ஜீவாமிர்தம் என்பது ஒரு மிகசிறந்த பயிர் வளர்ச்சி ஊக்கி. நமது கால்நடைகளின் கழிவுகள் மற்றும் நிலத்தில் இருந்து கிடைக்கும் கழிவு பொருட்களை வைத்து தயாரிக்கும் ஒரு பயிர் வளர்ச்சி ஊக்கியாகும். இதனால் இதனை தயாரிப்பதற்கு அதிக செலவுகள் ஆகாது.
ஜீவாமிர்தம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
1. நாட்டு மாட்டின் சாணம் ( சாணி )
2. நாட்டு மாட்டின் கோமியம் ( மூத்திரம் )
3. வெள்ளம் ( உருண்டை வெள்ளம் அல்லது கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை )
4. பயிர்கள்
ஜீவாமிர்தம் தயாரிக்கும் முறை:
200 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம் எடுத்து கொள்ளுங்கள். அதில் 160 லிட்டர் தண்ணீர் நிரப்பி விடுங்கள். இதனுடன் 20 கிலோ மாட்டு சாணம் கரைத்துக்கொள்ள வேண்டும் ( உத்தேசமாக காரை சட்டியில் 4ங்கு சட்டி வரும் ). சாணம் தண்ணீரில் நன்கு கரைய வேண்டும்.
10 லிட்டர் கோமியத்தை இந்த கலவையுடன் நன்கு கலக்குமாறு ஊற்றி கலந்து விடவும்.
4 கிலோ கருப்பட்டி அல்லது உருண்டை வெள்ளம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து கொள்ளுங்கள். இவற்றில் ஏதேனும் ஒன்றை நீரில் நன்கு கரைத்து பிறகு இந்த கலவையுடன் கலக்க வேண்டும்.
இதனுடன் 4கிலோ பயறு மாவு கலந்து கொள்ளவும்.
1 கிலோ தங்களது நிலத்தின் மண் இந்த கலவையுடன் சேர்த்து கொள்ளுங்கள்.
மேற்சொன்ன அனைத்தையும் கலந்த பிறகு, ட்ரம்மின் வாயினை துணி கொண்டு கட்டிவிடவும் அல்லது மூடி கொண்டு மூடி விடவும்.. இதனை மூன்று நாட்கள் நிழற்பாங்கான இடத்தில் வைத்து விடுங்கள். முடிந்தால் இரண்டாம் நாள் ஒருமுறை திறந்து மூடவும்.
மூன்று நாட்கள் கடந்தபிறகு ஜீவாமிர்த கரைசல் தயாராகிவிடும். இதன் பிறகு நீங்கள் எடுத்து நிலத்திற்கு கொடுக்கலாம்.
ஒரு ஏக்கர் நிலத்திற்கு 2 முதல் 4 லிட்டர் வரை ஒரு முறைக்கு கொடுக்கலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi