பசும்பாலில் 3.5 சதவீத கொழுப்புப்பொருளும் 8.5 சதவீதம் கொழுப்பு அல்லாத திடப்பொருட்களும், எருமைப்பாலில் 5 சதவீத கொழுப்புப்பொருளும் 9 சதவீத கொழுப்பு அல்லாத திடப்பொருட்களும் இருக்க வேண்டும். இந்த அளவீட்டில் இருந்தால் தான் அது தரமான பால்.
பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்க வேண்டுமெனில் பசுக்களுக்கான தீவன விகிதத்தில் கவனம் செலுத்த வேண்டும். பசும்புல் வகை தீவனங்களில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. நன்றாக முற்றிய சீமைப்புல் ரகங்களை சிறு சிறு துண்டுகளாக்கி கறவை மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். இவற்றை உண்ணும் போது வயிற்றின் அறையில் உராய்வை ஏற்படுத்துகின்றன. இதன் மூலம் அசிட்டோ அசிட்டிக் அமிலம், அசிட்டிக் அமிலம் மற்றும் பியூட்ரிக் அமிலங்கள் சுரக்கின்றன. இந்த அமிலச்சத்துகள் ரத்தத்தில் சேர்ந்து கொழுப்பு அமிலங்களாக உருவாகின்றன.
புண்ணாக்கு, கலப்பு தீவனங்களால் கொழுப்புச்சத்து அதிகரிக்காது. அடர் தீவனங்கள் மூலம் பால் உற்பத்தி கூடும். கம்பு, சோளம், மக்காச்சோளத்தை பெருந்துகள்களாக அரைத்து கொடுத்தால் பாலில் கொழுப்புச்சத்து அதிகரிக்கும். குளிர்காலத்தில் பாலில் கொழுப்புச்சத்து அதிகமாகவும் கோடை காலத்தில் குறைவாகவும் இருக்கும். நாட்டு இன மாடுகளில் தான் கொழுப்புச்சத்து அதிகமாக இருக்கும். கன்று பிறந்த ஒரு வாரத்தில் கொழுப்புச்சத்து அதிகமாகவும் அதன்பின் இரண்டு மாதங்கள் வரை குறைவான சத்தும் இருக்கும். அதன்பிறகே அடர்த்தி அதிகரிக்கும்.
ஐந்தாவது கன்று ஈன்ற பின் கறவை மாடுகளின் பாலில் கொழுப்புச்சத்து குறைந்து கொண்டே வரும். கோடையில் வெப்பத் தாக்குதலில் இருந்து பாதுகாத்து உடம்பில் நீர் தெளித்து கொண்டிருந்தால் கொழுப்புச்சத்து குறையாது.
Comments
Post a Comment
Smart vivasayi