*நிலத்தில் அமில கார நிலை 7.5 மேலும் தண்ணீரில் உப்பின் அளவு 2.5 மேலும் இருக்கும் கலர் மற்றும் கடினத்தன்மை உள்ள நிலங்களில் மரங்கள் வளர்க்க கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம்*.
தமிழகத்தில் உள்ள விவசாய பரப்பில் சுமார் 20 சதவீத நிலம் களர் மண்ணாக அல்லது உவர்மண் ஆகவுள்ளது. மண்ணில் உள்ள அமில கார நிலை 7.5 முதல் 8.5 வரை இருந்தால் அந்த மண் கால்சியம் சத்து அதிகம் உள்ள திரும்பவும் புனரமைக்க தகுந்த உவர் மண்ணாக உள்ளது. அதேசமயம் அமில கார நிலை 8.5 க்கு மேல் இருக்கும்போது களர் நிலமாக மாறி அவ்வகை மண்ணில் சோடியம் உப்பின் அளவு மிக அதிகமாகி விவசாய பணிகளுக்கு பயன்படுத்த
இயலாத நிலையை உருவாக்குகிறது.
இதனால் மேட்டுப்பகுதி நிலங்களிலும், தொழிற்சாலைகளுக்கு கீழுள்ள நிலங்களும், கடலோர பகுதிகளிலுள்ள நிலங்களும் களர் மண்ணாக வோ அல்லது உவர் மண்ணால் உள்ளது. இது விவசாயிகளுக்கு எந்தவிதமான லாபத்தையும் தருவதில்லை. இதனால் இவ்வகை நிலத்தில் சீமை கருவேலமரம் அடர்ந்து பயனற்ற தரிசாக உள்ளது. தமிழகத்தில் அவ்வப்போது பெய்யும் சிறிதளவு மழையைக் கொண்டு கூட இவ்வகை நிலங்களை மாற்ற முடியும்.
இவ்வகை நிலங்களில் உப்பின் அளவிற்கேற்ப அதனை தாங்கி வளரும் மர வகை பயிர்களை நடுவதால் இவ்வகை நிலங்களை நல்ல நிலங்களாகவும், லாபம் தரக்கூடிய விவசாய நிலங்களாக மாற்ற முடியும்.
அதற்கு செய்ய வேண்டிய வழிமுறைகள்
1.மரம் வைப்பதற்கு முன் நிலத்தில் முறையான கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட வேண்டும் .மண் வளம் நீர் வளம் காக்க உயரத்திற்கு ஏற்றவாறு வரப்பு அமைத்தல் போன்ற பணிகளை மரங்கள் நடும் முன்பே செய்துவிட வேண்டும்.
2. மழைக்காலத்தில் நிலத்தில் அதிகம் தண்ணீர் தேங்கும் செய்வது பூமியில் தேங்கியுள்ள உப்பினை கரைத்து, வேர் மண்டலத்துக்கு கீழே கொண்டு செல்ல வாய்ப்பாக அமையும். அதே போல் தண்ணீரிலும் உள்ள கடினத் தன்மை வெகுவாக குறைய பண்ணை குட்டை, வரப்புகள் அமைத்தல் போன்ற நீர் சேமிப்பு அமைப்புகள் மிகவும் அதிகம் பயன்படும்.
3. இந்த பாதிப்பு உள்ள அனைத்து நிலங்களிலும் குழி எடுத்து வரப்பு அமைத்தல் என்ற பணியை செய்வது மிகவும் நல்லது. சரிவுக்கு குறுக்கே ஜேசிபி இயந்திரத்தின் மூலம் குழி எடுத்து( 20 மீட்டர் நீளம் 3 அடி அகலம் 3 அடி ஆழம் உள்ள குழிகள் எடுத்து) தோண்டிய மண்ணை குழியின் கீழ் பகுதியில் தொடர்ந்து போடவேண்டும். ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் 5 அடி இடைவெளி இருக்கலாம். ஆனால் கீழே உள்ள வரப்பு 3 அடி உயரத்தில் குழியிலிருந்து இரண்டடி தள்ளி தொடர்ந்து வரவேண்டும். இந்த மாதிரியான செயல்பாடு அனைத்து வயல்களிலும் இருக்க வேண்டும்.
