கத்தரி என்ற பெயர் மென்மையாக இருப்பதாலும் சற்று சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாலும் பூச்சிகள் மற்றும் புழுக்கள் அதிகம் விரும்பக்கூடிய பயிராக இருக்கிறது.
கத்திரி விவசாயம் செய்பவர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1) ஒவ்வொரு மாதமும் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ஒரு டிராக் டர் லோடு ஊட்டமேற்றிய தொழு உரமாக மாற்றி வேர்வழி தூவி முக்கியமாக நீர் செல்லும் வழிகளில் தூவி அமுக்கி லாபம் பெறலாம். மாதம் ஒருமுறை தரை வழியும் மேலே தெளித்தும் சூடோமோனாஸ் மற்றும் விரிடி என்ற இரண்டு பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தலாம். தரைவழி ஒரு ஏக்கருக்கு ஒரு லிட்டர் தெளிப்பதற்கு 10 லிட்டருக்கு 50 மில்லி என கலந்து தெளிப்பது நல்ல பலன் தரும்.
2) செம்மண் சரளை நிலம் என்றால் ஒரு ஏக்கருக்கு 75 கிலோ சாம்பல் நீர் செல்லும் பாதையில் தூங்கி விடுவது நல்லது.
3)பூ எடுப்பதற்கு அதிக அளவில் அதிக எண்ணிக்கையில் தேமோர் கரைசல் அல்லது இஎம் கரைசல் அல்லது பஞ்சகாவியம் கரைசலை பத்து லிட்டருக்கு அரை லிட்டர் கலந்து காலை 9 மணிக்கு முன் தெளிப்பதால் நல்ல பலன் தரும்.
இரண்டு முறை தெளிக்கலாம்.
4)எருக்கு கரைசலை தெளிப்பதால் அடிஉரம் குறைவாக கொடுத்திருக்கும் நிலங்களில் சத்துக் குறைபாட்டால் பூ உதிர்வதை தவிர்க்க வும் காய்கள் பெரிதாகி வளர உதவி செய்யும்.
5) பயிர் நட்ட ஒவ்வொரு 12 நாட்களுக்கு ஒரு முறை வேப்பஎன்னை கரைசல் அல்லது பொன்நீம் கரைசல் அல்லது கற்பூரகரைசல் அல்லது முக்கியமாக அக்னி அஸ்திரம் தெளிப்பது நல்ல பலன் தரும். பூச்சிகள் தாக்கம் மற்றும் நோய் தாக்கத்திற்கு எதிராக ஆரம்ப நிலையிலேயே கட்டுப்படுத்த இவை உதவும் வசம்பு கரைசல் 15 நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்துவது எறும்புகள் இல்லாமல் விவசாயம் செய்ய ஏதுவாக அமையும். இதனால் மாவு பூச்சி போன்ற வைரஸ் போன்ற கிருமிகளால் ஏற்படும் நோய்களை தவிர்த்துக் கொள்ளலாம். மேற்கண்ட பொருட்களை தயாரிப்பது குறைந்த உற்பத்தி செலவில் கத்தரி சாகுபடி செய்ய ஏதுவாக அமையும்.
6)இவை செய்ய விருப்பம் இல்லை என்றால் உயிரியல் கட்டுப்பாடு முறையான வெர்தி சீலியம் லக்கானி பெவேரிய பேசியானா என்ற இரண்டு திரவங்களை பத்து லிட்டருக்கு 50 மில்லி என கலந்து மாலை வேளையில் தெளிப்பது காய் புழு மற்றும் தண்டு பூ மற்றும் இலைகளை தாக்கும் அஸ்வினி போன்ற அனைத்து வகை பூச்சி புழுக்களுக்கு எதிராக செயல்பட ஏதுவாக அமையும்.
7)மாதம் ஒருமுறை இரண்டு கிலோ பாஸ்போபாக்டீரியா தண்ணீரில் கலந்து கொடுப்பது நல்லது. மாதம் 3 முறை ஏக்கருக்கு ஒரு லிட்டர் என்ற அளவில் மீன் அமிலம் அல்லது ஒரு லிட்டர் இஎம் கரைசல் அல்லது 200 லிட்டர் ஜீவாமிர்தம் அல்லது 20 லிட்டர் வேஸ்டு டீகம்போஸர் தரைவழி கொடுப்பது நல்ல விளைச்சலை உருவாக்கும் சீரான அனைத்து காலத்திலும் கண்ணும் கருத்துமாக பராமரிப்பது விவசாயத்தில் இனிவரும் நாட்களில் அதிக லாபம் தரும்.
8)சூரிய ஒளியில் இயங்கும் விளக்கினை ஏக்கருக்கு ஒரு எண்ணிக்கையில் ஆவது வைப்பது நல்லது. மூன்று எண்ணிக்கை இருப்பது மிகவும் நல்லது இதனால் எளிமையாக பயிர்களைத் தாக்கும் பூச்சிகளை ஆரம்ப நிலையிலேயே அழித்து விடலாம் .
Comments
Post a Comment
Smart vivasayi