தென்னைக்கு தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையில் தினசரி 80 லிட்டர் தண்ணீர் தரவேண்டும். ஆனால் தமிழகத்தில் தென்னை மேட்டுப் பகுதியில் மலையடிவாரங்களில் செம்மண் சரளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருப்பதால் ,
பொதுவாக நம்முடைய கிணறு மற்றும் போர் போரில் நீர் குறையாமல் இருக்கவும், உபரியாக இருக்கும் நீரை கொண்டு ஊடுபயிர்கள் சாகுபடி செய்யவும் ஏதுவாக அனைத்து காலங்களிலும் சராசரியாக 50 லிட்டர் தண்ணீர் தருவது போதுமானது. அவ்வாறு தரும் அடுத்த பாசனத்தை ஏற்கனவே கொடுத்த பாசன நீர் தரையில் மறைந்து விட்ட பின்பு தேவைப்படும்போது அடுத்த பாசனம் செய்யலாம். அடுத்த பாசனம் என்பது வெளியில் அடிக்கும் வெயில், மண்ணின் வகை, மூடாக்கு இருப்பது அல்லது இல்லாதது என்ற அளவை பொருத்தது.
ஒரு வருடத்திற்கு குறைவான வயதுள்ள மரங்களுக்கு தினசரி காலை 9 மணிக்கு முன் 20 லிட்டரும் மாலை 5 மணிக்கு பின் 20 லிட்டர் தண்ணீர் தந்தால் போதுமானதாகும். இரண்டு வயதுக்கு மேலுள்ள தென்னைகளுக்கு காலை 25 லிட்டரும் மாலை 25 லிட்டரும் தருவது நல்லது. இந்த நீருடன் இயற்கை இடு பொருட்களான மீன் அமிலம், பஞ்சகாவியா , இ எம் கரைசல், ஜீவாமிர்தம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பாசனத்துடன் கலந்து தருவது மிகவும் சிறப்பானது.
அவ்வாறு கொடுக்கப்படும் தண்ணீர் முறையாக பரவ தென்னையின் வட்ட பாத்தி மூடாக்கு கொண்டு மூடப்பட்டிருக்க வேண்டும். மற்றும் வட்டப் பாத்தியின் அடிப்பகுதி செம்மண் சரியாக இருந்தால் கரம்பை மண் ஒரு அடுக்கு பரப்பப்பட்டு இருக்கவேண்டும். இத்தகைய நிலையில் குறைந்த அளவு தண்ணீர் தருவது பக்கவாட்டில் பரவி வேர் மண்டலம் முழுவதும் தண்ணீர் கிடைக்க ஏதுவானதாக இருக்கும்.
தண்ணீர் இருக்கிறது என்பதற்காக அதிக அளவு நீர் தருவது அல்லது ஒரு ஏற்கனவே இருக்கும் நீர் மறையாத போது அடுத்த பாசனம் தருவது வேர்களில் அழுகளையும் உற்பத்தி குறைவினையும் ஏற்படுத்தும்.
Comments
Post a Comment
Smart vivasayi