4. குறைந்தபட்சம் சிறிய பண்ணைக்குட்டைகள் ஆவது அமைத்துக்கொள்ள வேண்டும் .மூன்று ஏக்கருக்கு ஒரு பண்ணை குட்டை இருப்பது நல்லது. குறைந்தபட்சம் 65 அடி நீளம், 65 அடி அகலம், 6 அடி ஆழம் உள்ள பண்ணை குட்டைகள் அமைத்து கொள்ள வேண்டும். இதற்கு இலவச அரசு மானியங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.
5. கிணறு மற்றும் ஆழ்துளை கிணறை சுற்றி மழைநீர் சேகரிப்பு அமைப்பு அவசியம் முறையான வடிகால் அமைத்துக் கொள்ள வேண்டும். தண்ணீரை அதிகம் இவ்வாறு சேமிப்பது தண்ணீரின் உப்புத்தன்மையை மாற்ற பெரிதும் பயன்படும்.
6. அதிகம் உப்புத்தன்மை உள்ள நிலங்களில் நல்ல மழைக்காலத்தில் செடிகள் நடுவது நல்லது .ஈரம் அதிகமாக இருக்கும்போது மரங்களை நடவேண்டும். நல்ல உயரமான நல்ல பயனுள்ள ரகங்களை தேர்ந்தெடுக்கலாம். சரிவுக்கு கீழே ,மரங்களுக்கு கீழே தோண்டிய மண்ணை அரைவட்ட பாதியில் வளைத்து போட்டு மழைத்தண்ணீர் சரிவுக்கு கீழே கரைகளில் ஒவ்வொரு செடிக்கு அருகிலும் நிற்குமாறு செய்ய வேண்டும்.
7. இவ்வாறாக நீர்வளப் பாதுகாப்பு பணி செய்யப்பட்ட இவ்வகை நிலங்களில் மண் வள பாதுகாப்பு பணிக்காக முறையாக உழுது பருவகால மழை காலத்தில் ஏக்கருக்கு 20 முதல் 30 கிலோ அளவுள்ள விதைகளை பலதானிய விதைப்பு செய்யலாம். அவ்வாறு விதைக்கப்பட்ட பயிர்களை நாற்பதாவது நாள் மடக்கி உழுவதால் நிலத்தில் பசுந்தாள் உரங்கள் இன் அளவு அதிகரிப்பதுடன் மண்ணின் உப்பு தன்மை குறைய வாய்ப்புள்ளது. பலதானிய விதைப்பு செய்ய முடியாத இடங்களில் சணப்பு தக்கைப்பூண்டு அவுரி கொழிஞ்சி போன்ற பயிர்களையும் தனித்தனியாக ஏக்கருக்கு 30 கிலோ என்ற அளவில், வளர்த்து 40 வது நாள் மடக்கி விடலாம். இதனை வருடம் ஒரு முறையாவது செய்வது நல்லது
8.மரம் நடும் ஒவ்வொரு குழிகுள்ளும் குறைந்தபட்சம் 5 கிலோ மட்கிய தொழு உரத்தை இட்டு அதனுடன் 10 கிராம் சூடோமோனாஸ் சேர்த்து செடிகளை நட வேண்டும்.
அதிக அளவில் சாணம் அல்லது மக்கிய தொழுவுரத்தை இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை முறையான வளர்ச்சி எட்டும்வரை செடிகளுக்கு கொடுப்பது நல்லது.
8. அதிகம் நிலத்திலும் தண்ணீரிலும் உப்பு உள்ள பகுதிகளில் நீர்மருது, நீர்க்கடம்பு கொடுக்காப்புளி பூவரசு,தென்னை ,வேம்புபோன்ற மரங்களை நடலாம்.
Maram thevai
ReplyDelete