தாக்குதலின் தன்மை
முதலில், அடிப்புற இலைகளில் குறிப்பாக இலை ஓரங்களில், மஞ்சள் நிற மாற்றம் மற்றும் வாடிக் காணப்படும். பின்பு இந்த மஞ்சள் நிறம், இலையின் மையப்பகுதி வரை பரவி, ஓரங்கள் காய்ந்து போகும்.
தாக்குதல் அதிகரிக்கும் போது, மரத்தின் உச்சி இலைகள் விறைப்பாக மாறும். இது ஈட்டி போன்ற வடிவில் காட்சியளிக்கும். பாதிக்கப்பட்ட மரத்தின் அடி இலைகள், இலைக்காம்புடன் ஒடிந்து தண்டைச் சுற்றி தொங்கும். இது மரத்திற்கு பாவாடை கட்டியது போல் தோற்றமளிக்கும்.
உட்புற அறிகுறிகளில், அடிக்கிழங்கை குறுக்காக வெட்டிப் பார்த்தால், நீர் மற்றும் சத்துக்களைக் கடத்தும் ஸைலம் குழாய்த் தொகுப்பு மஞ்சள் அல்லது செம்பழுப்பு நிறத்தில் மாறி இருக்கும். இத்திசுக்களில் பூஞ்சாணங்கள் வளர்ந்திருக்கும்.
குறுக்காக வெட்டிப் பார்க்கும் போது நிற மாற்றம் வட்டவடிவில் கிழங்கின் நடுப்பகுதியில் அதாவது சாற்றுக்குழாய் தொகுப்பில் தாக்கம் அதிகளவில் இருக்கும். தண்டினை நீளவாக்கில் பிளந்து பார்த்தாலும் இந்நிற மாற்றம் தெரியும்.
செவ்வாழை, ரஸ்தாளி, மொந்தன், விருப்பாட்சி மற்றும் பல உள்ளூர் இரகங்களை இந்நோய் தாக்கி பெரும் சேதத்தை விளைவிக்கின்றது. வாடல் நோயின் வித்துக்கள் மண்ணில் பல ஆண்டுகள் உயிருடன் இருக்கும் தன்மையுடையது.
பூஞ்சாண வித்துக்கள் முளைத்து பக்க வேர்கள் மூலமாக கிழங்குப் பகுதியைத. தாக்கும். நோய் தாக்கிய கிழங்குகள் மூலமாகவும், பாசனநீர் மூலமாகவும் இந்நோய் ஓரிடத்திலிருந்து மற்ற இடத்திற்துப் பரவுகிறது. நூற்புழு இருக்கும் தோட்டத்தில் நோயின் அறிகுறிகள் அதிக அளவில் காணப்படுகின்றன.
பூஞ்சையை கண்டறிதல்:
இந்நோயை உண்டாக்கும் முக்கிய பூஞ்சை ஃபுஸேரியம் ஆக்ஸிஸ்போரம், ஃபுஸேரியம் பீசிஸ் கியூபென்ஸ்.
இப்பூஞ்சைகள் வெள்ளை முதல் இளஞ் சிவப்பு நிற மைசீலியத் தொகுப்புகளைக் கொண்டுள்ளன. தடுப்புப் பூசண இழைகள் நிறமற்றவை. கொனிடாக்கள் சற்று சிறியவை. பெரு வித்துக்கள், நுண்வித்துக்கள் என இருவகை உண்டு.
பெருவித்துக்கள், அரிவாள் வடிவில், மெல்லிய சுவர்களைப் பெற்றிருப்பதோடு அதிகளவில் உற்பத்தி செய்யப்படும். மேலும் இவை பாத வடிவ அடிச் செல்களைக் கொண்டுள்ளன. 3 முதல் 5 தடுப்பு பூசண இழைகள் 23-54 * 3-4.5 மைக்ரோ மீட்டர் அளவில் இருக்கும்.
நுண் வித்துக்கள் நிறமுடையவை. உருளை முதல் வட்டவடிவம் வரை அதிக எண்ணிக்கையில் காணப்படும். சிறிது வளைந்து 5-12 * 2.3- 3 5 மைக்ரோ மீட்டர் அளவில் சிறிய பொய்த் தலையைப் பெற்றிருக்கும்.
இந்நோய் மண்ணின் முலம் பரவுகின்றது. பூஞ்சையானது மெல்லிய சல்லி வேர்களின் வழியே உட் புகுகிறது. அமில மற்றும் வண்டல் மண் வகைகளில் நோய்த் தாக்கம் அதிகம்.
இப்பூஞ்சைகள், கன்றுகள், கிழுங்கு, வயலில் பயன்படுத்தும் கருவிகள், வாகனங்கள், பாசன நீர் போற்வற்றின் வழியே பரவுகின்றது.
கட்டுப்பாடு முறைகள்:
உழவியல் முறைகள்:
வயலில் களைகளின்றிச் சுத்தமாக வைக்கவும்.
நோய் தாக்கிய கன்றுகளை நடுவதற்குப் பயன்படுத்தக் கூடாது.
வயலில் பயிர் இல்லாத போதும், களைகளில், இப்பூஞ்சைகள் வளரும் என்பதால் அருகில் எந்த களையும் வளரா வண்ணம் பார்த்துக் கொள்ளவும்.
பூசணி ,வெள்ளரி போன்ற பயிர்களை ஊடுப்பயிராகப் பயிரிடுவதைத் தவிர்க்கவும்.
40 degree செ உள்ள வெந்நீரில் கன்றினை ஒரு நாள் முழுவதும் வைத்திருந்தால் இப்பயிர்கள் அழிந்து விடும்.
தினசரி கவனித்து, நோய்த் தாக்கம் இருப்பின், அவ்வாழையினை உடனடியாக அகற்றுதல் அவசியம்.
10 கி.கி தொழு உரம், நடும்போதும், பின்பு 3 மாத இடை வெளிகளிலும் அளிக்க வேண்டும். 1 கி.கி வேப்பம் புண்ணாக்கு, 200 கி தழைச்சத்து, 40 கி மணிச்சத்து, 200 கி சாம்பல் சத்து என்ற அளவில் மரமொன்றுக்கு அளித்தல், 2 மாத இடைவெளிகளில் 4 முறை களையெடுத்தல் (8வது மாதம்வரை) போன்றவை பின்பற்றப் படவேண்டும்.
நோய் தாக்கிய மரங்களை பிடுங்கி அழித்துவிடவேண்டும். அம்முழியில் போதிய அளவு சுண்ணாம்பு (குழிக்கு 1-2 கிலோ) இடவேண்டும்.
0 Comments
Smart vivasayi