பொதுவாக தென்னை மரத்தினை பிள்ளை என்று சொல்லுவார்கள். நமது குழந்தைகள் போல தினசரி வாரம் ஒரு முறை ,15 நாட்களுக்கு ஒரு முறை, மாதம் ஒரு முறை ,ஆறு மாதத்திற்கு ஒருமுறை என சீரான பராமரிப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும் .
பராமரிப்பில் முக்கியமானது மரங்களுக்கு தேவையான இடுபொருட்களை சீரான இடைவெளியில் தருவது ஒவ்வொரு பாசனத்தின் போதும் ஏதாவது ஒரு இடுபொருளை குறைந்தபட்சம் ஒரு மரத்திற்கு 15 முதல் 20 மில்லி இருக்குமாறு கொடுப்பது சிறப்பானது. பஞ்சகாவியா எம் கரைசல் மீன் அமிலம் போன்றவற்றை ஒரு மரத்திற்கு 10 மில்லி இலிருந்து 20 மில்லி அளவுக்கு கொடுக்கலாம்.
ஜீவாமிர்தத்தை ஒரு மரத்தை ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் அளவுக்கு கொடுக்கலாம் .
இவை தவிர நுண்ணூட்டச் அதற்காக ஏருக்கு கரைசலை ஒரு மரத்திற்கு மூன்று லிட்டர் கொடுக்கலாம்.
மூன்று மாதத்திற்கு ஒருமுறை வேப்பம்புண்ணாக்கு ஒரு மரத்திற்கு இரண்டு கிலோ அளவிற்கு கொடுக்கலாம்.
கடலை புண்ணாக்கு கரைசலை 15 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை கொடுப்பது.
நல்லது மரத்தில் உள்ள தேவையற்ற மட்டைகள் மற்றும் பன்னாடைகள் ஐ முறையான காலங்களில் நீக்கிவிடுவது நல்லது .
தரைவழி மக்கிய சாணம் கொடுப்பதாக இருந்தால் ஒரு மரத்திற்கு 5 முதல் 10 கிலோ அளவிற்கு தரலாம் .முடிந்தவரை ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி தருவது மிகவும் நல்ல பலன் தரும்.
ஒவ்வொரு மாதமும் அல்லது 45 நாட்களுக்கு ஒரு முறை காண்டாமிருக வண்டு மற்றும் சிவப்பு கூன்வண்டு காண பராமரிப்புகளை செய்வது நல்லது.
Comments
Post a Comment
Smart vivasayi