1.எந்த வகை நிலமாக இருந்தாலும் முறையான மண் வளபாதுகாப்பு பணியான நிலத்தை சுற்றி வரப்புகள் அமைத்தல் குறித்து வரப்புகள் அமைத்தல் போன்ற செயல்பாடுகளை முதலில் செய்து கொள்ள வேண்டும்
2. அடுத்து முடிந்தவரை பலதானிய விதைப்பு அல்லது பசுந்தாள் உரங்களை வளர்த்து 45வது நாள் மடக்கி உழுது மிகவும் சிறப்பானது. 3.அதன் பின்பு மண்ணுக்கு ஏற்ற வகையிலான குழி எடுத்து தேவையான அளவு இயற்கை இடுபொருட்களை இட்டு வளர்க்கவேண்டும்
4.ஒவ்வொரு பட்டத்திலும் ஏதாவது ஒரு பயறு வகை பயிர்களை மரத்தின் வேர்களை அதிகம் காயப்படுத்தாத அளவிற்கு மேலோட்டமாக உழுது விதைத்து பயிர் செய்வது நல்லது.
5 அவ்வாறு ஊடுபயிர் செய்ய விரும்பாதவர்கள் கொழுக்கட்டை புல் போன்ற புல்வகைகளை விதைத்து முழுமையாக வளர்த்து பயன்பெறலாம்
6.பயிருக்குத் தேவையான ஈரப்பதத்தை தக்க வைப்பது மரம் எளிமையாக மரத்தின் தண்டு பெருத்து வளர உதவி செய்யும்.
7. நாம் வளர்க்கும் மரத்திலிருந்து விழும் இலைகளை அப்புறப்படுத்தாமல் நிலத்திலேயே மக்க வைக்க வேஸ்ட் டீகம்போஸர் தெளித்து விட வேண்டும் 8.வருடத்திற்கு ஒருமுறையாவது பசுந்தாள் உரப் பயிர்களை வளர்த்து 45- 50 வது நாள் மடக்கி விடுவது நல்லது.
9. மரத்தின் மொத்த உயரத்தில் தரையில் இருந்து மூன்றில் ஒரு பங்கு உயரத்தை மட்டுமே கவாத்து பண்ண வேண்டும் மீதியுள்ள இரண்டு பாகம் அளவிற்கு அதிக இலைகளோடு மரங்கள் இருந்தால் மரங்கள் தண்டு பெருத்து வளரும்.
Comments
Post a Comment
Smart vivasayi