1. நாட்டுக்கோழிகளில் இளங்குஞ்சுக் காலமானது 0.8 வார காலமாகும் .
2.தாய்க் கோழிகளுடன் உள்ள ' குஞ்சுகளுக்குத் தனியாக வெட்டம் (brooder)அளிக்கத் தேவையில்லை . தாய்க் கோழி அரவணைப்பில் மற்றும் சூட்டில் அது வாழத் துவங்கிவிடும் .
3.ஆனால் பண்ணையாக நாம் அமைக்கும் பொழுது , குஞ்சுக்கூடு ( Brooder ) வசதி செய்து கொடுக்க வேண்டும் . அட்டைகள் அல்லது தகரம் கொண்டு வட்ட வடிவக் குஞ்சுக்கூடு உருவாக்க வேண்டும் . இதனுள் செய்தித்தாளைப் பரப்பி விட வேண்டும் .
4. மின்சார விளக்குக் கொண்டு சூடு கொடுக்கலாம் . ஒரு கோழிக் குஞ்சிசுக்கு ஒரு வாட் என்ற அளவில் வெப்பம் அளிக்க வேண்டும் .
5. மின்சாரம் சரிவர கிடைக்காத இடங்களில் கரி அல்லது மண்ணெண்ணெய் அடுப்புகள் மூலம் சூடு கொடுக்கலாம் . இதற்கான பிரத்தியேகமாக உள்ள மண்பாணைகளில் அடுப்புக் கரி கொண்டு தணல் மூட்டியும் , செயற்கை வெப்பம் அளிக்கலாம் . இந்த அடுப்புகளின் மேல் இரும்புத் தட்டுகளைச்
சுற்றிலும் கம்பிவலையிலான தடுப்புகளைம் அமைப்பதால் குஞ்சுகளுக்கு நெருப்பினால் வரும் அபாயங்களைத் தவிர்க்கலாம் .
6. வெப்பம் கொடுக்கும் நேரம் மற்றும் அளவு , தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தவாறு மாற்றிக் கொள்ளவேண்டும் . வெயில் காலங்களில் சற்று வெப்பம் குறைத்தே கொடுக்கலாம் . மழை மற்றும் பனிக் காலங்களில் முழு நேரம் வெப்பம் கொடுக்க வேண்டும் .
7. இந்த மின் விளக்கு மூலம் வெளிச்சம் கொடுப்பதால் தாய்க் கோழிகளைப் போல் சூடு கிடைக்கிறது ,
8.முட்டையில் இருந்து குஞ்சுகள் வெளியே வரும் போது சிறுதளவு மஞ்சள் கரு உள்ளே எடுத்து வருகிறது . இந்த மஞ்சள் கரு ஒரு வாரத்தில் கறைந்து விடும் . முதல் இரண்டு நாள்களுக்கு இது குஞ்சுகளுக்கு உணவாகவும் பயன்படும் . இந்த மஞ்சள் கரு கறைவதற்கும் இந்தக் குஞ்சுக்கூடு தேவைபடுகிறது . இது போல் வளர்த்தபடும் கோழிக் குஞ்சுகள் முட்டையிடும் பருவத்தைச் சரியான நேரத்தில் அடைந்து விடுகின்றன .
9. குடிநீர் மற்றும் தீவனம் வைக்கும் கலன்களை நன்றாகக் கழுவி , வெயிலில் காய வைத்துத் தயார் நிலையில் வைக்கவும் . ஆனால் இது அனைத்தும் குஞ்சுகள் வருவதற்கு முன் சரி செய்து வைக்க வேண்டும் .
10. முதல் வாரம் , தண்ணீரைக் காய வைத்துக் கோழிக் குஞ்சுகளுக்குப் பருகக் கொடுக்கலாம் . குளுக்கோஸ் அல்லது கருப்பட்டியை சேர்த்துக் கொடுக்க வேண்டும் .
11. தேவையில்லாமல் மருந்துகள் எதுவும் கொடுக்க வேண்டாம் .
12. குஞ்சுகளுக்கு முதலில் தீவனத்தை , தீவனத்தொட்டியில் அளிக்கத் தேவையில்லை . அதற்குப் பதிலாக ரவை மற்றும் குஞ்சுத் தீவனத்தைச் செய்தித்தாளின் மேல் தூவி விடவேண்டும் .
13. சூடேற்றும் உபகரனங்கள் மூலம் முதல் இரண்டு அல்லது மூன்று வாரம் வெப்பம் கொடுக்க வேண்டும் .
14. முதல் மூன்று நாள்களுக்குக் கோழி முட்டைகளை நன்றாக வேக வைத்துத் , தோலை உரித்து நன்றாகப் பிசைந்து அளிக்க வேண்டும் , இதனுடன் அரைத்த பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கலவையாக்க வேண்டும் .
இதனைத் தினமும் இரண்டு முறை குஞ்சுகளுக்கு அளித்து வந்தால் நலிந்த மற்றும் சோர்வாகக் காணப்படும் குஞ்சுகளில் மாற்றம் காணப்படும் .
