Skip to main content

கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய் வராமல் தடுப்பது எப்படி






பால் காய்ச்சல் நோயானது விவசாயியின் பொருளாதாரத்தை பாதிக்கக் கூடிய நோய்களில் ஒன்றாகும்.

கறவை மாடுகளின் நலனை காக்கவும் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பை தடுக்கவும் பால் காய்ச்சல் நோயை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமாகும்.
 
*ஏன் பால் காய்ச்சல் நோய் கறவை மாடுகளுக்கு வருகிறது.*

கன்று போட்டவுடன் மாடுகளில் இருந்து பெறப்படும் சீம்பாலில் அதிக அளவு கால்சியம் சத்து வெளியேறுகிறது.( ஓரு லிட்டர் சீம்பாலில் - 3 கிராம் கால்சியம் )

கறவை மாடுகளில் தினமும் கறக்கும் பால் ஒரு லிட்டரில் 0.2 கிராம் கால்சியம் உள்ளது. கறவை மாடுகளுக்கு நாம் கொடுக்கும்  தீவனத்தில் உள்ள கால்சியத்தின் அளவு குறைவாகவும் மேலும் அதன் பாலில் இருந்து வெளியேற்றப்படும் கால்சியத்தின் அளவு அதிகமாகும்  உள்ளபோது பால் காய்ச்சல் நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

*பால் காய்ச்சல் நோயை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்*

*1.கன்று போட்டவுடன் கறவை மாடுகளுக்கு கால்சியம் டானிக் கொடுத்தல்.*




அ)பல கால்சியம் டானிக்-கள் மருந்து கடைகளில் ஜெல்  ஆகவோ அல்லது Liquid ஆகவோ மருந்தகங்களில் கிடைக்கும்.  அதை இரண்டு முதல் மூன்று முறை மாடுகளுக்குக் கொடுக்கும்போது பால் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் குறையும். இது போன்ற மருந்துகளை கொடுக்கும்போது பொறுமையாக புரை ஏறாமல் கொடுக்க வேண்டும்.

ஆ) சுண்ணாம்புக்கல் வேகவைத்து நீர்த்த நீர் தினம் அரை லிட்டர் கறவைபசுக்களுக்கு கொடுக்க வேண்டும்.

இ)முருங்கை இலை மற்றும் நாயுறுவி இலை தினமும் 200 கிராம் கொடுக்கலாம். இவை இயற்கை கால்சியம் நிறைந்தவை.

(குறிப்பு - மேற்கண்ட மூன்றில் ஏதாவது ஒன்றை  மட்டும் பின்பற்றவும்)

*2.கறவை மாடுகளில் அமில காரத் தன்மையை சமப்படுத்துதல்.*

 கறவை மாடுகளில் நாம் கொடுக்கும் தீவனங்களில் உள்ள அமிலம் மற்றும் காரம் தன்மையானது சரிவிகித அளவில் இல்லாதபொழுது பால் காய்ச்சல் நோய், சூழ்விக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 
இதனை சரி செய்வதற்கு DCAD என்ற மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன. அதை கறவை மாடுகளுக்கு பத்து நாட்களுக்கு கொடுக்கும்போது பால் காய்ச்சல் மற்றும் சூழ்விக்கம்  வருவது சற்று குறையும்.

*3.கடைசி இரண்டு மாத  சினை காலங்களில் பால் கறவை வற்றிய மாடுகளில் கால்சியம் குறைவாக கொடுத்தல்.*

 கறவை மாடுகளில் கடைசி இரண்டு மாத சினை பருவத்தில் பால் வற்றிய சினை மாடுகளுக்கு கால்சியம் சத்து குறைவான தீவனங்கள் கொடுக்க வேண்டும். மேலும் இந்த மாதங்களில் அதிக அளவு கால்சியம்
உள்ள டானிக்  கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இதனால் பால் காய்ச்சல் வருவது சற்று குறையும்.

*4.சினை மாடுகளுக்கு தீவனம் மற்றும் தாதுஉப்பு கொடுத்தல்.*

சினை மாடுகளுக்கு தரமான சரிவிகித தீவனம் மற்றும் தாது உப்பு கொடுக்க வேண்டும். மேலும் சினை காலத்தில் மாடுகள் உடல் எடை குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேற்கூறியுள்ள முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் பால் காய்ச்சலினால் ஏற்படும் வருவாய் இழப்பை தவிர்க்கலாம்.

பின்குறிப்பு:  கறவை மாடுகளில் பால் காய்ச்சல் நோய் ஏற்பட்டுவிட்டால் நேரம் தாழ்த்தாமல் உடனடியாக அருகிலுள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வைத்தியம் செய்வது நலம்.

Comments

Popular posts from this blog

இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பற்றிய புத்தகம் PDF வடிவில்

organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here   3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here   4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here   6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here  7) தென்னை நீர் மேலாண்மை - Click here  8) சாமந்தி_சாகுபடி - Click here  9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here   10) கொக்கோ_சாகுபடி - Click Here   11) கனகாம்பரம்_சாகுபடி - Click here   12)  விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here   13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15)  வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here  16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here   17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here  18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...

இயற்கை வேளாண்மை புத்தகம் pdf - மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்

மகசூலை அதிகரிக்கும் இயற்கை மற்றும் உரம் தயாரிக்கும் முறைகள்   Natural Agriculture Book PDF Your download will begin in 15 seconds. Click here if your download does not begin.

மாடி தோட்டத்தில் தக்காளியை வளர்ப்பதற்கான 8 டிப்ஸ்

        plants for balcony garden and planting Tomato  ஒரு  தோட்டம் வீட்டில் வைக்கப்போகிறோம் என்றால் , நாம் முதலில் வளர்க்கபோகும்  செடி தக்காளியாகத்தான் இருக்கும் . மாநகரப்பகுதிகளில்  குடியிருப்புகளின் அதிகரிப்பால் நிலப்பகுதி மிகவும் சுருங்கி விட்டது . நிலம் இல்லையென்றால் என்ன , நாம் இப்பொழுது மாடியில் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டோம் .  அடுக்குமாடியில் இருப்பவர்கள் கூட  பால்கனியில் கன்டைனர் , குரோ பேக் மூலம் வளர்க்க ஆரம்பித்துவிட்டனர் . நாம் இந்த கட்டுரையில் கன்டைனர்ரில் அல்லது தொட்டியில் வளர்ப்பதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம் . சரியான தக்காளி ரகத்தை தேர்வு செய்யலாம்   தக்காளியை பொறுத்தவரை அது சின்ன செடி கிடையாது . குறைந்தது 3 முதல் 12 அடி வரை வளரக்கூடியது . சில நீளமான ரகங்கள் 65 அடி வரை கூட வளரும் . எனவே நீங்கள் ஒரு தொட்டியில் வளர்க்கும் தக்காளி அதிக உயரம் இருந்தால் நம்மால் சமாளிக்க முடியாது . தக்காளியை பொறுத்தவரை தொட்டியில் வளர்ப்பதற்கு என்றே  ரகங்கள் உள்ளன அதை தேர்ந்தெடுக்கலாம்  அவை 4 முதல் 6 அடி வளர...