• நூற்புழு பாதிப்பு உள்ள பகுதிகளில் விவசாயிகள் கேந்திப்பூவை 8:1 என்ற விகிதத்தில் ஊடுப்பயிராக பயிரிடவும். மேலும், உயிரியல் நுண்ணுயிரிகளான சூடோமோனாஸ் ப்ளுரோசன்ஸ், டிரைக்கோடெர்மா விரிடி மற்றும் பர்பியுரியோசிலியம் லிலேசினம் 2 கிலோ/ஏக்கர் உடன் வேப்பம் புண்ணாக்கு அல்லது தொழு உரத்துடன் சேர்த்து நடவு செய்யும் முன் அல்லது 15 – 30 நாட்கள் நடவுக்கு பிறகு வயலுக்கு தெளிக்க வேண்டும்.
• தக்காளி ஊசி துளைப்பான் (டையுடா அப்சல்யுட்டா) வை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு 16 இனக்கவர்ச்சி பொறிகள் வைக்க வேண்டும். பயிறுவகை பயிர்களை வரப்பு ஓர பயிராக பயிருடுதல் அல்லது இயற்கை எதிர்ப்பு உயிர்களின் எண்ணிக்கை அதிகரித்தல் டிரைக்கோகிரம்மா பிரிட்டியோசம் 40000/ஏக்கர் என்ற அளவில் ஒரு வார இடைவெளியில் வயலில் விடலாம்.
Comments
Post a Comment
Smart vivasayi