15. தினமும் செய்தித்தாள்களை மாற்றி விட வேண்டும் .
16. அதிக நாள்கள் செய்தித்தாள் உபயோகம் செய்தால் , கோழிகளின் கால்கள் வழுக்கத் தொடங்கி விடும் . முடங்கி விடும் .
17. முதல் வாரத்தில் குஞ்சுகள் எச்சம் போட குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலை முடியாமல் இறப்பதை நாம் பார்க்கலாம் . இந்த நிலையைச் சால்மோனேல்லோஸில் எனப்படும் .
இது தாய்க் கோழிகளிலிருந்து , முட்டைக்குப் பரவி , குஞ்சுகளுக்குத் தொற்றிக்கொள்ளும் . இந்த நோயிக்குச் சிகிச்சை அளிக்கும் போது , தாய்க் கோழிகள் மற்றும் குஞ்சுகளுக்கும் சேர்த்துச் சிகிச்சை அளிக்க வேண்டும் . மஞ் சன் கரு சரியாகக் கரையாமல் தங்கிவிட்டாலும் , கோழிக் குஞ்சுகளில் தொட்டள் அழற்சி ஏற்பட்டு இறக்க நேரிடலாம் .
18. வெள்ளைக்கழிச்சல் நோய் ( இராணிக்கட் ) வராமல் தடுக்க 7 ம் நாள் RDVF1 , 28 வது நாள் லசோட்டா போன்ற தடுப்பூசி மருந்துகளைக் கண்ணில் சொட்டு மருந்தாகவும் 8 வது வாரம் RDVK ( அ R2B தடுப்பூசியைப் போடவேண்டும் . வெள்ளைக் கழிச்சல் நோய் , கோழியினங்களைத் தாக்கி மிகவும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நச்சுயிரி நோயாகும் . முதல் வாரத்திலும் அதனைத் தொடர்ந்தும் வெள்ளைக் கழிச்சல் நோய்த் தடுப்புச் செய்ய வேண்டும் .
19. நோய் கண்ட நிலையில் கீழ்கண்ட மூலிகை மருத்துவம் பயன்படுத்தலாம் . கீழாநெல்லி - 50 கிராம் , சின்ன வெங்காயம் - 5 , சீரகம் - 10 கிராம் , 100 கிராம் வெல்லத்துடன் அரைத்து ஒரு நாளைக்கு மூன்று முறையென மூன்று நாளைக்கு வாய் வழியாகக் கொடுக்க வேண்டும் . இந்தக் கலவை 10 கோழிகளுக்குப் போதுமானது .
நோய்க் கண்ட கோழிகளிலும் இது நல்ல பலனை அளிக்கும் .
29. 15 கிராம் சீரகத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் காய்ச்சி அதனைக் கோழிகளுக்குப் பருகக் கொடுக்க வேண்டும் . மேலும் 5-10 மில்லி லிட்டர் பூண்டுச் சாறு 1 லி தண்ணீரில் கலந்து கோழிக் கொட்டகையில் தெளிக்கவும் ,
21. வாழைத் தண்டை நன்றாக அறைத்து அதன் சாற்றை வெறும் வயிற்றில் கோழிகளுக்குக் கொடுப்பதால் கழிச்சலைக் கட்டுப்படுத்தலாம் . எலக்டரால் பொடி அல்லது குளுகோசு கலந்த தண்ணீரைக் கோழிகளுக்குக் கொடுப்பது கழிச்சல் நேரத்தில் தேவையான சத்தைக்
கொடுக்கும் .
22. குப்பைமேனி இலை மற்றும் கீழாநெல்லி இலை போன்றவற்றைக் கோழிகளுக்குக் கொடுப்பது , வெள்ளைக்கழிச்சல் நோய்க்கு நல்ல தீர்வாகும் . சீரகம் மற்றும் கீழாநெல்லியை இடித்துப் பின்பு இக்கலவையைத் தீவனம் அல்லது அரிசிக் குருணையில் கலந்து கொடுக்கவும் .
23. மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்குச் சிறு சிறு உருண்டைகளாக ஊட்ட வேண்டும் . தொடர்ந்து மூன்று முதல் ஐந்து நாள்கள் கொடுக்க வேண்டும் . கோடை மற்றும் மழைப் பருவங்களில் ஏற்படும் தட்ப வெட்ப மாற்றங்களில் இந்த நோயின் தீவிரம் அதிகரிக்கும் . இதனைத் தடுக்க மேற்கண்ட மருத்துவம் முன்கூட்டியே செய்யலாம் . இவ்வாறு கடைபிடித்து வந்தால் , தீவன உற்பத்திச் செலவைக் குறைத்துக் கோழி ஒன்றுக்குக் கிடைக்கின்ற நிகர இலாபத்தை அதிகரித்து இத்தொழிலை நிலைநாட்டலாம்
Comments
Post a Comment
Smart vivasayi