பப்பாளி பயிர் சாகுபடி
செய்யும் விவசாயிகள் கவனத்திற்கு
தமிழகத்தில் பப்பாளி பொதுவாக செம்மண் செம்மண் சரளை மணல் பகுதிகளில் அதிகம் பயிரிடப்படுகிறது. ஆனால் அளவுக்கு அதிகமான நோய் தாக்குதலும் வைரஸ் தொல்லைகளாலும் பப்பாளியில் முழுமையாகவே விளைச்சல் எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இதனை தவிர்க்க பப்பாளி விவசாயம் செய்வோர் கீழ்க்கண்ட முறைகளை கடைப் பிடிக்கலாம்.
பப்பாளி நடுவதற்கு தயார் செய்ய குழி எடுத்து காய வைக்கும் காலத்தில் குறைந்தபட்சம் 10 கிராம் சூடோமோனாஸ் அல்லது 10 கிராம் பேசில்லஸ் சப்டிலிஸ் உடன் 10கிலோ தொலுவுரம் அல்லது 200 கிராம் அசோஸ் பைரில்லம் கலந்து தண்ணீர் கொடுத்து வைக்கலாம். ஒவ்வொரு குழிகளிலும் குறைந்தபட்சம் 10 கிலோ அளவுள்ள மட்கிய தொழுவுரம் வேப்பம் புண்ணாக்கு மற்றும் மேற்கண்ட சூடோமோனஸ் தூளுடன் கலந்து அடியுரமாக இடலாம்.
ஒவ்வொரு மாதமும் பழம் பூ பூக்கும் ஏழாம் மாதம் முன்பு வரை ஒவ்வொரு மாதமும் தரைவழி அதிக அளவில் தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து அதிகமாகவும் மணிச்சத்து குறைவாகவும் இருக்குமாறு இடுபொருட்களை கொடுப்பது மிகவும் முக்கியம். முதல் மாதத்தில் வாரம் ஒருமுறை மீன் அமிலம் அல்லது ஜீவாமிர்தம் அல்லது பஞ்சகாவியா கண்டிப்பாக தரவேண்டும்.
அனைத்துப் பயிர்களுக்கும் அந்த சத்து கிடைத்து விட்டதை உறுதிப்படுத்தவேண்டும். பொதுவாக பழ மரங்கள் உள்ள நிலங்களில் சரிவு அதிகம் உள்ள இடங்களில், மேடுகளில் உள்ள பயிர்களுக்கு சத்துகள் போதுமான அளவு கிடைக்காத வகையும் உள்ளது . இதுவே நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வைரஸ் போன்ற நோய் வர ஒரு காரணமாக அமைகிறது.
எனவே 200 லிட்டர் என்ற அளவில் அரை லிட்டர் மீன் அமிலம் கலந்து அதனை எடுத்துக்கொண்டு போய் பாசனம் செய்த வயலில் ஒவ்வொரு ஊரிலும் குறைந்தபட்சம் அரை லிட்டர் என 400 செடிகளுக்கு ஊற்றி விடலாம். இதனை ஒவ்வொரு பாசனத்திற்கும் பண்ணலாம். இதேபோல் பஞ்சகாவ்யாவை கொடுக்கவேண்டும். ஜீவாமிர்தம் கொடுப்பதாக இருந்தால் 200 லிட்டர் ஜீவாமிர்தத்தை இன்னும் 300 லிட்டர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு பப்பாளி ஊரிலும் செடிக்கு செடி செடி செடிக்கும் செடிக்கும் ஒரு லிட்டர் ஊற்றி விடலாம். இதனை ஒவ்வொரு மாதமும் மாதத்திற்கு நான்கு முறை செய்வது நல்லது அதேபோல் பஞ்சகாவியா அல்லது இஎம் கரைசலை 10 லிட்டர் அரை லிட்டர் என தெளிக்க வேண்டும்.
முதல் ஆறு மாதங்களுக்கு ஒவ்வொரு செடியினை சுற்றியும் எடுக்கப்பட்ட வட்டப்பாதையில் எந்த ஒரு களைச்செடிகள் அதிகம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
முதல் ஆறு மாதங்கள் ஒவ்வொரு செடிக்கும் குறைந்தபட்சம் காலை 5 லிட்டர் மாலை 5 லிட்டர் என வாரம் மூன்று முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும் தண்ணீர் தேங்கி நிற்கும் அல்லது ஈரம் அதிகம் இருக்கும் நிலம் என்றால் வாரம் ஒரு முறை தண்ணீர் தரலாம்.
15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் சூடோமோனஸ் அல்லது விரிடி திரவத்தை தரைவழி தரவேண்டும். 10 லிட்டருக்கு 50 மில்லி என கலந்து செடிகள் மேல் தெளிக்க வேண்டும். இதனை அனைத்து மாதங்களிலும் செய்ய வேண்டும் . 15 நாட்களுக்கு ஒரு முறை செய்ய முடியாதவர்கள் மாதம் ஒரு முறையாவது செய்ய வேண்டும்.
மூன்றாம் மாதத்திலிருந்து ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் என இ எம் கரைசலை மாதம் ஒரு முறையாவது பயிர்களுக்கு தருவது நல்லது.
மூன்றாம் மாதத்தில் இருந்து மாதம் ஒரு முறை எருக்கு கரைசலை தரைவழி தரவேண்டும். எருக்கு கரைசல் கிடைக்காதவர்கள் கடையில் விற்கும் போரான் ஒரு மரத்திற்கு 50 கிராம் என்ற அளவில் தொழு உரத்தோடு கலந்து தரைவழி தரவும்.
நிலத்தில் எந்த ஒரு நேரத்திலும் எறும்பு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும் எறும்பு இருந்தால் வசம்பு கரைசலை தெளித்து விடலாம் அல்லது அதன் புற்றில் சுடு தண்ணீர் ஊற்றி விடலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi