ஒரு பயிர் மட்டும் விதைக்காமல், கூடவே ஊடுபயிராக மற்றொரு பயிரையும் சேர்த்து விதைக்கும்போது கூடுதல் வருமானம் மட்டுமில்லாமல் மண்ணின் வளத்தை கூட்ட முடியும். ஊடுபயிர் மூலம் விவசாயம் செய்பவர்கள் ஒரு பயிர் கைவிட்டாலும் மற்றொன்று காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருக்கலாம். சில ஊடுபயிர்களின் தழைகள் கால்நடைத் தீவனமாகவும் பயன்படும். களைகளையும் கூடவே கட்டுப்படுத்தலாம்.
ஊடுபயிராக வளர்க்க கூடிய சில மரங்கள், சாதரணமாக வளரும் மரத்தை காட்டிலும், உயரமாக வளர்ந்து லாபம் தரும்.
ஆனால் எந்த பயிரை ஊடுபயிராக விதைக்க வேண்டும் என்ற குழப்பம் அனைவருக்கும் இருக்கும்.
#சரியான_ஊடு_பயிர்கள்:
🔸ஒவ்வொரு பயிருக்கும் ஏற்ற சில கூட்டுப் பயிர்கள் உண்டு. உதாரணத்திற்கு கம்பு பயிர் செய்யும்போது, கூடவே துவரை, எள், தட்டைப் பயிர் கலந்து விதைக்கலாம். இப்பயிர் வகைகள் காற்றில் இருக்கும் தழைச்சத்தை இழுத்து மண்ணை வளப்படுத்தும்.
🔸கரும்பு சாகுபடிக்கு ஏற்ற ஊடு பயிர்- உளுந்து, தட்டைப் பயிர். மூன்றே மாதத்தில் ஊடுபயிரிலிருந்து வருமானம் கிடைத்து விடும்.
🔸தென்னை சாகுபடி செய்யும்போது, கூடவே பாக்கு மரம் நடலாம்.வாழை தோப்பில், கருணைக்கிழங்கு, வெள்ளரி, செவ்வந்திப்பூ, கத்திரி மற்றும் மிளகாய் விதைக்கலாம்.
🔸பலா தோட்டத்தில், கத்திரி, தக்காளி, மிளகாய், வெண்டை மற்றும் பயிர் வகைகளை விதைக்கலாம்.
🔸கொய்யா தோட்டத்தில் தட்டைப் பயிறு, பட்டாணி, பீன்ஸ் மற்றும் பயிர் வகைகளை விதைக்கலாம்.
🔸சப்போட்டா தோட்டத்தில், தட்டைப் பயிர், துவரை மற்றும் கொத்தவரங்காய் விதைக்கலாம்.
🔸மாந்தோப்பில், வெங்காயம், தக்காளி, பப்பாளி, கொய்யா மற்றும் காலிஃப்ளவர் விதைக்கலாம்.
🔸இப்படி பல பயிர்களுக்கு ஏற்ற ஊடு பயிர்கள் பல இருக்கின்றன. அது காலத்திற்கும் நிலத்திற்கும் ஏற்றவாறு விதைத்து நன்மைகளை இரட்டிப்பாக பெறலாம்.
#கவனிக்க_வேண்டியவை:
🔹இதில் ஒரு சில சவால்களும் உண்டு. பயிர்கள் ஊட்டச்சத்துக்காகவும், தண்ணீருக்காகவும் போட்டியிடும். இதனால் இரண்டிற்கும் தேவையான ஊட்டசசத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். சரியான பயிரை தேர்ந்தெடுக்காத வேளையில் போதுமான விளைச்சலை காண இயலாது.
அறுவடை செய்வது சிறிது சிரமம் ஏற்பட கூடும். பல்வேறு பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவது கடினம். அதிக உழைப்பு தேவைப்படும். ஆனால் இந்த சிரமங்களை சரியான கவனிப்புகள் மூலம் சரி செய்துவிடலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi