Skip to main content

ஆட்டுப் பண்ணை தொடங்க முடிவு செய்துள்ளேன். தாங்கள் எனக்கு கூறும் அறிவுரைகள் என்ன?

அதிக இலாபம் தரும்தொழில்களில் ஒன்றாக ஆட்டு பண்ணை காணப்படுகின்றது.
சொந்த இடமாக இருந்தால் நல்லது 
வருமாணத்தை பார்க்க சில வருடங்கள் ஆகும்.அதுவரை நம் வீட்டு செலவுகளை 


சமாளிக்கும் அளவுக்கு நமக்கு வேறுவகையில் வருமாணம் வரனும்.சில வருடங்கள் நம் கையை எதிர்பார்க்க கூடாது.அப்படி இருந்தால் தாராளமாக முழு கவணத்துடன் பன்னையை பராமறிக்கமுடியும்.
மழைகாலங்களில் சமாளிக்க முன் ஏற்பாடு செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
மாடி கொட்டகை அமைத்து ஆட்டுப்பண்ணை பராமரிப்பது சுலபமானதும் கழிவுகளை விற்பனை செய்ய இலகுவானதாகவும் காணப்படுகின்றபோதும், நிறைய பணத்தினை இதற்கு முதலிட்ட பலர் அந்த பணத்தினை திரும்ப பெற பல காலம் ஆவதால் நட்டத்தினை சந்திக்கின்றனர்.
ஆடுகளுக்கான தவிடு போன்ற உணவுகளை வெளியிலிருந்து வாங்குவது அவை வளரும் வரை செலவுகளையே ஏற்படுத்தும். இதனாலும் பலர் போட்ட முதலை எடுக்க தாமதமாகின்றது. இதை விட வேலையாட்கள் இருந்தால் அவர்களுக்கான சம்பளம், இலை குழைகளை தொடர்ந்து பெறுவதில் உள்ள தட்டுப்பாடுகள் போன்றவை ஏற்படும்.
இயற்கையாக இலவசமாக காலைநடைகளுக்கு தீவனத்தை தொடர்ந்து தடையின்றி பெற்றுக்கொள்வதற்காக ஆடு வாங்குவதற்கு முதல் அசேலா வளர்ப்பு, புரோட்டீன் நிறைந்த புல் வளர்ப்பு போன்றவற்றை மேற்கொள்ளுங்கள்.
முதலில் வளர்ந்த குட்டி ஈனக்கூடிய இரண்டு அல்லது நான்கு ஆடுகளை மட்டும் வாங்கி கொள்ளுங்கள்.
அவற்றின் குட்டிகளையும் வளர்த்து பெருக்கி ஓரிரு வருடங்களில் செலவே இல்லாமல் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை உங்கள் பண்ணையில் பராமரியுங்கள். ஆட்டெருவினை விற்பனை செய்யுங்கள். கிடாய் ஆடுகளை மட்டும் முதலில் விற்பனை செய்யுங்கள்.
அதன்பின்னர் இரண்டு மூன்று ஆடுகளை விற்பனை செய்ததில் கிடைக்கும் பணத்தில் கொட்டகையினை அமையுங்கள்.
0 செலவில் உணவுக்கான ஏற்பாடுகள் மற்றும் பண்ணை கொட்டகை ஏற்படுத்தியதும் மீண்டும் ஆடுகளை வேண்டியளவுக்கு பெருக்கி கொண்டு பராமரிப்பதற்கு தேவையான ஆட்களையும் பணிக்கமர்த்திக்கொண்டு வருமானமீட்ட ஆரம்பியுங்கள்.
ஆடு விற்பனை செய்பவர்கள் மரபணு மாற்றப்பட்ட ஹப்ரீட் உயர் ரக ஆடுகளை விற்பது அதிக இலாபம் தரும் என கூறி விலை அதிகமான ஆட்டு இனங்களை உங்களுக்கு விற்று விடுவார்கள். ஆனால் அந்த இனங்களுக்கு இறைச்சிக்கான கேள்வி சந்தையில் இருப்பதில்லை.
அத்துடன் வேறு பிரதேசங்களில் சிறப்பாக வாழக்கூடிய இந்த வகை ஆட்டு இனங்கள் இந்த ஊரில் செழிப்பாக வளர அதிக சத்துணவுகள், அதிக பராமரிப்பு, அதிகம் வைத்தியரின் உதவி போன்றவை தேவைப்படும். வெயில் குளிர்களை தாங்க முடியாமல் விரைவாக நோய்வாய் படும்.
அதனால் நாட்டு ரக ஆட்டு இனங்களை தேர்ந்து எடுத்தால் நமது ஊர் தட்ப வெப்பத்திற்கு ஈடு கொடுத்து நோய்கள் இல்லாமல் சுலபமாக பராமரிக்க முடியும். சந்தையில் அவற்றுக்கான கேள்வியும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.
உபரியாக அதே இடத்தில் அதே பராமரிப்பாளர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தில் தாரா, கோழி,முயல் போன்றவற்றையும் வளர்க்க முடியும்.
ஆட்டின் ஆட்டெருவை மண்ணுக்கு இட்டு வளமான காய்கறிகள் மூலிகை தோட்டத்தினை உருவாக்கலாம். அவற்றில் காய்கறிகள் விற்பனை செய்தது போக அல்லது உங்கள் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக மீதி இலை குழைகளை ஆட்டுக்கெ உணவாக கொடுத்து விடலாம்.
ஆட்டுப்பண்ணை அமைக்க முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் முதலில் கவனிக்க வேண்டியது
1) என்ன வகையான ஆடு வளர்க்க போகிறீர்கள்
2) எப்படி எங்கே விற்பனை செய்ய போகிறீர்கள்
3) ஆடு வளர்ப்பிக்கான மானியம் இருகிறதா
4) ஆட்டிற்கான தீவனங்கள் என்ன செய்ய போகிறீர்கள்
5) நோய் மேலாண்மை போன்றவற்றை கட்டாயமாக தெரிந்து வைத்து கொள்ளுங்கள்
பக்கத்தில் உள்ள ஆட்டுப்பண்ணை அல்லது கால்நடை அலுவலகம் மூலம் தெரிந்து கொண்டு 3 முதல் 6 மாதம் வரை அனைத்தும் தெரிந்துகொண்டு ஆட்டுப்பண்ணை ஆரம்பியுங்கள்

