இலை
பஞ்சகாவ்யாவை செடியின் மேல் தெளித்தால் பெரிய இலைகள் மற்றும் அடர்த்தியான மேற்கவிகையை உருவாக்கும். ஒளிச்சேர்க்கை முறை உருவாகி உயிரியல் திறன், கருத்தொகுப்பு அதிகளவ வளர்ச்சிதை மாற்றத்தை மற்றும் ஒளிச்சேர்க்கையை இயங்கச் செய்யும்.
தண்டு
அடிமரத்தின் அருகில் தண்டுகள் உருவாகும். அவைகள் வலிமையாகவும் மற்றும் அதிகப்படியான பழங்களை முதிர்ச்சியடையச் செய்யும். கிளைகள் பெரியதாகி வளரும்.
வேர்
வேர்கள் மட்டுமீறியும், அடர்த்தியாகவும் இருக்கும் வேர்கள் நிறைய நாட்களுக்கு நன்றாகக் காணப்படும். இந்த வேர்கள் ஆழமாக உட்சென்று பரவி வளர்ந்து காணப்படும். இவ்வகையான வேர்கள் அதிகப்படியான தண்ணீர் மற்றும் சத்துப்பொருட்களை உழ் இழுக்கும்.
மகசூல்
நிலங்களில் அங்கக வேளாண்மையிலிருந்து கரிம மற்ற அமைப்பிற்கு மாற்றினால் இயல்பான சூழலை விட மகசூல் குறைவாகக் காணப்படும். முதன் முதலாக அறுவடை செய்த பிறகு கரிமமற்ற பயிர் வளர்ப்பு அமைப்பில் இருந்து அங்கக பயிர் வளர்ப்பாக நிலங்களை மாற்றும் பொழுது பஞ்சகாவ்யா அனைத்துப் பயிர்களின் மகசூலை பழைய நிலைக்கே மாற்ற உதவும். 15 நாட்களுக்கு முன்னதாகவே அறுவடை செய்ய உதவும். இது காய்கறிகள், பழங்கள் மற்றும் தானியங்களின் வாழ்வு காலத்தை அதிகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அதன் சுவைகளையும் அதிகப்படுத்தும். விலை உயர்ந்த இரசாயனங்களை குறைத்தால் பஞ்சகாவ்யா அதிகப்படியான இலாபத்தையும், அங்கக விவசாயிகளின் கடன் தொகைகளிலிருந்து விடுவிக்க உதவும்.
மீன் அமினோ அமிலம்
பயிர் வளர்வதற்கும்; பூக்கும் திறனை அதிகப்படுத்தவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வளர்ச்சி ஊக்கிதான் மீன் அமினோ அமிலம் பயிர்களுக்கு தெளிப்பதால் செலவு குறையும் பலன் கூடுதலாக கிடைக்கும். அகையால் குறைந்த செலவை கொண்டு மீன் அமினோ அமிலம் மூலம் தரமான பொருட்களை உற்பத்தி செய்து கூடுதல் மகசூல் பெற முயலுவோம்.
மீன் அமினோ அமிலத்தின் பயன்கள்
75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25
சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது
பயிர்களுக்கு 90 சதவீதம் தழைச்சத்து தரக்கூடியது.
பயிர்களுக்கு பூக்கும் திறனை அதிகரிக்கச் செய்யும்
தரமான காய்கறிகளை தருகிறது
பயிர்கள் ஓரே சீராக வளர்கிறது
நுண்ணூயிர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்
பயிர்கள் நன்கு செழித்து வளரும்.
சில நேரங்களில் எலி போன்ற விலங்குகளின் தாக்குதலை குறைக்கிறது.
பயன்படுத்தும் பயிர்கள்
காய்கறிகள், கொடிவகைகள், பணப்பயிர்கள், பயறுவகை பயிர்கள், எண்ணெய்வித்துபயிர்கள், மரப்பயிர்கள், மலர்சாகுபடி, தானியப்பயிர், போன்ற அனைத்து வகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்
பயன்படுத்தும் முறை
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி என்ற விகிதத்தில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கலாம். தெளிக்கும் பருவம் : பயிர் பூ மற்றும் காய்ப்பு பருவத்தில் தெளிக்கலாம். அல்லது தண்ணீர் பாயும் பொழுது தண்ணீருடன் கலந்து விடலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi