நிலக்கடலை விதையினை முதலில் ஒரு வெள்ளைநிற தாளில் அல்லது துணியில் பரப்பி காய்ந்துபோன, சுருங்கிப்போன, பழுப்பு நிறமான விதைகளை பொறுக்கி நீக்கிவிடலாம். மீதமுள்ள நல்ல விதைகளை தேவையான தண்ணீரில் கலந்து நன்கு பிரட்டி அதன் மேல் படிந்துள்ள அழுக்குகள் போகுமாறு பொறுமையாக மெதுவாக கழுவி தண்ணீரை அகற்றிவிடலாம்.
இவ்வாறான தண்ணீர் நீக்கப்பட்ட ஈரமான விதைகள் மீது ஒரு கிலோவிற்கு திரவம் என்றால் 7 மில்லி அல்லது பவுடர் என்றால் 10 கிராம் அளவுள்ள சூடோமோனாஸ் உடன் பவுடராக உள்ள 100 கிராம் அளவுள்ள அசோஸ்பைரில்லம் அல்லது 100 கிராம் அளவுள்ள ரைசோபியம் தூளினை மேலே ஊற்றி புரட்டிவிடலாம் . அனைத்து விதைகள் மீதும் இவ்விரண்டு உயிர் சம்பந்தப்பட்ட விதைநேர்த்தி பொருட்கள் பரவி அதன் மீது முழுமையான படலமாக வருமாறு செய்து அதனுடன் ஒட்டு திரவமாக தேவையான அளவு வடிகஞ்சி ஊற்றி புரட்டிவிடலாம்.
இவ்வாறான விரட்டப்பட்ட நிலக்கடலை விதைகளை நிழலில் உலர்த்தி ஒட்டியிருக்கும் விதைகளை பிரித்து தனித்தனி விதைகளாக காய வைக்கலாம். இவ்வாறாக காயவைத்த விதைகளை நடவுக்கு பயன்படுத்தலாம்.
நிலக்கடலையின் தோலுரிந்து விடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.
அடிப்புறம் வளைந்த பாத்திரத்தில் பொதுவாக விதைநேர்த்தி பண்ணும்போது முறையான நன்மை கிடைக்கும்.
Comments
Post a Comment
Smart vivasayi