Ad Code

நாட்டுக்கோழிகளின் அன்றாடப் பிரச்னைகள்



நாட்டுக்கோழி வளர்ப்பில் அவ்வப்போது ஏற்படும் சில பிரச்னைகளுக்கு தீர்வு காணும் சில வழி முறைகள் உள்ளன. கோழி முட்டையிடும் போது


முட்டையின் அகன்ற பாகம் தான் முதலில் வெளி வரும். இது இயற்கையாக நடைபெறும் நிகழ்வு. சில சமயம் முட்டையின் கூரிய பாகம் முதலில் வெளியேறும். இதனால் முட்டையிடும் நேரத்தில் கோழி சிரமப்படும். இதை தவிர்க்க விரல்களில் விளக்கெண்ணெய்யை லேசாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

பின் கோழியின் ஆசன வாயில் விரலை விட்டு முட்டையின் கூரியமுனையை திருப்பி அகன்ற பாகத்தை மாற்றி வைத்தால் கோழி எவ்வித துன்பமும் இல்லாமல் முட்டையிட்டு விடும். கோழிகளுக்கு சில சமயங்களில் சிராய்ப்பு மற்றும் காயம்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சிராய்ப்பு மற்றும் காயங்கள் ஏற்பட்டால் கோழிகளுக்கு சீழ் பிடிக்காது. ஏனெனில் கோழியின் உடல் வெப்பநிலை மற்ற பிராணிகளை காட்டிலும் கூடுதலானது. இதனால் சீழ்பிடிக்க வாய்ப்புகள் இல்லை. இவ்வாறாக சிறிய காயங்களை பற்றி கவலைப்பட தேவையில்லை.

ஆனால் கோழிகள் தங்கள் உடம்பில் பட்ட சிறிய காயங்களை கொத்தி, கொத்தி பெரிதாக்கி விடும். ஆகையால் மருத்துவரின் ஆலோசனைப்படி காயங்களுக்கு மருந்து போட வேண்டும்.
சத்து குறைந்த தீவனங்களை மட்டும் சாப்பிடும் கோழிகள் அளவுக்கு அதிகமாக தீவனம் எடுக்கும். இதனால் இரைப்பை பெரிதாகி விடும். தவிடு மற்றும் சோறு வகைகள் மட்டுமே தீவனமாக கொடுத்தால் இந்நிலை ஏற்படும்.

எதிர்பாராமல் நெல் மணிகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும் கோழிகளுக்கு இரைப்பை பெருத்து விடுவதுண்டு. இந்நிலைமையை போக்க 15 சொட்டு விளக்கெண்ணெய்யை வாய் வழியாக கொடுக்கலாம். இத்தகைய கோழிகளுக்கு ஒருநாள் முழுவதும் தீவனம் தராமல் பட்டினி போட வேண்டும். பிறகு சத்துள்ள தீவனங்களை சேர்த்து கொடுத்தால் இக்குறையை நிவர்த்தி செய்து விடலாம்.

Post a Comment

0 Comments