சிறுவிடை கோழி குஞ்சுகள் கொத்தி கொள்ளுகின்றன. தீவனம் தாராளம் இருந்த பின்பும். எதாவது தீர்வு உள்ளதா நிரந்தரமாக
கூன்டுக்குள்"வைக்காமல் வெளியில் மேய்ச்சலுக்கு விடவேன்டும்.இல்லை என்றால் தலவு மூக்கு வெட்டி விட வேன்டும்
15-20 கோழிகளுக்கு ஒரு தீவனத்தொட்டி, ஒரு நீர்த் தொட்டியை வைக்க வேண்டும். சரிவிகித மற்றும் சத்தான தீவனத்தை வழங்க வேண்டும். தாதுப்புகளும், வைட்டமின்களும் தேவையான அளவில் இருக்க வேண்டும். குருணைத் தீவனத்தைக் கொடுக்கக் கூடாது. மாவுத் தீவனத்தைக் கொடுத்தால் உண்ணும் நேரம் அதிகமாகி, கோழிகள் கொத்திக் கொள்வது குறையும். ஒரு லிட்டர் நீருக்கு ஒரு கிராம் உப்பு வீதம் கலந்து கொடுத்தால், கோழிகள் கொத்திக் கொள்வதைத் தடுக்கலாம்.
அதிகளவு நார்ச்சத்தும், சரிவிகிதக் கொழுப்புச் சத்துமுள்ள தீவனத்தை அளித்தால், இறகுகளைப் பிடுங்குதல், கொத்துதல் ஆகியவற்றைக் குறைக்கலாம். அகத்தி, முருங்கை, வேலிமசால், வேப்பிலை போன்ற பச்சிலைகளைக் கொடுத்தால் கொத்தும் பழக்கும் குறையும்.

Comments
Post a Comment
Smart vivasayi