சோளப்பயிரினை தாக்கக் கூடிய பூச்சி மற்றும் சிலந்தி வகைகளில் செஞ்சிலந்தி முக்கியமான ஒன்றாகும். இது கோடைக்காலத்தில் அதிகளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது இலைகளின் அடிப்பக்கத்தில் கூட்டம் கூட்டமாக இருந்து இலையின் சாற்றை உறிஞ்சி பயிருக்கு சேதம் விளைவிக்கிறது. இதனை மேலாண்மை செய்ய பின்வரும் முறைகளை பின்பற்ற வேண்டும். பயிர் விதைப்பிற்கு 2 அல்லது 3 வாரங்களுக்கு முன் வயலில் உள்ள புல் சார்ந்த களைக்களை அப்புறப்படுத்த வேண்டும். ஏன்னெனில் இதன் மூலம் பயிர் இல்லாத காலத்தில் தஞ்சம் கொண்டுள்ள சிலந்திகள் சோளப் பயிரை தாக்குவதற்கு வாய்ப்பாக அமைகிறது. மேலும், கடந்த பட்டத்தில் விடுப்பட்டு போன வேறு தானிய வகை பயிரினையும் அப்புறப்படுத்தி அழிக்க வேண்டும். மேலும், பயிர் நன்கு வளரும் வண்ணம் தேவையான ஊட்டச்சத்துகளை மண் ஆய்வின் படி கொடுக்க வேண்டும். இல்லையெனில் ஒரு எக்டருக்கு பொதுவாக பரிந்துரைக்கப்பட்ட உரங்களாகிய தழை சத்து 195 கிலோ, மணி சத்து 280 கிலோ மற்றும் சாம்பால் சத்து 75 கிலோ (இவற்றில் 50 சதவிகிதம் தழை சத்து மற்றும் 100 சதவிகிதம் மணி மற்றும் சாம்பல் சத்தினை அடி உரமாக இடவேண்டும்) மீதமுள்ள 50 சதவிகித தழை சத்தினை 2 ஆக பிரித்து 25 மற்றும் 45 நாளும் இட வேண்டும். மேலும், வறட்சி கலத்தில் மண்ணில் போதிய ஈரப்பதம் காக்கும் பொழுது சிலந்தியின் இனப்பெருக்கத்தை குறைக்கலாம். பயிர் சாகுபடி செய்த 2 வாரங்களிலிருந்து வாரம் ஒரு முறை கண்காணிப்பு மேற்கொண்டு செஞ்சிலந்தியின் எண்ணிக்கை பொருளாதார சேத நிலையானது ஒரு சதுர மீட்டருக்கு 5 செஞ்சிலந்தி இருக்கும் பட்சத்தில் கீழ் கொடுப்பட்ட பயிர் பாதுக்காப்பு முறைகளை பின்பற்ற வேண்டும். செஞ்சிலந்திகள் தாக்கம் தென்பட்ட பிறகு தாவர பூச்சி கொல்லியாகிய வேப்பம் கொட்டை கரைசல் 5 சதம் அல்லது பச்சை மிளகாய் பூண்டு கரைசல் அல்லது அசாடின் ராக்டின் 1சதம், 2 மில்லி 1 லிட்டர் தண்ணீரில் கலந்து அவற்றுடன் காதி சோப்பு கலந்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி தெளிப்பான் கொண்டு இலைகளின் அடிப்புறத்தில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். சிலந்திகளின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் இரசாயன சிலந்தி கொல்லியாகிய புரோப்பர்கைட் (Pசழியசபவைந) என்ற மருந்தினை 2 மில்லி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து ஒட்டு திரவம் சேர்த்து இலையின் அடிப்பகுதில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். மேலும், தொடர்ந்து வாரம் 1 முறை சிலந்திகளின் தாக்குதலை கண்காணித்து மேலே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை அல்லது இராசயன கட்டுப்பாட்டு முறையினை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் செஞ்சிலந்திகளை கட்டுப்படுத்தலாம். மேலும், இந்த முயற்சியானது கிராம அளவில் மேற்கொள்ளவது நல்ல பயன் தரும்.
organic farming books in tamil free download 1) வீட்டுத்தோட்டம் வீட்டுக்கொரு விவசாயி - Click here 2) முந்திரி_சாகுபடி - Click here 3) முட்டைக்_கோழி_வளர்ப்பு - Click Here 4) விவசாயம்_மரிக்கொழுந்து_தீப்பிலி - Click here 5) நெல்லிக்காய்_சாகுபடி - Click here 6) நாவல்_பழம்_காப்பி_சாகுபடி - Click Here 7) தென்னை நீர் மேலாண்மை - Click here 8) சாமந்தி_சாகுபடி - Click here 9) கொய்யா_சப்போட்டா_சாகுபடி - Click Here 10) கொக்கோ_சாகுபடி - Click Here 11) கனகாம்பரம்_சாகுபடி - Click here 12) விவசாயம்_எள்ளு்_சாகுபடி - Click here 13) மா சாகுபடி - Click Here 14) லாபம்_தரும்_மல்லிகை_சாகுபடி - Click Here 15) வயலில்_எலிகளை_கட்டுப்படுத்தும்_முறை - Click Here 16) ம்படுத்தப்பட்ட_அமிர்த_கரைசல் - Click Here 17) முந்திரி_பழத்தில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here 18) மீன்_மற்றும்_இறாலில்_மதிப்பு_கூட்டு_பொருட்கள் - Click Here ...
Comments
Post a Comment
Smart vivasayi