பதில் 1
ஆடு best bro.. கோழி கொஞ்சம் நோய் வந்த எல்லாத்தையும் காப்பாத்துறது ரொம்ப கஷ்டம் but ஆடு அப்படி இல்லை.. நோய் ரொம்ப ரொம்ப கம்மி..
பதில் 1A.
பத்து கோழி போனா தாங்கும்,ரெண்டு ஆடு போனா நட்டம் அதிகம்.
பதில் 2A. 10 கோழி போகாது மொத்தமும் போயிடும்.. அதுதான் பிரச்சனை..
பதில் 3A.
correct தாங்க.. 10 கோழி பத்தாது.. கொஞ்சம் அதிகமா வேணும்.. ஒரு 20 இல் இருந்து 25 கோழி வேணும்.. கொஞ்சம் கொஞ்சமா அதிக படுத்தனும்.. முதலில் தொழிலை கத்துக்கணும் இல்லைனா கஷ்டம். Loss ஆயிடும்.. ஆடு அப்டி இல்லைங்க.. நோய் எதுவும் பெருசா வராது.. கொஞ்சம் தைரியமா இருக்கலாம்ங்க.. அதுக்காக தான் சொன்னேன்.. கோழி இக்கு நிறைய மருந்து போடணும் இல்லைனா நோய் வந்து செத்துடும்.. எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் 450கோழி குஞ்சு வாங்கி விட்டார் எல்லாம் ஒரு 1.75 டு 2 kg வரைக்கும் மருந்து எல்லாம் கொடுத்து கஷ்டப்பட்டு காப்பாத்திட்டார். ஒருத்தர் 50 கோழி வாங்கிட்டு போயிடு ஒரு 5 days அப்புறம் 5 கோழி விக்கலைனு return பண்ணிட்டார்.. within ஒரு வாரத்தில் எல்லா கோழி um நோய் வந்து இறந்துடுச்சு.. ஒரு சின்ன mistake தான் பட் total பண்ணையும் close.. ஏகப்பட்ட loss.. கோழி வளர்க்க அனுபவம் தேவை.. கொஞ்சம் கொஞ்சமா தான் அது கிடைக்கும்..
பதில் 2
உங்களால் தீவனம் விளைவிக்க போதுமான இடம் இருப்பின் ஆடு வளர்க்கலாம் தயவுசெய்து தீவனத்தை காசுகொடுத்து வாங்க என்ன வேண்டாம் இறுதியில் உங்களுக்கு லாபம் மிஞ்சாது இடம் சிறியதாக இருப்பின் கோழி வளர்க்கலாம் ஆனால் உண்மையில் ஆடு வளர்ப்பை சிறந்தது கோழி வளர்ப்பில் அதிகம் நோய்தொற்று இறப்பு விகிதம் சந்திக்க நேரிடும் நாட்டு ஆடாக பார்த்து வளர்ப்பின் இது குறைவு
பதில் 3
இரண்டு தொழிலிலும் லாபம் எடுக்க நல்ல வாய்ப்பு உள்ளது... ஆடு கோழி இரண்டிலும் அனுபவம் எடுங்கள்... ஆடு வளர்ப்போர் ஆடு தான் சிறந்தது என்பார்கள் அல்லது மோசம் என்பார்கள்... கோழியும் அதே தான் சொல்லுவார்கள்... நீங்கள் சுயமாக அனுபம் எடுங்கள்... சிறிதளவு கோழி மற்றும் ஆடு வாங்கி 6 மாதம் அனுபவம் எடுங்கள்... அனுபவம் மட்டுமே தரமான தீர்வுகள் கிடைக்கும்...
பதில் 4
தோல்விக்கதைகள் ஆயிரம் சொல்வார்கள். துவள வேண்டாம். முன் அனுபவம் பெற முயற்சி செய்யுங்கள்.
எங்க வீட்டில் மொட்டை மாடியில் 30 கோழிகளும் 2 ஆடுகளும் வளர்க்கிறோம். கூடவே மினி ஹைட்ரோஃபோனிக்ஸ்ல் தீவனமும் அசோலாவும் வளர்க்கிறோம். இது போக 101 தொட்டிகள் வைத்து மாடித்தோட்டம் போட்டிருக்கிறோம்.
இது போல ஒரு வருடம் செய்து முன் அனுபவம் பெறுங்கள். இவ்வாறு எல்லாமே ஒருங்கிணைந்து செய்யும் போது தான் லாபம் ஈட்ட முடியும். முக்கியமாக கால்நடைகள் வளர்ப்பதற்கு குறைந்தபட்சம் 4 மாதங்கள் முன்பே தீவனத்தைத் திட்டமிடுங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பதில் 5
உங்கள் பகுதியில் சூழ்நிலை குறித்து தீவணமேலாண்மை நோய் மேலாண்மை தேவை குறித்து விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். சிறிய அளவில் தொடங்கி அனுபவம் பெற்று தொடங்குங்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
Comments
Post a Comment
Smart vivasayi