதிப்பை நிர்ணயித்து சந்தை மதிப்பில் நூறு சதவீதத்திற்கு மிகாமல் காப்பீடு செய்யலாம்.
நீங்கள் காப்பீடு செய்த கால்நடை இறந்துவிட்டால் உடனடியாக காப்பீட்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தகுதிவாய்ந்த கால்நடை மருத்துவர் இறப்புப்பற்றி சோதனை செய்து சான்றிதழ் வழங்க வேண்டும். இறப்புப்பற்றி சோதனையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மருத்துவரின் சான்றிதழோடு கால்நடையின் அடையாள வில்லையையும் இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே காப்பீட்டுத் தொகை பெற முடியும்.
.
Comments
Post a Comment
Smart vivasayi