தென்னை மற்றும் பழந்தோட்டப் பயிர்கள் நடவுக்கு, குழிகளை நிரப்ப தேவையான பொருட்களும் அவற்றின் அளவுகளும்*
--------------------------------------
(மூன்று அடுக்குகளில், மேல் மண்ணுடன் கலந்து நிரப்ப, ஒரு 3x3x3 அடி குழிக்கான அளவு)
—————————————————
1. *வேப்பம்புண்ணாக்கு* - 300 கிராம் (3x100) [மூன்று அடுக்குகளில், ஒவ்வொரு அடுக்குக்கும் 100 கிராம்]
2. *புங்கன் புண்ணாக்கு* - 300 கிராம் (3 அடுக்குகள் x 100 கிராம்)
3. *கடலை புண்ணாக்கு *- 300 கிராம் (3 அடுக்குகள் x 100 கிராம்)
4. *ஆட்டு எரு* - 3 சட்டிகள்
[ஒவ்வொரு அடுக்குக்கும் 1 சாந்து சட்டி , மேல் மண்ணுடன். கலந்து)]
5. *நாட்டுமாட்டு எரு*- 3 சட்டிகள் [ஒவ்வொரு அடுக்குக்கும் 1 சாந்து சட்டி, மேல் மண்ணுடன். கலந்து]
6. *நுண்ணுயிர் உரங்கள்* - ஒரு குழிக்கு மொத்தமாக 90 கிராம் - ஒவ்வோரு வகையிலும் 5 கிராம், ஒவ்வொரு அடுக்குக்கும் - மேலே கூறிய எருக்களுடன் கலந்து (3 அடுக்குகள் x 5 கிராம் ஒவ்வொரு வகையிலும்)
7. *பச்சை இலை தழைகள்* - 1.5 சட்டி (3 அடுக்குகள்x 0.5 சட்டி) - வேப்பிலை, மூங்கில் இலை, புங்கன் இலை, கிளைசிரிடியா, கிளுவை, வாகை (இவற்றில் ஏதாவது ஒன்று)
8. *காய்ந்த இலை சருகுகள்* - 1.5 சட்டி (3 அடுக்குகள்x 0.5 சட்டி)
*கடைசியாக, கன்றுகள் நடும்பொழுது*
--------------------------------——
9. மண்புழு உரம் - 2 mugs ( குளிக்கும் தண்ணீர் குவளை)
*கன்றுகள் நட்டபின்*
----------------——-
10. மூடாக்கு (4-6 இன்ச் உயரத்திற்கு) இட்டு உயிர் தண்ணீர் அளவாகக் கொடுக்கவும்.
*நுண்ணுயிர் உரங்கள்*:
---------------————
1. அசோஸ்பைரில்லம்
2. பாஸ்போ பாக்டிரியா
3. பொட்டாஷ் பாக்டீரியா( Potash stabilizing/mobilizing bacteria)
4. சூடோமோனாஸ்
5. ட்ரைகோடெர்மா விரிடி
6. வேம் (VAM)
*குறிப்பு - மரப்பயிர்கள் நடவிற்கு, குழிகளின் அளவையும், தேவைப்படும் பொருட்களையும் பாதியாக குறைத்துக் கொள்ளவும்*
Comments
Post a Comment
Smart vivasayi