Ad Code

கழனி தண்ணீர் கரைசல்



செடிகளின் வளர்ச்சி பூ பூக்க காய்கறிகள் திரட்சியாக காய்க்க சிறந்த கரைசல்...

இது பொதுவாக மாடு வைத்திருப்பவர்களுக்கு இந்த பெயர் தெரியும்...

நமது வீட்டில் சமயல் கழிவுகள் அனைத்தும் இந்த தொட்டியில் ஊற்றுவர் இந்த கழனி தண்ணீர் தான் மாடு ஆடுகளுக்கு தண்ணீர்...

இதில் அனைத்து விதமான சத்துக்கள் அடங்கியுள்ளன....

நமது குறிப்பில் தனியாக தயார் செய்ய குறிப்புகள் சொல்லியிருப்பேன்...

உதாரணமாக வெங்காயம் தோல் கரைசல் காய்கறிகள் கரைசல் பழத்தோல் கரைசல்... தனியாக செய்யும்போது அதில் உள்ள சத்துக்கள் மட்டும் கிடைக்கும்...

இதுபோல் கலவையாக செய்யும்போது ஒவ்வொரு பொருட்களின் உள்ள அனைத்து சத்துக்கள் ஒன்றாக கிடைக்கும்...

இதனால் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.. பூ பூக்க காய்கறிகள் காய்க்க அதிக விளைச்சல் எடுக்க உதவும்..

பூ காய்கள் பெரிதாக உதவும்...

மேலும் நமது வீட்டில் கிடைக்கும் இந்த கழிவுகள் வாரம் 3 முறை பயன்படுத்தும் அளவில் கிடைக்கும்..

தண்ணீர் ஊற்றுவதற்க்கு பதிலாக தண்ணீர் சேர்த்து இந்த கரைசலை கொடுக்கலாம்....

இந்த கரைசலில் பயன்படுத்தும் கழிவுகள்..

அனைத்து பழ தோல் மற்றும் கழிவுகள்..

அனைத்து காய்கறி தோல் மற்றும் கழிவுகள்...

முடிந்த வரை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்...

அனைத்து கழுவும் தண்ணீர் அரிசி உளுந்து பருப்பு காய்கறிகள் போன்றவை..

சாதம் வடிக்கும் தண்ணீர்....

முட்டை வேகவைத்த தண்ணீர்...

பழைய சாதம்...

டீ தூள்.. காபி தூள் கழிவு....

புளித்த மாவு தயிர் மோர் போன்ற அனைத்து கழிவுகளை மூடி போட்ட வாழியில் ஊற்றி ஊறவைக்கவும்...

1 கை கழிவுக்கு 1 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொள்ளவும்...

தினமும் இரண்டுமுறை கலக்கிவிடவும்.. 4 நாள் பயன்படுத்தி கொள்ளலாம்...

1 பங்கு கரைசலுக்கு 1 பங்கு அல்லது 5 அல்லது 10 பங்கு தண்ணீர் கலந்து செடிகளுக்கு தேவையான அளவு ஊற்றவும்..

3 வாழிகள் வைத்து கொண்டால் வாரம் 3 முறை பயன்படுத்த ஏதுவாக இருக்கும்...

இந்த கரைசலை தொடர்ந்து பயன்படுத்தும்போது செடிகளின் வளர்ச்சி நன்றாக தெரியும் உங்களுக்கு..


Post a Comment

0 Comments

Ad Code