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

தமிழ்நாடு விவசாயம் மற்றும் கால்நடை வாட்ஸ் ஆப் குரூப் லிங்க்

1) விவசாயி -2  https://chat.whatsapp.com/BAVjVCPb72S9QcFsR0Sxsq?fbclid=IwAR1UU9W5dHDjJvDPf8UVQCUrOP2UXicampA6nLqk3Cl63LWn6W-CyWMOX7I 2) நாட்டு கோழி வளர்ப்பு  https://chat.whatsapp.com/GrwKvhbUDSK1pxRQHDVybS 3) இயற்கை உரங்கள்  https://chat.whatsapp.com/Dbn1zWFEhK3BIJ2AfXza3F  5 ) டெல்டா விவசாயம்  https://chat.whatsapp.com/GvP3qhqMp7tLDyFQCZu4oI 6)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக்   https://chat.whatsapp.com/I9mp4lh3Yiu3uSd3q0sbEn 7)  SAVEL GROUP OF COIMBATORE   https://chat.whatsapp.com/LOmOlSR3z02Ao2bdF1Jzzj 8) அமுதம் தோட்டம் 2ஆர்கானிக்   https://chat.whatsapp.com/DKiOunFjg4ZA7QdZJ7L2nz?fbclid=IwAR2jLDjU7DSscLbRuxNUsGKZPvPl2p_VrI5QAKq3h9C5uuO7KEWgn4hoBAg 9) தாமிரபரணி இயற்கை தோட்டம்   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 10) தர்மபுரி Farmer kraft   https://chat.whatsapp.com/BIkAOaGBkEUEvlYLZHPF2g 23/07/20 11)  Coimbatore goat sales 2  https://chat.whats...

விவசாயம் WhatsApp group link

  1)  விவசாயிகள் -2 2)  நாட்டு கோழி வளர்ப்பு🐣🐥🐔 3)   டெல்டா விவசாயம் 4)  அமுதம் தோட்டம் 1ஆர்கானிக் 5)  விவசாயம்வானிலைசெய்திகள் 6)   கோழிகுஞ்சு விற்பனை சந்தை2  7)   வாண்கோழி கிண்னிகோழிsales2 8)   விவசாய ஆலோசனை 9)   தாமிரபரணி இயற்கை தோட்டம் 10)   விவசாயிகள்-3 11   காய்கறி பழங்கள் விற்பனை 12)   இயற்கை விவசாயிகள் சங்கம் 13)   Agriculture Market 14)   🌴குழு 1️⃣ 🌴இயற்கை விவசாயம்🌴 15)   அனைத்இந்திய விவசாய கட்சி 16)    அனைத்து கால்நடை வியாபாரம்