• அந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய தீவனங்களை முறையாக அளித்து அதனை பரவலாக்கம் செய்ய வேண்டும்.
• மண்ணில்லா (ஹைட்ரோ போனிக்ஸ்) விவசாய முறையில் விளைவித்த தீவனங்களை வாய்ப்புள்ள இடங்களில் பயன்படுத்தவும்.
• மழை காலத்திற்கு முன் சாண மாதிரியை அருகில் உள்ள நோய் புலனாய்வு ஆய்வகம் அல்லது பல்கலைக் கழக மையத்தில் அளித்து பரிசோதனை செய்து தக்க குடற்புழு நீக்க மருந்தினை பயன்படுத்தவும்.
• துள்ளுமாரி தடுப்பூசியினை மே மாதத்தில் போடவேண்டும்.
• நீல நாக்கிற்கான தடுப்பூசியினை ஜுலை மற்றும் ஆகஸ்டு மாதத்திற்குள் போட வேண்டும்.
• பட்டியில் புதிதாக சேர்க்கப்படும் ஆடுகளில் பிபிஆர் அல்லது பிற நோய் தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்வதற்கு அவ் ஆடுகளை 25 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
• ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்படக்கூடிய மேய்ச்சல் நிலங்களில் உள்ள பற்றாக்குறையை குறைப்பதற்கு சினைப்பிடித்த ஆடுகளுக்கு 250 முதல் 300 கிராம் அடர் தீவனம் கொடுப்பதன் மூலம் கருச்சிதைவு அல்லது ஊட்டச்சத்து குறை உள்ள குட்டிகளை தவிர்க்கலாம்.
• மழை காலங்களில் தீவன மரக்கன்றுகளை நடவு மேற்கொண்டு பசுந்தழைகளை ஆடுகளுக்கு தீவனமாக கொடுக்கலாம்.
• மேய்ச்சல் நிலங்களில் தீவன பற்றாக்குறை உள்ள சமயங்களில் ஆடுகளுக்கு பயிர் கழிவுகள், மரபுசாரா தீவனங்களாகிய மரவள்ளி இலைகள், வெங்காய பயிர் கழிவுகள், வாழை இலைகள் மற்றும் தண்டுகளை உணவாக அளிக்கலாம்.
• அசோலாவை ஆடுகளுக்கு 250 முதல் 500 கிராம் வரை ஒரு நாளைக்கு பகுதி உணவாக அளிக்கலாம்.
• ஒட்டுண்ணிகளின் பாதிப்பிலிருந்து பாதுக்காக்க ஒட்டுண்ணி கட்டுப்படுத்தும் மருந்தினை நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும்.
• விவசாயிகள் முறையாக தேர்வு செய்யப்பட்ட பாரம்பரிய மூலிகை மருத்தவ முறைகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
Comments
Post a Comment
Smart vivasayi