இரண்டு வருடங்கள் வரை பக்க கிளைகளை கழிக்கனும் அப்போது தான் மரத்தின் தண்டு தடிமனாகவும் காய்த்த பின் மரம் சாய்ந்திடாமலும் இருக்கும். வளர்ந்த மரங்களாக இருப்பின் அடிமரத்தில் இருந்து மேல் நோக்கிப் பார்த்து வெயில்படாத குச்சிகள், உள்நோக்கி வளரும் கிளைகளையும், பலவீனமான கிளைகளையும் நெருக்கமான நுனிக் கிளைகளையும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் கவாத்து செய்ய வேண்டும். வெயில் நன்கு கிடைக்கக் கூடிய கிளைகளை வெட்டக் கூடாது.
பெரிய கிளைகளை அகற்றும் போது காயம் பெரியதாக ஏற்படும் ஆக அதற்குரிய சாதனங்கள் வைத்து கவாத்து செய்ய வேண்டும் . மரத்தில் காயம் ஏற்பட்டால் தண்டு துளைப்பான், பட்டைத் துளைப்பான் மற்றும் பல தீமை செய்யும் பூசனங்கள் ஊடுறுவ வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே அந்தப் பகுதியை சாணக் கலவை கொண்டு பூசுவது சிறந்தது, காயம் இருந்தால் தான் செய்யணும்னு இல்லை, கவாத்து செய்ததும் கழித்த கிளைகளின் பாகத்தில் சாணக் கரைசலை தடவிட வேண்டும்
🌿பூ
ஒட்டு மாங்கன்றுகளில் வேர் பாகத்திலிருந்து வளரும் தளிர்களை நீக்கிவிட வேண்டும். 2 ஆண்டு வரை பூக்கும் பூக்களை கிள்ளி விடவேண்டும். 3ம் ஆண்டு பூ வைத்த உடன் செறிவூட்ட பட்ட தேமோர்க்கரைசல் தெளிப்பதால் பூக்கள் உதிர்வது குறைந்து பிஞ்சாக மாறி காய்பிடிக்கும்.
🌿காய் வைத்ததும்
காய்க்க ஆரம்பித்த பிறகு, காயோட வளர்ச்சிக்காக ஒரு முறை இயற்கை வளர்ச்சி ஊக்கி தெளிக்கனும். நன்றாக விளைந்த காய்களை அதாவது மாம்பழத்தோட காம்பு தளர்ச்சி அடைந்து பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறி இருந்தால் மட்டுமே அறுவடை செய்யவும். இந்த அறிகுறி, மா பழுக்க ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். சிலர் 50% முத்தினதும் பறித்துவிடுவாங்க. இது தப்பான விஷயம். காய்களை அடிபடாமல் பறிக்கணும் என்பதும் முக்கியம். மாங்காயின் காம்பை 10 செ.மீ ல் இருந்து 20 செ.மீ வரை விட்டு அறுவடை செய்யும் கருவியான கத்திரிக்கோலால் கட் செய்ய வேண்டும். இதனால் மாங்காயின் பால் அதன் தோல் மீது விழாமல் பாதுகாக்கப்படும். பால் தோல் மீது படும் இடம் கரும் புள்ளியாக மாறிப் பழம் கெட்டு விடும். அப்போதுதான் அது நல்லபடியாக பழுத்து வரும். அடர் நடவு முறையில் சாகுபடி செய்தால் நின்று கொண்டு எளிதாக பறித்து விடலாம்.
*🌿பழ ஈ கட்டுப்படுத்த*
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை பழ ஈக்களின் தாக்குதல் அதிகமாக இருக்கும். பழ ஈக்கள் மஞ்சள் நிறத்தில், வீட்டு ஈக்களை போன்று காணப்படும். அவை முதிர்ந்த காய்களை துளைத்து 2 முதல் 15 முட்டைகளை இடுகின்றன. பின்னர் அந்த முட்டைகள் பொரிந்து புழுக்கள் வெளிவந்தவுடன் பழத்தை துளைத்து அழுகச் செய்கின்றன. இதனால் பழம் அழுகி மரத்திலிருந்து கீழே விழுந்துவிடுகின்றன. இவற்றை கட்டு படுத்த காயின் வளர்சிக்கு தெளிக்கும் வளர்ச்சி ஊக்கிக்கு பிறகு மூலிகை பூச்சி விரட்டியும் தெளிப்பது சிறப்பு. இயற்கை வழி விவசாயத்தில் வரும் முன் காப்போம் என்பதற்கினங்க அவ்வப்போது மூலிகை பூச்சி விரட்டி தெளித்து வரவும்.
ஒடித்தால் பால் வரக்கூடிய செடிகளான எருக்கண் செடி, பப்பாளிச்செடி, காட்டாமணக்கு, நெய்வேலி காட்டாமணக்கு, ஆடு திண்ணா இலை, இலையை கசக்கினால் ஒவ்வாத வாடை வரும் இலைகள், ஆல இலை, வேம்பு, நொச்சி, ஆடாதோடை, ஆடு தீண்டா பாலை, ஊமத்தை, கும்பை, துளசி, சீதா, கிளறிசெடியா இவைகளில் ஏதேனும் ஐந்து செடிகளை சம அளவில் இரண்டு கிலோ எடுக்க வேண்டும். ஐந்து லிட்டர் மாட்டு கோமியத்தில் ஊர வைத்து, இரண்டு வாரம் கழித்து வடிகட்டி பத்து லிட்டர் தண்ணீரில் 300 மில்லி மூலிகை கரைசலை கலந்து தெளிக்கலாம். இதை 15 நாட்களுக்கு ஒரு முறை தெளித்தால், பழ ஈக்கள் கட்டுப்பட்டும்.
ஒரு ஏக்கருக்கு 6 இனக்கவர்ச்சிப் பொறிகள் வைத்து ஆண் பூச்சிகளை கவர்ந்து அழித்தும் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தலாம்.
🌿பழுக்க வைக்க
ஆவாரம் பூக்களையும், இலைகளையும் மாம்பழத்தோடு போட்டு வைத்தால் பழங்கள் சீக்கிரமாக பழுப்பது மட்டும் இன்றி, தங்க நிறத்திலும் நல்ல வாசனை உடனும் இருக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi